சனி, 1 ஜூன், 2024

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நாம் அத்தனை பேரும், பலனை எதிர்பாராது, கடவுளுக்கு உகந்த பணியினை முன்னெடுப்பவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். நாம் செய்கின்ற செயல்களில் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற மனநிலையோடு செய்யாமல், நாம் செய்வது அனைத்தும் இறைவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்தியவர்களாக, பலவிதமான அறப்பணிகளை முன்னெடுப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் மூலம் நாம் கேட்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...