வெள்ளி, 14 ஜூன், 2024

அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்! (12-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவரின் வார்த்தைகளை நீங்களும் நானும் நமது வாழ்வில் இறுதி வரை பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவனுடைய வார்த்தைகளை நிறைவேற்றுபவராகத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்தார். எத்தனையோ இடர்பாடுகள் நெருக்கடிகள் வந்தபோதும் கூட, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற நபராக தன் வாழ்நாள் முழுவதும், கடவுள் விரும்புகின்ற காரியங்களை எடுத்துரைப்பவராகவும், தன் வாழ்வில் செய்பவருமாக இயேசு தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். இந்த இயேசுவை ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பின்பற்றுகின்ற நீங்களும் நானும், இந்த இயேசுவைப் போல வாழ வேண்டும். இந்த இயேசுவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடங்களை கற்றுக் கொண்டவர்களாக, நன்மைகளை மற்றவர்களுக்கு செய்து கொண்டே, கடவுள் விரும்புகின்ற மக்களாக ஆண்டவரின் வார்த்தைக்கு ஒவ்வொரு நாளும் செயல்வடிவம் கொடுக்கின்ற நபர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...