வெள்ளி, 20 நவம்பர், 2020

நீங்கள் இயேசுவின் சகோதரர்களா? (21.11.2020)

நீங்கள் இயேசுவின் சகோதரர்களா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நற்செய்தி வாசகம் மற்றும் இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரது தாய் தேடுகிறார். அப்போது இயேசுவிடம் வந்த சிலர் கூறுகிறார்கள், உங்கள் தாயும் சகோதரர்களும் உங்களை தேடுகிறார்கள். உங்களைப் பார்ப்பதற்காக வெளியே காத்திருக்கிறார்கள்.  உடனே இயேசு கூறுகிறார், யார் என் தாய்?  யார் என் சகோதரர்கள்? என கேள்வி எழுப்பிய பிறகு அவரே கூறுகிறார், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார் எனக் குறிப்பிடுகிறார். யார் என் தாய் என்ற இக்கேள்வியை பல பிரிவினை சபையைச் சார்ந்த சகோதரர்கள் மரியாவை  இயேசு, யார் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே மரியாவை நாம்,  நினைவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்த அன்னை மரியாள் நம்முடைய திருஅவைக்கு தேவையற்ற ஒன்று என்று கூறிக்கொண்டு அன்னை மரியாவின் காரணம் காண்பித்து,  திருஅவையோடு உறவை முறித்துக் கொள்ளக்  கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் இந்த கேள்வியையும் இயேசுவினுடைய பதிலையும் இன்றைய நாளில் ஆழமாக ஆராய்ந்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். யார் என் தாய்?, யார் என் சகோதரர்?.  இயேசு தான் இந்த கேள்வியை எழுப்புகிறார். அவரே இந்த கேள்விக்கு பதிலையும் தருகிறார். விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும், சகோதரரும் சகோதரியும் ஆவார் என இயேசு குறிப்பிடுகிறார். விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்று சொல்லும்போது, அன்னை மரியாள் விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் இயேசு இங்கு விளக்கிக் கூறுகிறார். 

கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிடம் வந்து, அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்று கூறி இயேசுவின் பிறப்பை அறிவித்த போது, இது கடவுளின் திருவுளம் என்பதை உணர்ந்த அன்னை மரியாள் உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும் என கூறி விண்ணகத் தந்தையின் திருவுளத்திற்கு தன்னையே கையளித்து, அதனை நிறைவேற்றக்கூடிய பெண்மணியாக இச்சமூகத்தில் வலம் வருகிறார்.யூதச் சமூகத்தில் திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்று இருந்தால் அப்பெண்ணை கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மோசே கொடுத்த சட்டத்தை அப்படியே பின்பற்றி வந்த யூதர்களுக்கு  மத்தியில் மரியா ஒரு வீரப் பெண்ணாக, துணிச்சல் மிக்க பெண்ணாக, ஆண்டவரை மட்டுமே அடைக்கலமாக கொண்டு, அவர் மீது முழு நம்பிக்கை வைத்த வண்ணம், துன்பங்கள் பட்டாலும் பரவாயில்லை, விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது என் நோக்கம் என்பதை உணர்ந்தவராக இயேசுவை தன் வயிற்றில் சுமப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். விவிலியத்தில் எத்தனையோ பெண்களைப் பற்றி நாம் காணலாம். ஆனால்  இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியிலிருந்தே, அன்னைமரியா ஒரு வீரப் பெண்ணாக திகழ்ந்தாள்.  விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை செயலாக்கப்படுத்தி காட்டுகிறார். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தும் வண்ணமாகவே இறைவன் இயேசு நேரடியாகவும் மறைமுகமாகவும் யார் என் தாய்? என்ற கேள்வியை எழுப்பி, தன் தாய் எப்படிப்பட்டவர் என்பதை இங்கு விளக்கிக் கூறுகிறார். என் தாய் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்பதை நயமாக இங்கு தன்னுடைய சீடர்களுக்கு கூறுவதன் மூலம்,  சீடர்களுக்கும் அங்கு சூழ்ந்திருந்தவர்களுக்கும் நீங்களும் என் தாயைப் போல விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தால் நீங்களும் என் சகோதரர்களும் சகோதரிகளுமாக மாறுவீர்கள் என்ற செய்தியை அவர்களுக்கு வழங்குகிறார். இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நம்முடைய செயல்கள் அனைத்தும் நல்ல செயல்களாக இருக்கின்றனவா? நாம் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்ப்போம்.  நாம் அனைவரும் விண்ணகத் தந்தையின் திருவுளமான அடுத்தவரை அன்பு செய்வது, அடுத்தவர் மீது இரக்கம் காட்டுவது அடுத்தவரின் துன்பத்தில் அவரோடு துணை நிற்பது, அடுத்தவருக்கு நம்மாலான உதவிகளை செய்வது என,  சின்னஞ்சிறு செயல்கள் மூலம் சின்னஞ் சிறிய அன்பு செயல்கள் மூலம் நாம் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை இந்த மண்ணுலகில் நிறைவேற்றக் கூடியவர்களாக உருமாறிட இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய அன்னை மரியாவை திருஅவையின் பாதுகாவலியாக கொண்டிருக்கக்கூடிய நாம் அனைவரும் அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, இயேசுவின் உண்மையான சகோதர சகோதரிகளாக  மாறிட இன்றைய நாளில் முயலுவோம். இதற்கான அருளை நாம் இறைவனிடத்தில் வேண்டுவோம். வேண்டுவது மட்டுமே என்றும் தீர்வாகாது. நமது வேண்டுதல்கள் நமது செயலில் வெளிப்பட வேண்டும். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக நமது செயல்கள் அமைந்திட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இயேசுவின் சகோதரர்களாக மாறிட புறப்படுவோம்.

வியாழன், 19 நவம்பர், 2020

இனிக்குமா! கசக்குமா! ( 20.11.2020)

இனிக்குமா! கசக்குமா! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாளில்  வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் சுருளேட்டை எடுத்து உண்ணுமாறு யோவானுக்கு பணிக்கப்படுகிறது. வாயில் அது இனிப்பாகவும் வயிற்றில் கசப்பாகவும் இருந்தது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவும் எருசலேம் தேவாலயத்திற்குச் சென்று அங்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார்.  இயேசுவின் செயலை கண்டு அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு கூட்டம் அவரை கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தது. 

 இன்றைய நாளில் நாம் நமது வாழ்க்கையில் தவறான காரியங்களில் ஈடுபடும் போது இறைவன் பல மனிதர்கள் மூலமாக நம்மிடையே வந்து நமது செயல்பாடுகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்டும் போது அதை 
நாம் ஏற்றுக் கொள்கிறோமா? அல்லது 
அதனை நியாயப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறோமா? 
அல்லது 
மறுக்கக் கூடியவர்களாக இருக்கிறோமா? 

என்று சிந்திப்போம். 

இன்று பெரும்பாலும் மனிதர்கள் தாங்கள் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கடவுள் தவறுகளை நியாயப்படுத்துவதை விரும்புவதில்லை. ஆனால் தவறு என தெரிந்த போது அதை திருத்திக் கொள்வதற்கு நம்மை அழைக்கிறார்.  எருசலேம் தேவாலயத்தில் சென்று அவர் அங்கு சாட்டையை சுழற்றிய போது ஏழை எளிய மக்கள் நசுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது. ஆனாலும் இயேசுவின் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், நேர்மையற்ற செயலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். எனவே இயேசுவை எப்படி அழிக்கலாம் என வழி தேடினார்கள். இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக யாரொருவர் நீதியை நிலைநாட்ட விரும்புகிறாரோ அவரை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  நமது வாழ்விலும் பல நேரங்களில் தவறிழைக்கும் போது நமது தவறுகளை சுட்டிக் காட்டக்கூடிய நபர்களை நாம் நல்லமுறையில் பார்க்கின்றோமா? அல்லது அவர்களை எதிரிகளாக பார்த்து அவர்களை எப்படி பழிவாங்கலாம்?அல்லது எப்படி அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கலாம் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றோமா? என்ற கேள்விகளை எழுப்பி பார்ப்போம். அடுத்தவர் நமது செயல்களில் குறை இருப்பதை கூறும் போது அதை சரி செய்து கொள்வதற்கு முன் வரக்கூடிய மனநிலையோடு நம்மிடம் இருக்கிறதா? 
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று 

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, இனிய சொற்களை மட்டுமே நாம் எப்போதும் விரும்புகிறோம். நம்மை நியாயப்படுத்தக் கூடிய நம்மைப் பாராட்டக் கூடிய நல்ல செயல்களை மட்டுமே விரும்புகிறோம். பாராட்டுகளை விரும்பக்கூடிய நாம் நம்மிடையே இருக்கும் குற்றங்களை சுட்டிக் காட்டும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, நமது வாழ்வில் நல்ல விதமான மாற்றத்தை உருவாக்க கூடியவர்களாக ஒரு மாறு இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார். அடுத்தவரின் வார்த்தைகள் இனிக்கிறதா கசக்கிறதா என ஆராய்வதை விட கொடுக்கக் கூடிய வார்த்தைகள் நமது வாழ்க்கை மாற்றத்திற்கு உதவும் என்றால், அதனை நல்ல வார்த்தைகளாக எண்ணி அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யோவானைப் போல அதனை உட்கொள்ள வேண்டும்.
 நல்ல விதமான மாற்றத்தை நமது வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு அழைக்கிறார்.  இயேசுவின் பயணத்தில் நாமும் உடன் பயணிப்போம்.

புதன், 18 நவம்பர், 2020

சிறுமை கண்டு பொங்குவாய்! (19.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 சிறுமை கண்டு பொங்குவாய்!
 என்ற பாரதியாரின் வாய்மொழிக்கு ஏற்ப இன்றைய நாளில் இன்றைய வாசகங்கள் நம்மை சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கின்றன.

 இன்றைய முதல் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்ப்பட்டதாகும். இதில் ஏழு முத்திரைகள்  பொறிக்கப்பெற்று  மூடியிருந்த ஏட்டை எடுத்துப் பிரித்து, படிக்க தகுதியானவர்கள் யாரும் இல்லை என்ற செய்தியானது திருவெளிப்பாட்டு நூலிலிருந்து வழங்கப்படுகிறது.  சுருளேட்டைப் பிரித்துப் படிக்க தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லை என யோவான் தேம்பி அழுததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இறுதியில் ஆட்டுக்குட்டியாகிய மெசியா அந்த சுருளேட்டை எடுத்துப் படித்தார், என்றவாறு இன்றைய முதல் வாசகம் அமைகிறது.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட எருசலேம் ஆலயத்தை இறைவன் சாடுகிறார். உன்னை தேடி வந்த காலத்தை நீ அதை அறிந்து கொள்ளவில்லை என எருசலேம் ஆலயத்தை சாடுவது போன்ற இறைவார்த்தைப் பகுதியானது இன்றைய நாளில் நம்முடைய சிந்தனைக்கு தரப்பட்டிருக்கிறது. 

இன்றைய வாசகங்கள் மையப்படுத்த கூடிய செய்தி பாரதியாரின் வார்த்தைகளான சிறுமையை கண்டு பொங்கு என்பதாக உணர்கிறேன். 

ஒரு மகான் ஒருவரை பார்ப்பதற்காக ஒரு இளைஞன் வந்தான். வருகிற வழியில் யாரோ ஒருவருடன் அவனுக்கு தகராறு ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்துக்கு சென்றான். வந்த வேகத்தில் காலில் இருந்த செருப்பை கழட்டி கோபமாக ஒரு மூலையில் எறிந்தான். கதவை வேகமாக சாத்தினான். பிறகு உள்ளே வந்து பெரியவரான அந்த மகானுக்கு வணக்கம் சொன்னான். அப்போது அந்த மகான் சொன்னார்,  தம்பி உன் வணக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் செருப்பிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா என்றார். உடனே அந்த இளைஞன்,  உயிரிழந்த பொருட்களிடத்தில் எப்படி மன்னிப்புக் கேட்பது? என்றான். உடனே மகான் கூறினார்,  அதெப்படி!  அந்த செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்து தானே உன் கோபத்தை அவற்றிடம் காட்டினாய். மன்னிப்பு கேட்பதற்கு மட்டும் உயிர் அற்றதாகிவிடுமா? என்றார். மகானின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப் போன அவன்,  மகான் கண்டிப்பாக இதைச் செய்தாக வேண்டும் எனக் கூறியதால், கதவிடமும், செருப்பிடமும் மன்னிப்புக் கேட்டான். அப்போது அவனுக்குள் இருந்த கோபம் சற்று அடங்கியது. நம்முடைய கோபத்திற்கான முதல் காரணம் நாமாகத்தான் இருக்கிறோம்!  நம்முடைய கோபத்திற்கு முக்கிய பங்கு நம்மிடம்தான் உள்ளது. இதை உணர்ந்தாலே கோபம் அடங்கும், என்று மகான் அவனுக்கு விளக்கினார். 

ஆனால் கோபத்தை எல்லா தருணங்களிலும் அடக்குவது சாபமாகும். 
பொய்மையை காணும் போது கோபம் வேண்டும். 
தீமை எதிர்ப்படும்போது கோபம் வேண்டும். 
அநீதி அரசாளும் போது கோபம் வேண்டும். 
எருசலேம் ஆலயமானது கள்வர் குகை ஆனபோது, 
இயேசுவுக்கு கோபம் வந்தது. கைக்கு சாட்டை வந்தது. 
அதனால் ஊழலுக்கு முடிவுக்கு வந்தது அன்று.  
எனவே தான் பாரதியாரும் கூறுகிறார், சிறுமை கண்டு பொங்குவாய் என்று.  

இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை தேடி இவ்வுலகத்திற்கு வருகிறார் என்றால், நாம் எத்தகைய தன்மை கொண்டவர்களாக இருக்க போகிறோம்? சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை கண்டும் காணாதவர்கள் போல செல்லப் போகிறோமா? அல்லது நம்மைத்  தீண்டாதவரை எதுவும் தவறில்லை என்ற எண்ணத்தோடு அடுத்தவரின் துன்பத்தை கண்டும் காணாதவர்களாக பயணிக்கப் போகிறோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள் எழுப்பி பார்ப்போம்.  
இன்றைய முதல் வாசகத்தில் கூட சுருளேட்டை எடுத்து படிக்க தகுதி பெற்ற ஒருவரையும் காணவில்லை என யோவான் அழுதார் என  கூறப்படுவது போல இன்றைய நாளில் இறைவன் இச்சமூகத்தில் நம்மிடையே  வலம் வருகிறார் என்றால் நம்முடைய செயல்கள் சுருளேட்டை  எடுத்து படிக்க கூடிய தகுதி பெற்ற நிலையில் இருக்கிறதா?  அதாவது சமூகத்தின் அவலங்களைைைக்க கண்டு அதனை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியவர்களாகவும் அந்த அவல நிலையை மாற்றக் கூடியவர்களாகவும் நாம் இருப்போமா? என்று கேள்வி எழுப்பிப் பார்ப்போம். எருசலேம் தேவாலயத்தை தேடிச் சென்ற போது எருசலேம் தேவாலயத்தில் பலவிதமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. எருசலேம் தேவாலயத்தில் கூட மக்கள் ஒடுக்கப்படுகின்றன சூழல்  இருந்தது.  இச்சூழலை எல்லாம் கண்டு தான் இறைவன், உன்னை  கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி செய்வேன் என்று கூறுகிறார். ஏனெனில் கடவுள் உன்னை தேடி வந்த காலத்தில் அதனை நீ அறிந்து கொள்ளவில்லை என்ற வார்த்தைகளின் வழியாக இயேசு கூறுகிறார். இன்று இந்த சமூகத்தில் நம்மிடையே இருக்கக்கூடிய மக்கள் துன்புறுகிறார்கள் என்றால், அவர்களின் துன்பத்தைத் துடைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த சமூகத்தில் அநீதி தழைத்தோங்கி விளங்குகிறது என்றால், அந்த அநீதிக்கு எதிராக குரல்  கொடுக்கக் கூடியவர்களாக  நாம் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்போமாயின் இறைவன் நம்மைத் தேடி வரும் பொழுது நம்மை கண்டு மகிழுவார்.   மாறாக நாம் அநீதிகளை   கண்டு ஒதுங்கிச் செல்பவர்களாகவும் அடுத்தவரின் துயரம் கண்டு பரிதாபப்பட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகரக் கூடியவர்களாகவும் இருப்போம் என்றால் கண்டிப்பாக இறைவன் எருசலேம் ஆலயத்தை பார்த்து  கூறியது போல நம்மை பார்த்து கூறுவார், உன்னை தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை என்று. ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நம்மோடு பயணிக்கிறார். அவரை உணர்ந்து கொள்வோம். அவர் நம்மோடு இருக்கிறார் என்ற துணிவோடு துணிச்சலோடு சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அநீதிகளையும் எதிர்த்து குரல் கொடுப்போம். நம்மிடையே வாழும் சக மனிதர்களின் துன்பத்தைக் கண்டு பரிதாபப்படுவதைவிட அத்துன்பத்தை அவர்கள் வாழ்விலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இன்று  இதுவே இறைவன் விரும்பக் கூடியதாகும். இத்தகைய பணியினைச் செய்ய நாம் இயேசுவின் சீடர்கள் என்ற உணர்வோடு இன்றைய நாளில், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை, மகிழ்வோடும் நேர்மறையான எண்ணத்தோடும் சிறப்பான நல்ல செயல்களை நாம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடும் வாழ்க்கையைத் தொடர்வோம்.

J. Sahaya Raj

J. Sahaya Raj / Sahaya Raj J / Sahayaraj /Sahaya Raj /sahayaraj /All Be United /All be united /all be united

Native : Ammapattai

District : Trichy

St. Joseph's Chairman (2010 - 2013)

Studying Priesthood


செவ்வாய், 17 நவம்பர், 2020

வாருங்கள் பயணம் செய்வோம்! (18.11.2020)

வாருங்கள் பயணம் செய்வோம்!


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 
ஒரு மனிதன் தன் கையில் இரண்டு குடங்களை வைத்திருந்தான். இரண்டு குடங்களை பயன்படுத்தி தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு வருவது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தான். ஒரு நாள் அவரது கையில் இருக்கக்கூடிய ஒரு குடம் அவனிடத்தில் பேசத் தொடங்கியது. அந்த குடம் அவனிடத்தில் சொன்னது, நான் உங்களுடைய கையில் இருக்கிறேன். ஆனால் என்னிடம் சிறிய அளவு ஒரு துளையானது இருக்கிறது. அந்தத் துளையின் காரணமாக நீங்கள் கடினப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது பாதி நீரானது வெளியேறிவிடுகிறது. எனவே உங்களுடைய உழைப்புக்கான முழுமையான பலனை நீங்கள் அடைய முடியாமல் போகிறது. ஆனால் மறுபுறமோ முழுமையாக தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்து இருக்கிறது, என்று கூறி வருத்தப்பட்டது. ஆனால் அந்த நபர் அந்த குடத்தை பார்த்து, உன்னிடம் இருக்கக்கூடிய சிறு துளையை நான் என்றோ கவனித்துவிட்டேன். இருந்த போதும் நான் உன்னை அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். காரணம் நான் நாளை தண்ணீர் எடுத்துச் செல்ல உன்னை பயன்படுத்தும் போது நீ வரக்கூடிய பகுதிகளை உற்று நோக்கு, என்று கூறினார். அந்த குடமும் உற்று நோக்கியது. அப்போது அந்த ஓட்டை குடம் இருக்கக் கூடிய பகுதி மிகவும் வளமையாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பகுதி வளமையற்று இருந்தது. அப்போது அந்த குடம் அவனிடத்தில் எப்படி இது? என்று கேட்டதற்கு, அந்த நபர் கூறினார், உன்னுடைய ஓட்டைக் குடத்தில் இருந்து விழக்கூடிய நீர் படக்கூடிய இடங்களில் நான் சிறிய விதைகளை தூவினேன். அந்த விதைகள் எல்லாம் வளர்ந்து இன்று நிறைய பூக்களை தருகின்றன. அந்த பூக்களை கொண்டு தான் நான் அனுதினமும் ஆலயத்தில் வழிபாடு செய்து வருகிறேன் என்று கூறினார். 

 இன்றைய முதல் வாசகமும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு தரக்கூடிய செய்தி, வாருங்கள் பயணம் செய்வோம் என்பதாகும்.

 இன்றைய முதல் வாசகத்தில் பவுல் நற்செய்தி பணியாற்றுவதற்காக அவர் இருந்த இடத்தில் இருந்து பல இடங்களுக்கு கடல்வழிப் பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தின்போது அவர் சந்தித்த இன்னல்களையும் அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பதனையும் பற்றியதாக இன்றைய முதல் வாசகம் அமைந்திருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நற்செய்தி பணியாற்றுவதற்காக மற்றொரு ஊருக்கு செல்கின்றார். பயணங்கள் எப்போதும் சுகமாக இருப்பது இல்லை. பயணங்கள் பல விதமான பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. நாம் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போது அந்த பயணத்திற்கு என ஒரு நோக்கம் இருக்கும், ஒரு இலக்கு இருக்கும். அதற்கு ஒரு காரணம் இருக்கும். 

மேற்கூறப்பட்ட கதையில் நாம் காணும் குடத்தைப் போல நாம் நிறைவான பாத்திரங்களாக இருந்தாலும், குறைவான பாத்திரங்களாக இருந்தாலும், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் கருவிகளாக, அவரது பணியை செய்யக்கூடியவர்களாக வாழ்ந்திட இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 
            குறையோடு இருந்த குடம் தன் நிலையை நினைத்து வருந்தியது போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற பேதுருவும் தன்னை சூழ்ந்திருக்கும் எதிர்மறையான காற்று வீசுகின்ற சூழலைக் கண்டு அஞ்சியவராக கடலுக்குள் மூழ்குவதை நாம் பார்க்கின்றோம். 

துளை கொண்ட குடத்தின் தண்ணீரால் செடிகள் வளர்த்து மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை ஆக்கிய அந்த மனிதனைப் போல இறைவனும் நமது வாழ்வில் ஏற்படுகின்ற தடைகளை ஏற்ற இறக்கங்களை ஏமாற்றங்களை அவரது பணியின் படிகளாக மாற்றுவார் என்பதை புனித பவுலின் கடல் பயணத்தின் துன்பங்கள் வழியாக, தனித்து விடப்பட்ட சூழலிலும் அவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நாம் அறிந்து கொள்கின்றோம்.
          மனிதனின் எண்ணங்களை விட இறைவனின் எண்ணங்களை உயர்ந்தவை உன்னதமானவை என்பதை ஆண்டவர் இயேசு புனித பேதுருவிடம் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்து வெளிவரும் அனுபவத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார்.
                  இயேசு தந்தையோடு இணைந்து ஜெபித்து அதன் வழியாக இறை வல்லமையை இறை ஞானத்தை பெற்றுக் கொள்கின்றார்.  நமது நற்செய்தி பணி வாழ்வில் நமக்கு அடித்தளமாக இருப்பது ஜெபம். ஜெபம் ஒருவருக்கு ஆற்றலை தருகின்றது. அளவற்ற ஞானத்தை தருகின்றது. நாம் முன்னெடுக்க வேண்டிய காரியங்களை நமக்கு சுட்டிக் காட்டி வழி நடத்துகின்றது என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து கொள்வோம்.

 இயேசுவைப்போல இறை அருளோடும் இறை ஞானத்தோடும் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் இந்த மண்ணகத்தில் இருந்து நாம் விண்ணகம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தில்  நல்ல ஒரு பணியை செய்து கொண்டு செல்ல கூடியவர்களாக நாம் இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஒரு பேருந்தில் ஏறுகிறோம். நாம் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம்.  ஆனால் அவர்களிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம் அவர்களிடம் நாம் எத்தகைய நல்ல வார்த்தைகளை உற்சாகமூட்டும் எண்ணங்களை  விதைத்து விட்டுச் செல்கிறோம் என சிந்திப்போம்.  

இன்றைய நாளில், நாம் நமது வாழ்வில்,  பவுலைப் போலவும் இயேசுவைப் போலவும், நற்செய்தியை செய்ய, நலமான நல்ல காரியங்களைச் செய்வதற்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்று இயேசுவின் பின்னால் பயணம் செய்வோம்.

திங்கள், 16 நவம்பர், 2020

மனம் மாறு நீ விழிப்பாயிரு! (17.11.2020)

மனம் மாறு நீ விழிப்பாயிரு!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய முதல் வாசகமானது நாம் எப்படி வாழவேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்பிக்கிறது. இயேசு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக மனம் மாறவும் விழிப்பாக இருக்கவும் நம்மை அழைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சக்கேயுவை சந்திக்கிறார். இந்த சக்கேயு சமூகத்தால் பாவி என கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு மனிதன். இவரோடு அங்கிருந்தவர்கள் உறவு கொள்வதில்லை. காரணம், இவர் வரி வசூலிக்க கூடிய பணியைச் செய்கிறார். வரி வசூலிப்பவர்கள் மக்களிடம் அதிகமான பணத்தினை வசூலித்து அரசுக்கு சார்பாக இருப்பார்களே தவிர மக்களுக்கு சார்பாக இருக்க மாட்டார்கள். எனவே மக்கள் சார்பாக இல்லாத இவரை மக்கள் வெறுத்தனர். ஆனால் மக்களால் வெறுக்கப்படக்கூடிய ஒரு நபரை ஆண்டவர் இயேசு தேடிச் சென்றார். அவரும் ஆண்டவர் இயேசுவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாக சக்கேயு, இயேசுவை காண்பதற்காக ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து இருந்தார். சக்கேயுவைப் பார்த்து இயேசு வா!  இன்று நான் உன் வீட்டில் விருந்துண்ண போகிறேன் என்று கூறி  சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். பொதுவாகக் கூறுவார்கள், நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி 99 அடிகள் எடுத்து வைப்பார் என்று. அதுபோலத்தான் நமது வாழ்விலும். நல்ல செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் ஒன்றை துவங்கினால் கண்டிப்பாக  அச்செயலைச் செய்து முடிப்பதற்கு தேவையான அனைத்தையும் கடவுள் பல நல்ல மனிதர்கள் வழியாக உதவுவார் என்று கூறுவார்கள். அது போலவேதான் இயேசுவைக் காணவேண்டும் என்ற சக்கேயுவின் விருப்பம் அவரை மரத்தின் மீது ஏறி அமர்ந்து இயேசுவை பார்க்கத் தூண்டியது.  சக்கேயுவின் ஆர்வத்தையும், அவருடைய தேடலையும் கண்டுகொண்ட இயேசு, அவரை அழைத்து, அவரோடு சென்று அவர் வீட்டில் அமர்ந்து உணவு உண்டார்.  சக்கேயுவுடன் இயேசு வீட்டிற்குச் சென்ற போது,  சமூகத்தில் இருந்த பலரும் பாவிகளோடு இவர் சேருகிறாரே!  பாவியின் வீட்டில் உணவருந்த செல்கிறாரே, என்று இயேசுவை வியப்போடு பார்த்தார்கள். ஆனால் இயேசு எதற்கும் அஞ்சாது,  எதையும் காதில் கொள்ளாது மீட்கப்பட வேண்டியவர் சக்கேயு என்பதை உணர்ந்தவராய் அவரைத் தேடிச் சென்றார். அவர் வீட்டிற்கு சென்று அவரோடு அமர்ந்து உணவு உண்டார். பெரிய அளவிற்கு சக்கேயுவிடம் இயேசு மனமாற்றத்தை பற்றி பேசினார் என விவிலியம் கூறவில்லை. ஆனால் இயேசுவை விட சக்கேயு தான் பேசப் போகிறார் என்று சொல்லுகிறார். சக்கேயு தாமாக இயேசுவிடம் இவ்வாறு சொல்கிறார்.  நான் பாவி. மக்களிடமிருந்து நான் அதிகமாக வரி வசூலித்திருந்தால் வாங்கியதை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். இயேசு இறுதியாக அவரை பார்த்து இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்று கூறி, சக்கேயுவைத் தேற்றுகிறார்.

 இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் யாரேனும் ஒருவர் தவறு செய்கிறார்கள் என்றால் தவறிழைக்கக் கூடியவர்களை நாம் நாடிச் செல்வதில்லை. அவர்கள் தவறானவர்கள் என்று கூறி ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் நாம் ஒதுங்கி கொள்வதற்காக இவ்வுலகில் படைக்கப்படவில்லை. தவறக்கூடிய மனிதன் நம்முடன் இருக்கக்கூடிய ஒரு சகோதர சகோதரியே என்பதை உணர்ந்தவர்களாக,  அவர்களும் மீட்படைய வேண்டும். நலமான வாழ்க்கையை அவர்கள் பரிசாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு,  அவர்களை சந்திக்கவும் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.  அவ்வாறு செய்யாது நாம் அவர்கள் தவறும் போது அதை கண்டும் காணாமல் செல்லக் கூடியவர்களாக இருந்தால், கண்டிப்பாக இயேசுவின் விழுமியங்களின்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக நாம் இருக்க முடியாது. பல நேரங்களில் நமது வாழ்வில் நாம் அத்தகைய தவறுகளை செய்து இருந்தால்,  இன்றைய நாளில் அவற்றை எல்லாம் எண்ணிப் பார்ப்போம். மனமாற்றம் பெற்றுக் கொள்வோம்.  நமது கதவருகே நின்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று தட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது நமது மனக் கதவின் முன்பாக நின்று.  உன் அருகில் இருக்கக்கூடிய உன் சகோதர சகோதரியை,  பாவி, குற்றமற்றவன், நேர்மையற்றவன்,  அவன் தவறிழைப்பவன், என்றெல்லாம் கூறி அவனை விட்டு ஒதுங்கி நிற்காதே. அவன் மனமாற்றம் பெற நீ அவனுக்கு உதவி செய் என்று  கூறிய வண்ணமாக இயேசு நமது கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் குரலுக்கு செவி கொடுத்து கதவை திறந்தால், அவர் நம்மோடு வந்து நம் மகிழ்வில் பங்கெடுப்பார். ஆண்டவர் இயேசு நம் மகிழ்வில் பங்கெடுக்க வேண்டுமாயின், நமது உள்ளத்தில் மாற்றத்தை உருவாக்கி அந்த மாற்றத்தை நமது செயலில் வெளிக்காட்ட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

ஞாயிறு, 15 நவம்பர், 2020

PASTORAL CARE TO THE WORKERS OF OUR PARISH

 

PASTORAL CARE TO THE WORKERS OF OUR PARISH


 

Introduction

            Work is one of the basic elements of being a full man. Each and every human being in the world one way or other, he or she is supposed to work, because work is the money minting factor. Without work nobody can live in this world. Moreover the work differs from person to person. Some people work that may depend on their knowledge and experience. There are different modes of work as well as categories of work. In this paper, I would like to focus on the physical laborers who work very hard. The purpose I have selected these workers is they don’t have an organization as such and they are like scattered people. It is the current need that they must be given awareness; the rights must be properly respected. The government schemes must be properly informed to these people.

            Basically I have more interest in the ministry of workers because my regency time provided me such an interest. I have the little experience of working for the palm tree workers, salt workers and fishermen. My regency boss introduced all these kinds of ministry to me, really that too paved the way for increasing a sort of interest to design the pastoral plan for the workers. So my paper consists of three major parts. The first part will fully deal about the workers with biblical background and church position towards the workers and social teaching about the workers. The second part will talk about the empowerment of the workers in general (may be Tamilnadu level or diocese level). The final part puts forth my pastoral plan for my own future parish workers.

1. Workers in the Bible, Church Position and Social Teaching about the Workers

            Work and workers are not recently emerged concept; rather it has got its own historicity. Because when a human being is born in the world, one of the basic obligations or rights is to work or being workers. So, bible also contributes much about the work and workers and church has its own position towards the work and workers. In addition to that, social teaching also speaks in favor of the workers and their rights.

1.1  Work/ Workers in the Bible

We believe that God created this beautiful world. The creation itself automatically says God works well. The first six days he worked hard, therefore now we enjoy in this beautiful world. It is clearly seen in  Gen2:2 “And on the seventh day God finished the work that he had done and he rested on the seventh day form all the work that he had done.” It is obvious that our creator himself is a very hard worker. We see in the story of Cain and Abel, Abel’s offering is accepted by God. It shows that the hard work will always come out with positive and good result. And also the hard work of Abel is represented in this incident.

The salvation history also beautifully enumerated the pain of the physical laborers. Their enslavement, hard living, unjust wages and harassment given by the owners are well projected in the event of people working in Egypt. There we see Moses as a prophet and social worker who worked for the betterment of the people. I believe that today’s pastors particularly me are called for this cause to work as like as Moses.

It is well evident that Jesus also followed the working principle of God and he played the prophetic attitude of Moses in his own life. Jesus was not an idol or lazy man rather who gave his physical labor. He learned the work from his father St.Joseph and worked with him. It was not an easy work rather hard work. He involved in it with full interest. During his ministry time it is well understood that he gave more importance to the workers. He gave his company to the working class community. All his disciples were from the working class people. His parables and teachings were filled with an importance of work. The parables, he used were more related to agriculture work and fishing. These work need more physical contribution or physical labor. It represents the interest of Jesus towards the working class community or group.

Jesus’ teachings were accurately lived in the early church period. People were more enthusiastic in following the footsteps of Jesus Christ. They worked hard for the good of them as well as others. One of the disciples of Jesus is St.Paul who beautifully says “Any one unwilling to work should not eat.” (2Thes3:10). It conveys the message that the work is very important in the lives of human beings.

In today’s world, the people who involved in the work must be respected with full human dignity. The church also contributed its ideologies for the welfare of the workers.

1.2  Church’s Position towards  the Workers

Rerum Novarum is the prophetic message given by the church to care for the workers. Pope Leo XIII placed this encyclical which contributes the pastoral concern against the exploitation of workers. “Rerum Novarum is above all a heartfelt defense of the inalienable dignity of workers, connected with the importance of the right to property, the principle of cooperation among the social classes, the rights of the weak and the poor, the obligation of workers and employers and the right to form associations.”

Work is a fundamental right and a good for mankind, a useful good, worthy of man because it is an appropriate way for him to give expression to and enhance his human dignity. The church teaches the value of work not only because it is always something that belongs to the person but also because of its nature as something necessary. The church says some of the rights that are the dignity of the workers must be respected, the right to fair remuneration and income distribution, the right to strike, the right to start labor union.

1.3  Social Teaching about the Workers

Human Rights Declaration beautifully presents four points about the rights of the workers and the rights of the union.

1.      Everybody has got the right to work and the right to select the work and the right to claim place for work

2.      Workers have the right to claim the wage for their work. No discrimination should be shown in distributing wages

3.      Every worker must be given decent wage that has to fulfill the needs of the family. He/She has the right to have social safety

4.      Workers have the right to start workers union as well as to be the member of  union

2.  Empowerment of the Workers in General

            Right from the beginning, we see the work and workers are given more importance. Especially the church has got greater concern towards these working class people. In today’s world the church has the responsibility to empower the workers. Let me give some tips

v  Today’s church is functioning with the financial help of the working class community alone. The church needs to have this in mind and work for them

v  The papacy may have the department for the labors, but it has to ensure that the ministry for the workers is done in every nook and corner of the world.

v  Especially, Indian church fully depends on these working people. It has to work for the betterment for these workers.

v  Indian church must prepare the statistics of physical labors in India alone. The accurate data of the catholic physical labors must be produced.

v  National seminar for the workers can be conducted once in a year.

v  National labor commission can make a good contact with the companies run by the catholic people, through which the commission can provide jobs for the Catholics.

v  Once in three months, a report from the diocesan labor commission should be submitted. That has to be made as mandatory to all the dioceses.

v  National labor commission is supposed to strengthen the network with the various workers union for the nation.

v  Each diocese has to gather the workers of the diocese in vicariate level and insists the importance of the unity of the workers and makes them as union.

v  Diocesan level and vicariate level seminar must be conducted for the workers. The obligations and rights of the workers have to be insisted in it.

3. Pastoral Care for the Workers in my Future Parish

Ø  A chart will be prepared in which I have the entry of the work of each and every parishnors and place of the work too.

Ø  I will categorize the people according to the work they involve and make them as group or associations. For example, fisher men association, salt workers associations and palmera workers associations.

Ø  Once in a month I will conduct meeting for these people. I make them cultivate the habit of savings. I will ensure that every association has the bank account.

Ø  It is easy for the associations to get the loans from the bank in order to develop the work which they do. I will work for it.

Ø  The rights and obligations of the workers will be well informed. Only then they can have a proper working condition at their work.

Ø  I will make sure that the government schemes reach the workers especially, scholarship, insurance and supportive fund for the welfare of the workers.

Ø  I will see to that every unorganized worker should have the labors card given by the government.

Ø  If there is any problem faced by the workers within the nation or in abroad as migrant workers in their working place, immediately I will refer to the association and National Domestic Workers Movement (NDWM).

Ø  The feast of St. Joseph is specially meant for these workers. It will be celebrated and animated by these working associations in the parish. A special seminar may be arranged for these people.

Ø  When something happens against the rights of a particular worker, the other workers all come together and give their support to the affected worker for which I will prepare the people and make them show solidarity with one another.

Ø  I will update my knowledge in the arena of workers which will be surely helpful for the workers belong to my parish.

Ø  I will make awareness among the people insisting to get all the Xerox copies of passport, Visa, address of the place and other details about the companies too before someone going to abroad as migrant worker.

Conclusion

            It is a well known fact that every parish will have huge number of different sorts of workers. Therefore, I accept that the ministry to the workers is mandatory in today’s society. Having that in my mind I will work for these people. In a way, it will pave the way for me to get the support of my parishioners for the development of my own parish. I will try my best to help the workers in all the ways possible.

 

 

 

நலமான பணிகள்... (16.11.2020)

நாளைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் தான் இன்று இரவு உறங்கச் செல்கிறோம்!


 இறைவன்  இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாளில் வாசகங்கள் அனைத்தும் நம்பிக்கையை மையப்படுத்தியதாக  அமைகின்றன. 

இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 

திருவெளிப்பாடு நூல் என்பது பொதுவாகவே நம்பிக்கையின் நூலாக பார்க்கப்படுகிறது. அச்சமுறக் கூடியவர்களுக்கு நம்பிக்கையோடு நிகழ்காலத்தை நடத்துங்கள் என்ற செய்தியை ஆழமாக, அர்த்தத்தோடு உணர்த்தக் கூடிய வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள், கடவுள் அனுப்பிய பணியாளர்களாக இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவாக்கை படிப்போரும் அவற்றை கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளதை கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ காலம் நெருங்கி வந்துவிட்டது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றன.  

காலம் நெருங்கி வந்துவிட்டது என்றால், உலகம் முடிவை நோக்கிச் செல்கிறது என்றல்ல.  நாம் ஒவ்வொருவரும் அடுத்தவருக்காக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்கிக் கொள்ளக் கூடிய சூழலானது நெருங்கிவிட்டது என அதனை பொருள் கொள்ளலாம்.  எதிர்காலத்தை எண்ணி வருந்துவதை விட நிகழ்காலத்தில் நல்ல மனிதர்களாக வாழ்ந்து நம்பிக்கைக்குரிய இயேசுவின் சீடர்களாக மாறிட நமக்கு அழைப்பு தருகிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற ஒரு நபர், "ஆண்டவரே! தாவீதின் மகனே! எனக்கு இரங்கும் என்று கூக்குரலிடுகிறார். அவரின் கூக்குரலை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள்.  இருந்தபோதும் அவர் விடாது கத்திக் கொண்டே இருந்தார்.  கடவுள் அவர்வேண்டுகோளுக்கு இணங்கி அவரிடம் வந்து அவரை குணப்படுத்தினார். குணப்படுத்திவிட்டு அவரிடம் கூறினார்,  உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. என்றார்.  அந்த மனிதன் நம்பிக்கை கொண்டதால் ஆண்டவர் இயேசு அவ்வழியே சென்றபோது இவரை நோக்கி அழைப்போம்  இவர் நமக்கு குணம் தருவார் என்று நம்பியதால் அழைத்தார். ஆனால் சிலர் அவரை அழைக்க விடாமல் செய்வதற்கும் அவருடைய நம்பிக்கையை உடைப்பதற்கும் பலவிதமான முயற்சிகளை எடுத்தார்கள். ஆனாலும் அந்த மனிதன் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்காமல் ஆண்டவர் இயேசுவை அழைத்து தான் எதற்காக அழைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்.  கடவுளும் அவனிடம்  உன் நம்பிக்கை உன்னை  குணமாக்கிற்று என்றார். 

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை இருந்தால்
எதிலும் 
நம்பி கை வைக்கலாம் என்று கூறுவார்கள். 


நம்பிக்கையை கேடயமாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய நாம் அனைவரும் நம்பிக்கையோடு இறைவனை எதிர்கொள்ளவும், காணும் மனிதர்களிடம் நல்லவர்களாக நாம் வாழ. இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

தற்போது நிலவக்கூடிய இக்கட்டான சூழ்நிலை நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு பெரிய நோய் தொற்று, நோய் தொற்றிலிருந்து இறைவன் ஏன் நம்மை பார்க்க வில்லை? ஏன் பல உயிர்கள் மடிந்து போனது? என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழமாக சிந்திப்போம்.  ஆனால் நிகழக்கூடிய இந்த நோய்த் தொற்று நமக்கு பலவற்றை நினைவூட்டுகிறது.
  கடவுள் ஏதேனும் ஒன்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால் அதை நேரடியாகச் சொல்லி கொடுக்கலாமே! எதற்காக இது போன்ற ஒரு துயரத்தின் வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்ற கேள்வியும் உள்ளத்தில் எழலாம். கடைக்குட்டி சிங்கம் என்ற ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் இவ்வாறு ஒரு வசனம் இருக்கும். அந்த படத்தின் இறுதியில் சண்டைகளால் பிரிந்து கொண்டிருந்த உறவுகள் எல்லாம்  ஒன்றிணையும்.  அப்போது அப்படத்தில் நடிகர்  சத்யராஜ் அவர்கள் கூறுவார்  சூழல் சிலவற்றை தாமாக சரி செய்து கொள்ளும் என்று.  அதுபோல்தான் இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழலும் நம்மை நாமே சரி செய்து கொள்வதற்காக என்ற ஒரு கண்ணோட்டத்தில் நாம் பார்க்கலாம். ஆனால் நம்பிக்கையோடு நாம் நகரும் போது, அனைத்தும் நலமான செயல்களாக மாறுகிறது.    நம்பிக்கை கொண்டவர்களாக நம்பிக்கையோடு நிகழும் இச்சூழலில் இன்று நிலவக் கூடிய  இந்த இக்கட்டான சூழலை கண்டு மனம் தளர்ந்து விடாமல் இருக்கவும், புத்துயிர் பெற்றவர்களாகவும் புதிய வேகம் கொண்டவர்களாகவும், நமது வாழ்க்கையில் நாம் தவறிய தருணங்களை  எல்லாம் மாற்றிக்கொண்டு இறைவனது அருளை மையமாகக் கொண்டு, நாம் நல்ல செயல்கள் செய்யவும், நலமான பணிகளை முன்னெடுகக்  இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நம்பிக்கையோடு தான் வேண்டியதை பெற்றுக் கொண்ட பார்வையற்ற‌  குருடனைப் போன்றவர்களாய், நம்பிக்கையில்லாமல் பார்வை இருந்தும் குருடர்களாக இருக்கக்கூடிய நம் நிலையை மாற்றிக்கொண்டு நிகழக்கூடிய இச்சூழலிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நம்பிக்கையோடு நலமான செயல்களை  முன்னெடுத்து நலமான பணிகளைச் செய்ய முன்வர இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

சனி, 14 நவம்பர், 2020

வாருங்கள் மகிழ்வில் பங்கு கொள்வோம்.... (15.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஒரு பெண் எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை தாங்குகிறாள் தன் குடும்பத்தில் உள்ளவர்களை கவனிக்கின்றால் என்பதை மிகவும் அழகுற எடுத்துரைக்கிறது இவ்வார்த்தைகள் வெறுமனே கேட்பதற்காக மட்டுமல்ல குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இவ்வார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்வை சரிசெய்துகொண்டு ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக்கூடிய நல்ல கணவன் மனைவி களாகவும் நல்ல பிள்ளைகளாகவும் திகழ வேண்டும் என்ற செய்தியை நமக்கு வழங்குகின்றன.

இன்றைய இரண்டாம் வாசகம் ஆனது அறிவு தெளிவோடு விழிப்பாய் இருப்பதற்கு நமக்கு அழைப்பு தரப்படுகிறது ஆண்டவரின் வருகை எப்போது என தெரியாத போது நாம் அனைவரும் எப்போதுமே விழிப்பாக இருந்து இறைவனுக்குரிய நல்ல பணிகளை செய்து கொண்டே இவ்வுலகத்தில் வாழ்ந்திட வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை நமக்கு உணர்த்துகிறது.  இந்தப் பாடம் வெறுமனே இயேசுவை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு அது மட்டுமல்ல உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஆனது நாம் அனைவருமே எப்போது மரணிப்போம் என்பது யாருக்கும் தெரியாது இருக்கும்வரை இருக்கக்கூடிய இடத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இரக்கத்தோடு நோக்கவும் இரக்கச் செயல்கள் செய்து கொண்டு வாழ்க்கையை வாழவும் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார் .


இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமை பற்றி இயேசு கூறுகிறார் இந்த தாலந்து உவமை என்பது நாம் நமது வாழ்வை திருப்பிப் பார்க்கவும் நம்மிடம் கடவுள் கொடுத்துள்ள பணிகளை திறமைகளை வெளிக் கொணரவும் நமக்கு அழைப்பு தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இவ்வுலகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்குமே கடவுள் பலவிதமான திறமைகளை வாரி வழங்கியிருக்கிறார் ஆனால் அந்தத் திறமைகளை எல்லாம் இனம் கண்டுகொண்டு வாய்ப்புள்ள போது அதனை சரியான விதத்தில் பயன்படுத்தி நாம் மென்மேலும் வளர இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகிறது.

இன்றைய மூன்று வாசகர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது அன்புக்குரியவர்களே நம் ஒவ்வொருவருக்கும் அபரிவிதமான திறமைகளை கடவுள் கொடுத்திருக்கிறார் அந்த திறமைகள் ஒன்றுதான் குடும்பத்தை அன்போடும் அரவணைப்போடும் பேணிப் பாதுகாப்பது இது வெறுமனே பெண்களுக்குரிய பணியாக நாம் எடுத்துக் கொள்ளாமல் நம் ஒவ்வொருவருக்கும் உரிய அணியாகவும் பொறுப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் குடும்பத்தில் அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் இனி எப்போதும் நிலவும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை ஆண்டவரின் வருகைக்காக காத்திருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் அல்ல நம் இறைவன் அனைவருக்குமான தந்தை எனவேதான் தந்தையே என அவரை நாம் அன்போடு அழைக்கிறோம் தந்தையே என அவரை அன்போடு அழைப்பதில் நம்மிடையே இருக்கக்கூடிய சாதி மத இன வேறுபாடுகள் எல்லாம் கலையப்படுகிறது . வேறுபாடுகளை எல்லாம் கடந்து நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற போர்வையின் கீழ் நினைக்கின்றோம் இறைவன் நம்மை எப்போதும் அன்பு செய்யக்கூடியவர் நாம் அனைவரும் நலமா அதை செய்யவேண்டும் என எண்ணுபவர் இவரின் வருகையை மட்டும் எதிர்நோக்கி நாம் நல்ல செயல்களை செய்வதை விடுத்து விட்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மனிதருக்கும் நம்மாலான நல்ல செயல்களை செய்து இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தனையை இறைவன் நமக்கு இன்றைய நாளில் தருகிறார். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்டதால் இருந்தும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய கலந்துதான் இவைகளெல்லாம் அந்தத் தாளத்தை இரட்டிப்பாக மாற்றுவது என்பது நம் கையில் தான் இருக்கிறது நாம் அதனை இரட்டிப்பாக மாற்றாமல் அதை மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்து அதாவது நல்ல செயல்கள் செய்ததாக இருக்கட்டும் குடும்பத்தை பேணுவதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் நமக்கு இறைவன் தந்திருக்கிறார் அதனை நாம் பெருக்கிக் கொள்ளாமல் அதை நமது இதயத்தில் புதைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்க்கையை வெறுமனே நகர்த்த கூடியவர்களாக நாம் இருப்போமாயின் கண்டிப்பாக கடவுள் நம்மையும் அந்த உழைப்பற்ற இருந்த ஒரு பணியாளனை புறம்பே தள்ளியது போல நம்மையும் தள்ளக்கூடிய வாழும் சூழலை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
நீதி வழங்கும் இறைவனிடத்தில் இரக்கத்தை என்று எதிர்பார்ப்பதை விட நமது செயல்களால் நாம் நல்ல செயல்களை நமது செயல்களாக மாற்றிக்கொள்ள இன்றைய வாசகங்கள் வழியாக வாழ்க்கை பாடத்தை தருகிறார் இயேசு அவரின் வார்த்தைகளுக்கு கவனத்தோடு செவிகொடுத்து உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் வந்து பங்குகொள்ள  இன்றைய நாளில்  உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து ஜெபிப்போம் 

மதித்திட....நேசித்திட..... (15.11.2020)


இப்ராஹிம் என்ற ஒரு இஸ்லாமிய துறவி, தன்னுடைய சீடர்களுடன் ஒரு நாள் வெளியூர் பயணம் போன போது, ஒரு பள்ளிவாசலில் தங்க நேர்ந்தது. அது ஒரு பழைய கட்டிடம். அதிலிருந்து ஒரு துவாரத்தின் மூலம் வீசிய பனிப்புயல் உள்ளே தங்கியிருந்தவர்களை பாதித்தது. ஆகவே ஊசி குத்துவது போன்ற குளிர் பாதிப்பால் அவர்கள் சுருண்டு அவதிப்பட்டனர். இதனை கவனித்த இப்ராஹிம் எழுந்து போய் அந்த துவாரத்துக்கு மறைவாக தன்னுடைய முதுகை அடைத்தபடி நின்று கொண்டார். பனிப் புயலின் பாதிப்பை அவர் ஒருவர் மட்டுமே தாங்கிக்கொள்ள, மற்றவர்கள் அமைதியாக உறங்கினார்கள். இப்படி அவர் நின்றதால் அவருடைய வழக்கமான பின் இரவு நேர தொழுகை தடைபட்டு போனது. இந்த உறுத்தலின் காரணமாக தொழுகை தடைபட்டுப் போய்விட்டது என இறைவனிடம் மன்றாடி கொண்டிருந்தார், அதாவது, இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்டது. அந்த அசரீரி இவ்வாறாகச் சொன்னது, "இப்ராஹிம் இரண்டு நாட்களுக்கு முன் நீர் செய்த பின் இரவுத்தொழுகை இறைவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று" என்றது. உடனே இந்த இப்ராஹிம், ஐயோ! அன்று நான் தொழவே இல்லையே என்றான். அன்று நீ செய்த சேவை இறைவனுக்கு மிகவும் பிடித்தது. சிறப்பான தொழுகையாக இறைவன் அதனையே கருதுகிறார், என்று அந்த அசரீரி மீண்டும் அவருக்கு கேட்டது. இந்த நிகழ்வுக்கும் இன்றைய நாள்  வாசகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடிகிறது. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் மற்றும்  அவள் இருக்கக்கூடிய இடத்தை எவ்வாறாக பேணி பராமரிக்கிறாள், எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்கிறாள் என்பதை முதல் வாசகம் தெளிவாக, அழகாக, எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாவது வாசகமும் நம்மை எப்போதும் அறிவு தெளிவோடு விழிப்பாய் இருப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தாலந்து உவமை பற்றி நாம் வாசிக்க கேட்கிறோம். அந்த தாலந்து உவமையும் நம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை, பணிகளை சிறப்பாக செய்து நல்ல ஒரு பலனை தரக்கூடிய பணியாளர்களாக நாம் இருக்க அழைப்பு தரும் வகையில் அமைகிறது. ஆம் பெண்களிடம் இருந்து இந்த சமுதாயம் பலவற்றை கற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. பெண்கள் எப்போதும் பேணிக் காக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  பெண்கள் எப்போதுமே அடுத்தவர் நலனில் அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் நிதி மேலாண்மை செய்வது பெண்கள்தான். பெண்கள் சிறுக சிறுக சேமித்து பல திட்டங்களை தீட்டி மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு வழி வகுக்கக்கூடிய மகத்துவமான பணியினை செய்கிறார்கள். இத்தகைய பெண்கள் குடும்பத்தில் ஆற்றக்கூடிய சிறப்பான பணிகளை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இன்றைய  இரண்டாம் வாசகத்தில் இறைவன் எப்போது வருவார் எனத் தெரியாது! எனவே, விழிப்போடு இருங்கள் என்ற செய்தியானது அறிவுறுத்தப்படுகிறது. விழிப்போடு இருக்கும் பணி என்பது பெண்களிடமே நாம் பெரும்பாலும் காணலாம். கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருகிறார் என்றால், கணவனின் வருகைக்காக விழித்திருக்க கூடியவளாக பெண் இருக்கிறாள். கணவன் வந்ததும் அவனுக்கு உணவு கொடுப்பதில் இருந்து அவன் உறங்கச் செல்வது வரை அவனது தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்து வைக்கக் கூடியவளாக ஒரு பெண்மணி இருக்கிறாள். இந்த பெண்மணிகள் எல்லாம் வீட்டில் வெறுமனே இருப்பதில்லை. வீட்டில் பல விதமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இருந்த போதும் தங்கள் கணவனை கவனிப்பதிலும் தங்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் எப்போதும் விழிப்போடு இருக்க கூடிய பெண்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்மணி இரவு எத்தனை மணிக்கு உறங்கினாலும், விடியற்காலை அந்த பெண்மணி எழுந்து தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கக் கூடியவளாக இருக்கிறாள். ஒரு பெண் விழிப்போடு இருப்பாள் என்பதற்கு இதைவிட எளிய முறையில் உதாரணங்கள் கொடுக்க இயலாது என எண்ணுகிறேன். 

விண்ணரசு என்பது பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடப்படுகிறது எனக்கூறி, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமையைக் கூறுகிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை கொடுக்கிறார். தாலந்தை பெற்றுக் கொண்டவர்கள் எல்லாம் அதனை இரண்டு மடங்காக மாற்றுகிறார்கள். இறுதியாக ஒரு தாலந்து பெற்ற நபர் மட்டும், அந்த தாலந்தை இரண்டாக மாற்றாமல், அந்த தாலந்தை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்லாமல், அதை அப்படியே புதைத்து வைத்து இருந்து மீண்டும் அரசரிடம் அவர் கேட்கும் போது கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரிடத்தில் இருந்து ,  அந்த தாலந்து கொடுத்த நபர் அதை வாங்கி ஐந்து தாலந்தை மேலும் ஐந்து தாலந்தாக மாற்றியவரிடத்தில் கொடுக்கிறார். ஐந்து தாலந்தை 10 தாலந்தாக மாற்றிய நபரிடம் கொடுத்து விட்டு, அந்த ஒரு தாலந்தை எதுவும் செய்யாமல் வைத்திருந்த, அந்த பயனற்ற பணியாளனை புறம்பே தள்ளுங்கள் என்று சாடக்கூடிய, செய்தியினை இன்று நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். 

ஐந்து தாலந்தை 10 தாலந்தாக மாற்றிய நபரை போல, பெரும்பாலும் பெண்கள் பலவிதமான பணிகளை முன்னெடுக்கிறார்கள். ஆனாலும், இச் சமூகத்தில் பல நேரங்களில் அவர்கள், ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவர்களை தங்களுக்கு கீழாக நடத்தக் கூடிய, ஆண்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறார்கள். பொதுவாகவே பெண்களை இழிவாக கருதுவதும், தங்களுக்கு கீழாக எண்ணுவதும், பெண்களுக்கு உரிய உரிமைகளை கொடுக்காமல் இருப்பதும்,  ஒரு சமுதாயம் சமத்துவமான சமுதாயம் என கூற இயலாது என்பதை உணர்த்துகிறது. எனவே இன்றைய நாளில்  நமது வாழ்வை வளப்படுத்தும் விதமாக இறைவனால் கொடையாக கொடுக்கப்பட்டுள்ள பெண்களை, பேணிக் காப்பதும் அவர்களுக்கான உரிமைகளை மதிப்பதும், அவர்களை மனித நேயத்தோடு நடத்துவதும் தான் இறைவன் விரும்பக் கூடியதாகும். அத்தகைய இறை விருப்பத்தை அறிந்தவர்களாக, அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருந்து கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதரையும், அன்பு செய்யவும்,  மதிக்கவும், நேசிக்கவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2020

நம்பிக்கையுடன் வாழ்வோம். (14.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

நானறிந்த நிகழ்வு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. அந்தக் குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 20 வயது வந்தவுடன் குழந்தையின் பெற்றோர் அவன் விரும்பிய கார் ஒன்றை அவனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கித் தர வேண்டும். சிறுவன் ராஜா அந்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இன்னும் ஒரு மாதம் இருந்தது. அப்போது ஒருநாள் அவனுடைய தந்தை அவனைஅழைத்துச் சென்று அவனுக்கு பிடித்தமான காரினை காண்பிக்கச் சொன்னார். அவன் காண்பித்த பின் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் சென்று அந்த காரினை பற்றி பேசிவிட்டு சிலவற்றை குறித்து கொண்டும் வந்தார். ராஜாவின் இருபதாவது பிறந்த நாள் ஒரு மாதம் கழித்து வந்தது. அன்றைய நாளில் தந்தை அவனிடம் ஒரு  பரிசுப் பொருள் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிய ராஜாவுக்கு ஒரே மனக்குழப்பம். எப்போதும் காரினை பரிசாகத் தரும் பொழுது அந்த கார் சாவியை ஒரு சிறிய பெட்டியில் வைத்து அல்லவா தருவார்கள்! ஆனால் தந்தை தற்பொழுது இந்த கனமான பரிசுப் பொருளைக் கொடுத்து இருக்கிறாரே, என்று சிந்தித்தவாறே அந்தப் பரிசுப்பொருளை திறந்து பார்த்தான். அங்கே ஒரு திருவிவிலியம் இருந்தது. அதைக்கண்டு கோபம் அடைந்த ராஜா அதை அப்படியே வைத்துவிட்டுதன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றான். அங்கேயே தங்கி வேலையும் பார்க்கத் துவங்கினான். சில காலங்களுக்குப் பின் தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார் என்று கேள்விப்பட்டான். மீண்டும் சில நாட்களில் ஒருநாள் காலையில் அவன் தந்தை இறந்து விட்டதாக செய்தி வந்தது. உடனே எழுந்து தந்தையின் முகத்தை காண்பதற்காக ஓடினான். தந்தையை பார்த்து கதறி அழுதான். அவன் சற்று நிமிர்ந்து பார்த்த பொழுது அவன் தந்தை அவனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்த அந்த பரிசுப் பொருள் அங்கு இருந்ததை பார்த்தான். உடனே சென்று அந்த பரிசுப் பொருளை கையில் எடுத்துப் பார்த்தான். அந்த விவிலியத்தின் உள்ளே அவன் தந்தை அவனுக்கு அன்போடு எழுதிய ஒரு வாழ்த்துக்கடிதத்தையும் அங்கே விவிலியத்தோடு வைக்கப்பட்டிருந்த கார் சாவியையும் கண்டான். தந்தையின் அன்பை எத்தனை நாள் புரிந்து கொள்ளாமல் அவரை நம்பாமல் எனது வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டேனே என்று கதறி அழுதான். 

அன்பிற்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் புனித யோவான் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு செய்த உதவியின் மூலம் நாம் இறைவனின் நம்பிக்கைக்குரியவர்களாக உருவாகிறோம் என்று கூறுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு, நேர்மையற்ற அந்த நடுவரை பற்றி குறிப்பிடும் பொழுது, அவரிடத்தில் நீதிக்காக வந்து நின்ற அந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு அவளது தொடர்ந்த வேண்டுதலால் , அவளது இடைவிடாத கெஞ்சும் வார்த்தைகளைக் கேட்ட அந்த நடுவர் அவளுக்கு நீதி வழங்க முன் வருகின்றார்.
அங்க ஒரு கைம்பெண் அவருக்கு அறிமுகமில்லாத அன்னிய நபராக இருந்தாலும் அந்தப் பெண்ணின் தொடர் முயற்சியினால், அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்க முன்வருகின்றார். 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்திலும் பல்வேறு தேவைகள் இருக்கும் நபர்களை நாம் சந்திக்கின்றோம். நமக்குத் தெரிந்தவர்களாக இருந்தாலும், அல்லது தெரியாதவர்களாக இருந்தாலும், பிறரின் தேவை உண்மை என அறியும் போது, நாம் அவர்களுக்கு உதவி செய்வதால் நாம் இறைவனின் நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாகிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம். 
நாம் சந்திக்கும் தேவையில் இருக்கும் நபர்களுக்கு நம்மாலான உதவிகள் செய்து ஆண்டவருக்கு சேவைகள் புரிவோம். ஆண்டவரின் நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாக, நாமும் நம்பிக்கையுடன் வாழ்வோம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...