புனித அந்திரேயா பற்றி அறிவோம்.
1. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்,
2. இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர்.
3. இவர் புனித பேதுருவின் சகோதரர்.
4.கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர்.
5. மீன் பிடித்து வந்தார்.
6. திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தவர்.பின்னர் இயேசுவோடு சேர்ந்தவர்.
7. இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார்.
8. இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவா. 1:29-39). மறுநாள் தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர்.
9. கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தவர்.
10.இயேசு அப்பங்களை பலுகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே.
11. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.
12.தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தவர்.
13.பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர்.
14. சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றவர்.
15. பத்ராஸில் உள்ள ஆலயத்தில் புனித அந்திரேயாவின் புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.
புனித அந்திரேயாவை பற்றி பல்வேறு அரிய கருத்துக்களை தொகுத்து வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் பணி தொடர ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்கு