ஞாயிறு, 9 ஜூன், 2024

எந்த அதிகாரத்தால் இவற்றை செய்கிறீர்? (1-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 
 இயேசு நன்மைகளை செய்த போது, அவரை சுற்றி இருந்தவர்கள் பலரும் எந்த அதிகாரத்தை கொண்டு இவற்றையெல்லாம் செய்கிறீர்?  உமக்கு அதிகாரம் வழங்கியவர்  யார்? என்ற கேள்விகளை எழுப்பி, அவரது பணி வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தார்கள். ஆனால் இயேசு அவர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காமல், தான் செய்ய விரும்பிய நன்மைகளை தொடர்ந்து செய்பவராகவே இயேசு தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 

    இந்த இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இன்றைய இறைவார்த்தை வழியாக இதயத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசுவின் திரு உடல்! திரு இரத்த பெருவிழா! (2-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று தாய்த்திரு அவையானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா என்பது கிறிஸ்தவர்கள் ஆகிய நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை குறித்து சிந்திப்பதற்காக அழைப்பு விடுகிறது. சாதாரண வெண்ணிற அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் அருள் பணியாளர் வசீகர வார்த்தைகள் சொல்லி செபிக்கிற போது, அது இயேசுவின் திருவுடலாகவும் திரு இரத்தமாகவும் மாறுகிறது. இந்த நம்பிக்கையில் நிலைத்திருப்பவர்களாக, அன்று கல்வாரியில் நமக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும் வண்ணமாகத்தான் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நாம் நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். 
  இன்றைய நாளில் இந்த நற்கருணை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகின்ற நாம் அத்தனை பேரும், எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் என்ற வார்த்தைகளின் அடிப்படையில், நம்மோடு இருப்பதற்காக இறைவன், தவிர்க்க முடியாத உணவாக, ஆன்ம உணவாக, நம் வாழ்வில் இடம் பெற்று இருக்கிறார். இந்த இறைவனோடு நேரம் செலவிட்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். 

   இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் மோசே வழியாக, கடவுள் கொடுத்த கட்டளைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக, அதற்கு செயல் வடிவம் தருகிறவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்தார்கள் என நாம் வாசிக்க கேட்கிறோம். 

   ஆண்டவர் இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்த நன்னாளில், நீங்களும் நானும் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கவும், நமக்காக தனது உடலையும் இரத்தத்தையும் தியாகம் செய்த இந்த இயேசுவின் தியாக மனப்பான்மையை நமது மனப்பான்மையாக மாற்றிக் கொண்டு, இணைந்து இவ்வகிலத்தில் பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நமது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவோம்! (3-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது நாம் ஒவ்வொருவருமே நமக்கு என்ன கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர செய்து மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தையானது நமக்கு அழைப்பு விடுக்கிறது.  

    திராட்சை தோட்ட உரிமையாளர் திராட்சை தோட்டத்தை பண்படுத்தி, அதை கூலி ஆட்களிடம் கொடுத்து மேற்பார்வையிட சொல்கிறார். ஆனால் மேற்பார்வையாளர்களோ அந்த உரிமையாளரிடமிருந்து அந்த நிலத்தை அவர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவருக்கு உரிய பங்கை அவருக்கு கொடுக்காமல், அந்த நிலத்தை அபகரித்துக் கொள்ள எண்ணுகிற போது, இத்தகைய மனிதர்களை அந்த தோட்ட உரிமையாளர் தோட்டத்தில் நிலையாக வைத்திருக்க விரும்ப மாட்டார் எனச் சொல்லுவதன் வாயிலாக, நீங்களும் நானும் இந்த அகலத்தில் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம் பலவிதமான பொறுப்புகளும் கடமைகளும் நமக்கு இந்த அகிலத்தில் இருக்கிறது. இந்த பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து நாம் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நம் பணிகளை செய்ய வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கைக்கு எதிராக நமது வாழ்வு அமையுமாயின், நாம் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவோம் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

 இறை வார்த்தை சுட்டிக்காட்டுகிற இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்திக் கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும், இயேசுவின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்! (4-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னைச் சுற்றி, எப்படி தன்னை துன்பத்திற்கு உள்ளாக்கலாம்? எப்படி தன்னை அரசுக்கு எதிராக சித்தரிக்கலாம் என்ற மனநிலையோடு பயணித்தவர்களின் வாயடைக்கச் செய்த நாம் வாசிக்க கேட்கின்றோம். வரி செலுத்துவது முறையா இல்லையா என்ற கேள்வியை ஆண்டவர் இயேசுவின் இடத்தில் எழுப்பிய போது, சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்த வேண்டும் என குறிப்பிடுகிறார். 

   ஒரு விதத்தில் நாம் ஆண்டவரை இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திப்போமாயின், அறிவோடும், விவேகத்தோடும், ஞானத்தோடும், அவர் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு பதில் கொடுத்தவராக இருந்தார். அதே சமயம், இயேசு தன்னை சுற்றி இருக்கின்ற அனைத்தையும், அறிந்திருந்தால் என்பதன் அடையாளமாகத் தான் அன்றைய ஆட்சி பொறுப்பிலிருந்த சீசரின் பெயரை குறிப்பிட்டு, சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் எனச் சொல்லுகிறார்.

     இந்த இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நாம் வாழுகிற இந்த சமூகத்தில்,கடவுளுக்கு நாம் கொடுக்க வேண்டிய நேரத்தை கடவுளுக்கு முழுமையாக கொடுக்கவும், நமது மனித வாழ்வில், முழுமையான மனிதர்களாக நாம் வாழவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்வோரின் கடவுள்! (5-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தில் சந்தேகங்களை கேட்பது போல இயேசுவின் வார்த்தைகளை வைத்து, அவர் மீது குற்றம் சாட்டலாம் என்ற மனநிலையோடு பலரும் அவரை சூழ்ந்து நின்றார்கள். இறப்புக்குப் பிறகாக எப்படிப்பட்ட வாழ்வு உண்டு என்பது குறித்து இயேசுவின் இடத்தில் கேள்வி எழுப்பிய போது, இயேசு அவர்களின் கேள்விக்கு அறிவு தெளிவோடு பதில்களை கொடுத்துவிட்டு, ஆண்டவராகிய கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் இருக்க வேண்டும். ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என முன்னோர்களின் வழித்தோன்றலாக, கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருந்த அந்த முன்னவர்களை சுட்டிக்காட்டி, அவர்களைப் போல நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளுகிற போது, ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ முடியும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் எடுத்துரைப்பதை நாம் வாசிக்க கேட்டோம். இந்த வார்த்தைகளை இதயத்திலிருந்து நமது வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்து, நாமும் நம்பிக்கையில் நாளும் வளர்ச்சி பெற இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம்.இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
 

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்! (6-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


 இன்றைய இறை வார்த்தையானது நாம் அனைவருமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க அழைக்கப்படுகிறோம். முதன்மையான கட்டளை எது என்ற கேள்விக்கு, கடவுளை நேசிப்பதும் மனிதனை நேசிப்பதும் என இறைவன் சுட்டிக்காட்டுகிறார். கடவுளையும் மனிதனையும் நேசிக்கின்ற நபர்களாக எந்தவிதமான முன்சார்பு எண்ணங்களும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல், கடவுளுக்கு உகந்த பாதையில் பயணம் செய்து சக மனிதர்களோடு இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டு நமது வாழ்வை நாம் நெறிப்படுத்தும் போது இறையாட்சிக்கு நாம் அருகாமையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இறையாட்சிக்கு அருகாமையில் பயணம் செய்ய நமது வாழ்வில் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் நாம் செய்த குற்றம் குறைகளை சரி செய்து கொண்டு மீண்டுமாக இறைவனோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை உருவாக்கிக் கொண்டு இறைவனின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசுவின் திரு இருதயப் பெருவிழா! (7-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

  இன்று தாய் திரு அவையானது இயேசு கிறிஸ்துவின் திரு இருதய பெருவிழாவினை கொண்டாடி மகிழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் திரு இருதயத்திலிருந்து எப்போதும் அன்பும், இரக்கமும், பரிவும், மன்னிப்பும், வெளிப்பட்டது. உயிர் போகும் நிலையிலும் கூட தன்னை அவர் இந்நிலைக்கு ஆளாக்கிய மனிதர்கள் மீது அன்பு கொண்டார். அவர்கள் மீது பறிவு கொண்டார். அதன் அடிப்படையில் கடவுள் அவர்களை மன்னித்தருள வேண்டுமென மனதார கடவுளிடம் அவர்களுக்காக மன்றாடினார். இந்த இயேசுவின் இருதய அன்பில் நிலைத்திருக்க நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம். நம் இதயங்களில் ஆண்டவரின் அன்பு குடி கொண்டிருக்கிறதா அல்லது பகைமை உணர்வும் வெறுப்பும் சுயநலமும் குடி கொண்டிருக்கிறதா என்பதை சீர்தூக்கி பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இயேசுவின் இதயமாக நமது இதயத்தையும் மாற்றிக் கொண்டு, அன்பை அகிலத்தில் உள்ள அனைவரோடும் பகிர்கின்ற மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

தூய கன்னி மரியாவின் மாசற்ற இருதய பெருவிழா! (8-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 மற்றவர்களின் பார்வைகளை புறம் தள்ளிவிட்டு, கடவுளின் பார்வைக்கு முதன்மையான இடம் கொடுத்தவர்களாக, நமது சொல்லையும் செயலையும் அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

   தன் பிழைப்புக்காக வைத்திருந்த தொகையைக் கூட கடவுளின் ஆலயத்தில் காணிக்கையாக கொடுத்துவிட்டு அடுத்த வேளைக்கு ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு ஏழை கைம்பெண்ணின் காணிக்கையை இயேசு அனைவரும் அறிந்து கொள்ளுகிற வகையில் சுட்டிக் காண்பிக்கின்றார். அந்த பெண்ணிடம் காணப்பட்ட ஆழமான நம்பிக்கையை நமது நம்பிக்கையாக நாம் மாற்றிக்கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் பரிசேயர் சரிசெய்யர்களை அமைத்துக் கொள்ளுகிறோம் அத்தகைய வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அனைத்து ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவாதையின் அடிப்படையில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...