சனி, 14 நவம்பர், 2020

வாருங்கள் மகிழ்வில் பங்கு கொள்வோம்.... (15.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஒரு பெண் எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தை தாங்குகிறாள் தன் குடும்பத்தில் உள்ளவர்களை கவனிக்கின்றால் என்பதை மிகவும் அழகுற எடுத்துரைக்கிறது இவ்வார்த்தைகள் வெறுமனே கேட்பதற்காக மட்டுமல்ல குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இவ்வார்த்தைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்வை சரிசெய்துகொண்டு ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக்கூடிய நல்ல கணவன் மனைவி களாகவும் நல்ல பிள்ளைகளாகவும் திகழ வேண்டும் என்ற செய்தியை நமக்கு வழங்குகின்றன.

இன்றைய இரண்டாம் வாசகம் ஆனது அறிவு தெளிவோடு விழிப்பாய் இருப்பதற்கு நமக்கு அழைப்பு தரப்படுகிறது ஆண்டவரின் வருகை எப்போது என தெரியாத போது நாம் அனைவரும் எப்போதுமே விழிப்பாக இருந்து இறைவனுக்குரிய நல்ல பணிகளை செய்து கொண்டே இவ்வுலகத்தில் வாழ்ந்திட வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை நமக்கு உணர்த்துகிறது.  இந்தப் பாடம் வெறுமனே இயேசுவை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு அது மட்டுமல்ல உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஆனது நாம் அனைவருமே எப்போது மரணிப்போம் என்பது யாருக்கும் தெரியாது இருக்கும்வரை இருக்கக்கூடிய இடத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இரக்கத்தோடு நோக்கவும் இரக்கச் செயல்கள் செய்து கொண்டு வாழ்க்கையை வாழவும் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார் .


இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமை பற்றி இயேசு கூறுகிறார் இந்த தாலந்து உவமை என்பது நாம் நமது வாழ்வை திருப்பிப் பார்க்கவும் நம்மிடம் கடவுள் கொடுத்துள்ள பணிகளை திறமைகளை வெளிக் கொணரவும் நமக்கு அழைப்பு தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இவ்வுலகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்குமே கடவுள் பலவிதமான திறமைகளை வாரி வழங்கியிருக்கிறார் ஆனால் அந்தத் திறமைகளை எல்லாம் இனம் கண்டுகொண்டு வாய்ப்புள்ள போது அதனை சரியான விதத்தில் பயன்படுத்தி நாம் மென்மேலும் வளர இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகிறது.

இன்றைய மூன்று வாசகர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது அன்புக்குரியவர்களே நம் ஒவ்வொருவருக்கும் அபரிவிதமான திறமைகளை கடவுள் கொடுத்திருக்கிறார் அந்த திறமைகள் ஒன்றுதான் குடும்பத்தை அன்போடும் அரவணைப்போடும் பேணிப் பாதுகாப்பது இது வெறுமனே பெண்களுக்குரிய பணியாக நாம் எடுத்துக் கொள்ளாமல் நம் ஒவ்வொருவருக்கும் உரிய அணியாகவும் பொறுப்பாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் குடும்பத்தில் அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் இனி எப்போதும் நிலவும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை ஆண்டவரின் வருகைக்காக காத்திருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் அல்ல நம் இறைவன் அனைவருக்குமான தந்தை எனவேதான் தந்தையே என அவரை நாம் அன்போடு அழைக்கிறோம் தந்தையே என அவரை அன்போடு அழைப்பதில் நம்மிடையே இருக்கக்கூடிய சாதி மத இன வேறுபாடுகள் எல்லாம் கலையப்படுகிறது . வேறுபாடுகளை எல்லாம் கடந்து நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற போர்வையின் கீழ் நினைக்கின்றோம் இறைவன் நம்மை எப்போதும் அன்பு செய்யக்கூடியவர் நாம் அனைவரும் நலமா அதை செய்யவேண்டும் என எண்ணுபவர் இவரின் வருகையை மட்டும் எதிர்நோக்கி நாம் நல்ல செயல்களை செய்வதை விடுத்து விட்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மனிதருக்கும் நம்மாலான நல்ல செயல்களை செய்து இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற சிந்தனையை இறைவன் நமக்கு இன்றைய நாளில் தருகிறார். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்டதால் இருந்தும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய கலந்துதான் இவைகளெல்லாம் அந்தத் தாளத்தை இரட்டிப்பாக மாற்றுவது என்பது நம் கையில் தான் இருக்கிறது நாம் அதனை இரட்டிப்பாக மாற்றாமல் அதை மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்து அதாவது நல்ல செயல்கள் செய்ததாக இருக்கட்டும் குடும்பத்தை பேணுவதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் நமக்கு இறைவன் தந்திருக்கிறார் அதனை நாம் பெருக்கிக் கொள்ளாமல் அதை நமது இதயத்தில் புதைத்துவிட்டு வாழ்க்கையை வாழ்க்கையை வெறுமனே நகர்த்த கூடியவர்களாக நாம் இருப்போமாயின் கண்டிப்பாக கடவுள் நம்மையும் அந்த உழைப்பற்ற இருந்த ஒரு பணியாளனை புறம்பே தள்ளியது போல நம்மையும் தள்ளக்கூடிய வாழும் சூழலை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
நீதி வழங்கும் இறைவனிடத்தில் இரக்கத்தை என்று எதிர்பார்ப்பதை விட நமது செயல்களால் நாம் நல்ல செயல்களை நமது செயல்களாக மாற்றிக்கொள்ள இன்றைய வாசகங்கள் வழியாக வாழ்க்கை பாடத்தை தருகிறார் இயேசு அவரின் வார்த்தைகளுக்கு கவனத்தோடு செவிகொடுத்து உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் வந்து பங்குகொள்ள  இன்றைய நாளில்  உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து ஜெபிப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...