வியாழன், 23 மே, 2024

இறைவன் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்! (24-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

   இன்றைய இறைவார்த்தையானது கணவன் மனைவிக்கான உறவை பற்றி நமக்கு இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாக இருந்து என் வாழ்நாள் முழுவதும் உன்னை மதிக்கவும் நேசிக்கவும் வாக்களிக்கிறேன் என்ற வார்த்தைப்பாட்டினை கடவுளுக்கு முன்னிலையில், அருள்பணியாளர்களை சாட்சியாக கண்டு, உறவுகளை சாட்சியாக கொண்டு, கொடுத்து இணைந்த ஒவ்வொரு தம்பதியினரும், 
தங்கள் வாழ்வில் வருகிற இடர்பாடுகளின் போதெல்லாம், தங்கள் கொடுத்த அந்த வாக்குறுதியின் அடிப்படையில் ஒருவர் ஒருவருக்கு அன்பை அதிகரித்துக் கொண்டு, விட்டுக் கொடுப்பவர்களாக, சகிப்புத் தன்மையோடு இணைந்து இந்த அகிலத்தில் வாழ வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். 

       இறைவனின் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்த ஒவ்வொருவருமே தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு உகந்த வாழ்வை தங்கள் வாழ்வாக அமைத்து கொண்டு இணைந்து பலவிதமான அறப்பணிகளை முன்னெடுப்பவர்களாக, இல்லற வாழ்வை அலங்கரித்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நமது வாழ்வுக்கான பாடமாக நாம் நமது இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். இந்த இறைவார்த்தை தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இனி வருகின்ற நாட்களில் எல்லாம் பின்பற்றுகின்ற மனிதர்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு, இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இறைவனுக்கு உகந்த குடும்பமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தியவர்களாக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...