வியாழன், 20 ஜூன், 2024

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்! (21-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             இன்றைய இறை வார்த்தைகள் மண்ணக செல்வத்தை நாடுபவர்களாக இருந்துவிடாமல் விண்ணக செல்வத்தை சேர்த்து வைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை நமக்கு கொடுக்கிறது. சமீபத்தில் நான் கேட்ட ஒரு வார்த்தை ஆசை யாரை விடும்? அது அனைவர் மனதிலும் வேரை விடும் என்பதாகும். ஆசைகளின் அடிப்படையில் ஆயிரக்கணக்கானவற்றை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று அகிலத்தில் பலரிடத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த செல்வத்தை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள கூடாது. மாறாக விண்ணக செல்வத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. விண்ணக செல்வம் என்பது செல்வம் என்பது எதை மையப்படுத்தியது என பார்க்கிறபோது, விண்ணக செல்வம் என்பது, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதன் அடிப்படையில் அவர் கொடுத்த இந்த அகிலத்தில் நாம் அருகில் இருக்கின்ற அனைத்து உறவுகளோடும் இணைந்து இன்புற்று வாழுவதை அது அடிப்படையாகக் கொண்டது.
 விண்ணக செல்வத்தை சேர்த்து வைப்பது என்பது நாம் வாழுகிற சமூகத்தில் நம் மத்தியில் இருக்கின்ற சக மனிதர்கள் மீது அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் தியாகத்தையும் அபரிவிதமாக பகிர்ந்து அனைத்து உறவுகளோடும் இன்புற்று வாழுவதே விண்ணக செல்வமாக பார்க்கப்படுகிறது. இந்த மண்ணக செல்வத்தின் அடிப்படையில் பணத்தின் மீதுகொண்ட மோகத்தின் அடிப்படையில் பணத்தை சேர்ப்பவர்கள் ஆக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக அன்பாலும் இரக்கத்தாலும் மன்னிப்பாலும் தியாகத்தாலும் ஆயிரக்கணக்கான உறவுகளை நமது உறவுகளாக பாவித்து, அவர்களோடு இணைந்து இறைவனுக்கு ஏற்ற வகையில் ஆயிரக்கணக்கான நன்மைத்தனங்களை முன்னெடுத்துச் செல்லுகின்ற விண்ணகச் செல்வத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். 

இந்த இறை வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக இறைவன் கொடுத்த இந்த இனிய நாளில் ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு அபரிவிதமான நன்மைகளை செய்து அவர்களை நாம் நமது உறவுகளாக பாவித்து தொடர்ந்து இயேசுவின் பாதையில் விண்ணக செல்வத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித பேதுரு பவுல் பெருவிழா! (29-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்று தாய் திரு அவையானது திருத்தூதரான பேதுருவையும் பவுலையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விட...