இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னைச் சுற்றி, எப்படி தன்னை துன்பத்திற்கு உள்ளாக்கலாம்? எப்படி தன்னை அரசுக்கு எதிராக சித்தரிக்கலாம் என்ற மனநிலையோடு பயணித்தவர்களின் வாயடைக்கச் செய்த நாம் வாசிக்க கேட்கின்றோம். வரி செலுத்துவது முறையா இல்லையா என்ற கேள்வியை ஆண்டவர் இயேசுவின் இடத்தில் எழுப்பிய போது, சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகிறார்.
ஒரு விதத்தில் நாம் ஆண்டவரை இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திப்போமாயின், அறிவோடும், விவேகத்தோடும், ஞானத்தோடும், அவர் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு பதில் கொடுத்தவராக இருந்தார். அதே சமயம், இயேசு தன்னை சுற்றி இருக்கின்ற அனைத்தையும், அறிந்திருந்தால் என்பதன் அடையாளமாகத் தான் அன்றைய ஆட்சி பொறுப்பிலிருந்த சீசரின் பெயரை குறிப்பிட்டு, சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் எனச் சொல்லுகிறார்.
இந்த இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நாம் வாழுகிற இந்த சமூகத்தில்,கடவுளுக்கு நாம் கொடுக்க வேண்டிய நேரத்தை கடவுளுக்கு முழுமையாக கொடுக்கவும், நமது மனித வாழ்வில், முழுமையான மனிதர்களாக நாம் வாழவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக