இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய இறைவார்த்தையானது கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த உலகப் போக்கின் படி பொன்னின் மீதும் பணத்தின் மீதும் நமது ஆசைகளை வளர்த்துக் கொள்ளாமல், ஆண்டவரின் வார்த்தைகளின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக, இந்த இயேசுவின் வார்த்தைகளை உடன் இருப்பவர்களுக்கும் உலகுக்கும் உரக்க அறிவிக்கின்ற பணியில் நாம் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள இன்றைய வார்த்தை அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரைப் பற்றிய அவரது நற்செயலை பற்றி அறிவிக்கச் செல்லுகின்ற நாம் அத்தனை பேரும் இந்த அகிலத்தில் ஆண்டவரின் துணையோடு இந்த இறைவார்த்தை பணியில் இணைந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம். பலவிதமான பணிகளுக்கு மத்தியில் பம்பரம் போல சுழலக் கூடிய நீங்களும் நானும் இன்றைய நாளில் காணக்கூடிய மனிதர்களிடத்தில் ஆண்டவரின் வார்த்தையை அறிவிப்போம். இந்த ஆண்டவரின் வார்த்தையை அறிவிப்பதால் நமக்கு கைமாறு கிடைக்கும் என்பதை எதிர்பாராமல் இந்த ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து, அடுத்தவர் வாழ்வு ஏற்றம் பெற, நீங்களும் நானும் இறை ஆட்சியை இம்மண்ணில் மலர்விக்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நாம் அறிந்த ஆண்டவரைப் பற்றி நம்மோடு இருப்பவர்களுக்கு அறிவிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக