இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய இறை வார்த்தையானது நாம் அனைவருமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம். முதன்மையான கட்டளை எது என்ற கேள்விக்கு, கடவுளை நேசிப்பதும் மனிதனை நேசிப்பதும் என இறைவன் சுட்டிக்காட்டுகிறார். கடவுளையும் மனிதனையும் நேசிக்கின்ற நபர்களாக எந்தவிதமான முன்சார்பு எண்ணங்களும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல், கடவுளுக்கு உகந்த பாதையில் பயணம் செய்து சக மனிதர்களோடு இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நமது வாழ்வை நாம் நெறிப்படுத்தும் போது இறையாட்சிக்கு நாம் அருகாமையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இறையாட்சிக்கு அருகாமையில் பயணம் செய்ய நமது வாழ்வில் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் நாம் செய்த குற்றம் குறைகளை சரி செய்து கொண்டு மீண்டுமாக இறைவனோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை உருவாக்கிக் கொண்டு இறைவனின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக