வெள்ளி, 14 ஜூன், 2024

தம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்! (13-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தை கடவுளுக்கு காணிக்கை கொடுக்க வருவதற்கு முன்னதாக நம் இதயத்தில் இருக்கின்ற கோபங்களையும் அடுத்தவர் மீதான வெறுப்பையும் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவரின் வார்த்தைகளை ஆழமாக சிந்திக்க, அவரோடு உரையாட ஆலயத்திற்கு வருகின்ற நாம் அத்தனை பேரும், உள்ளத்தில் குற்றம் குறைகளை சுமந்தவர்களாக, மற்றவர் மீதான தவறான எண்ணங்களோடு இந்த ஆலயத்தில் ஒன்றிணைவதை தவிர்க்க வேண்டுமென இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகின்றார்.

     கடவுள் கொடுத்த இந்த அழகிய உலகத்தில் இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசு, நமது உடன்பிறப்புகள். இந்த உடன்பிறப்புகளோடு இணைந்து இறைவனுக்கு ஏற்ற வகையில், நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

     நம் உடன்பிறப்புகளோடு உறவு சிக்கல் இருக்கிறது என்றால், அதை சரி செய்து கொண்டு, ஆண்டவருக்கு உகந்தவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...