வெள்ளி, 14 ஜூன், 2024

வார்த்தைகள் கடவுளுடையவை!கவனமாக பயன்படுத்துவோம்! (15-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

     இன்றைய இறை வார்த்தையானது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. பொதுவாக ஒரு நாளில் ஒரு ஆண் இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட வார்த்தைகளையும் ஒரு பெண் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளையும் பேசுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட வார்த்தைகள் என்பதை குறித்து சிந்திக்கவும் நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் என்பதையும் இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் பேசுங்கள் என்ற அந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் திருப்பிப் பார்க்கிற போது, இன்று இந்த அகிலத்தில் இலவசமாக கிடைக்கின்ற வார்த்தைகளை வைத்து பல உறவுகளைப் பிரித்துக் கொண்டு போகின்ற போக்கானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

     ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் அடுத்தவரை ஊக்கமூட்டவும் அடுத்தவர் வாழ்வில் ஆறுதலையும் கொடுக்கக் கூடிய வார்த்தைகள் இத்தகைய வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றிக் கொண்டு ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...