சனி, 7 நவம்பர், 2020

தலித் ஞாயிறு (8.11.2020)

அன்புக்குரியவர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாவது ஞாயிறை தமிழக  திருஅவையானது தலித் மக்களின் உரிமைக்கான ஞாயிறாக கொண்டாடுகிறது. 

பல வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ மறையை சார்ந்து இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை  செய்து கொடுக்கக் கூடிய பணியினை திரு அவையானது சிரமேற்கொண்டு செய்து வந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதன் அடிப்படையில் அப்போது ஆட்சியில் இருந்த அரசு அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுபவர்கள் முற்றிலுமாக இந்து மக்களே ஏனென்றால் இவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்ற ஒரு காரணத்தை கூறி அவர்களை மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது. கிறிஸ்தவ மறையை சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்தவ மறையைத் சார்ந்து இருக்கக்கூடிய இதர சகோதரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்து மக்களிடம் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவைகளை நிவர்த்தி செய்ய யாரும் இல்லை  எனவே அரசு அந்த உதவிகளை செய்து கொடுக்கும் என்று கூறி அவர்களை தாழ்த்தப்பட்டவர் (SC) பட்டியலில் சேர்த்தது.  சில வருடங்களுக்கு பிறகு சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை என்ற காரணத்தை கொண்டு குடியரசுத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தின் பெயரால் சீக்கியர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இணைந்தார். 

ஆனால் அன்று நிலவிய சூழ்நிலை இன்றும் நிலவுகிறது என்பது அல்ல உதவி செய்பவர்கள் எப்போதும் உதவி செய்வார்கள் என்பதும் அல்ல திட்டமிட்ட வகையில் மறைமுகமாக உதவி கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்ற காரணத்தை காட்டி கிறிஸ்தவ மறையைத் சார்ந்து  இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடிய அனைத்து அரசுகளும் தொடர்ந்து பட்டியல் இனத்தவர்கள் (SC) என்ற பட்டியலில் அவர்களை சேர்க்காமல் வஞ்சித்து வருகிறது என்பது உண்மை.

பொதுவாகவே கிறிஸ்துவ மறையை பொருத்தவரையில் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் என்று பார்க்கும் பக்குவம் இருக்கிறது. எனவே நம்மிடம் உயர்வு தாழ்வு இல்லை என்பதை விவிலியத்தின் மூலமாக நாம் அனைவரும் உணர்ந்து கொள்கிறோம். இதையே பவுல் இனி உங்களிடையே கிரேக்கர் என்றோ யூதர் என்றறோ வேறுபாடுகள் இல்லை என கூறுகிறார். இதன் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் நம்மிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகள் இல்லை என்பதை ஆழமாக உள்வாங்கிக் கொண்டாலும். இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழக்கூடிய நம்மால் முழுமையாக அடுத்தவரின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய இயலவில்லை.  மேலும் கிறிஸ்தவ மறையை சார்ந்து இருக்கக்கூடிய  தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த மக்கள் நெடுங்காலமாக பலவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்கள். இவர்கள் பட்டியல் இனத்தவர்கள் அல்ல எனக் கூறுவதன் வழியாக இவர்கள் அரசிடமிருந்து சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்புக்களை இழக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.  இவர்கள் உயர் சாதி வகுப்பினர் (BC) என கூறினாலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இவர்கள் நடத்தப்பட்டு கொண்டிருப்பது மறுக்கவியலாத உண்மை.  கிறிஸ்தவ மதத்தில் சாதியம் தழைத்தோங்கி இருக்கக் கூடிய சூழலில் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல என கூறி அரசும் நயமாக ஏமாற்று வேலையை செய்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.  இந்நிலையிலிருந்து இம்மக்கள்  மீட்டெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.

அதற்கான சில பரிந்துரைகளை உங்களிடம் பகிர்கிறேன். இந்த பரிந்துரைகள் எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியாது. ஆனால் உங்கள் கருத்துக்களை பதிவிட்டால் அது இதனை படிப்பவர்கள் மற்றும் இத்தகைய காரணத்தைக் கொண்டு போராட்டங்களையும் முன்னெடுக்க கூடிய திருஅவையில் இருக்கக்கூடிய பலருக்கு வழிகாட்டுதலாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

முதலில் திருஅவையானது நம்மிடையே உயர்வு தாழ்வு இல்லை என்ற கோட்பாட்டினை மையமாக வைத்து சாதியம் கிறிஸ்தவத்தில் இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டு சகோதர சகோதரிகளை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பையும் பணியையும் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்க வேண்டிய பொறுப்பை சிரமேற்கொண்டு செயல்பட வேண்டும் சாதியத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்.  

 ஒவ்வொரு வருடமும் பல மக்களை இணைத்துக் கொண்டு எங்களுக்கு இந்த உரிமையை கொடு எனக் கேட்டுக் கொண்டே இருப்பதை விட, திருஅவையில் இருக்கக்கூடிய தந்தையர்கள் இணைந்து அரசை நாடக் கூடிய பணியினை செய்யலாம்.
 உதாரணமாக இப்போது நாம் தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மறையைத் சார்ந்த மக்களை பட்டியல் இனத்தவர்கள் என்பதில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தலாம். எந்தக் கட்சி இந்தக் கருத்தை தனது தேர்தல் வாக்குறுதியில் இணைத்து கொள்கிறதோ அவர்களை நாம் ஆதரிக்க முயலலாம்.  

இப்போது உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம் நம்முடைய தமிழகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒரு கட்சி இந்த சட்டத் திருத்தத்தை செய்ய இயலுமா? என்ற கேள்வி எழும். கண்டிப்பாக இயலாது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் இதை ஒரு அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக எடுத்துக் கொண்டு மத்திய அரசை அணுகலாம் அப்படி அணுகும்போது சில மாற்றங்கள் உருவாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதுவரை ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினருடைய   கோரிக்கையாக மட்டும் இருந்த ஒன்று. ஒரு அரசால் முன்னெடுக்கப்படும் போது அதில் கண்டிப்பாக மாற்றம் கொண்டுவர முயற்சிகள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை நீங்களும் பதிவிடுங்கள் எது சிறந்ததாக இருக்கும் என்பதன் அடிப்படையில் திருஅவையில் இருக்கக்கூடிய தந்தையர்கள் நமது மாற்றத்திற்கான வழிக்கு வித்திடுவார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிப்போம்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...