ஞாயிறு, 16 ஜூன், 2024

எல்லா விதைகளையும் விட சிறியது எல்லா மரங்களையும் விட பெரியதாகிறது! (16-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இறைவனுடைய ஆட்சி இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆழமாக நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் கொண்டே பயணிக்கின்றோம். நமது வாழ்வில் இறையாட்சியை உருவாக்குகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு தருகின்றன. சாதாரண ஒரு விதை முளைத்து மரம் ஆகி அது பலருக்கும் பயன்பெறுகின்ற வகையில் தன்னை அர்ப்பணிப்பது போல, நீங்களும் நானும் நமது சின்னஞ்சிறிய செயல்கள் வழியாக பலரும் பயன் பெறுகின்ற வகையில் அர்ப்பண உணர்வோடு அடுத்தவர் வாழ்வில் ஏற்றம் பெறுகின்ற வகையில் நமது செயல்களை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். 

     விதை முளைத்து பல பறவைகள் வந்து தஞ்சம் புகுகிற அளவிற்கு பெரிய மரமாக மாறி பலருக்கும் பயன் தருவது போல நீங்களும் நானும் நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய நற்செயலின் வழியாக ஆண்டவரின் இறையாட்சியை இந்த அகிலத்தில் மலர்விப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இறைவன் கொடுக்கின்ற ஒவ்வொரு நாளிலுமே இயன்ற அளவிற்கு சின்னஞ்சிறிய நன்மைகளை தொடர்ந்து தடைகளுக்கு மத்தியிலும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் முன்னெடுப்பவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...