செவ்வாய், 24 நவம்பர், 2020

தலை நிமிர்ந்து நில்லுங்கள்... மகேந்திர சிங் தோனி

தலை நிமிர்ந்து நில்லுங்கள்.
கிரிக்கெட் இரசிகர்களால் ‘Cool Captain’ என அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியிடம் செய்தியாளர் ஒருவர், “கிரிக்கெட் விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் நிறைந்த சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று கேட்டபொழுது, தோனி அவரிடம் இவ்வாறு பதிலளித்தார்:

“விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் ஏற்படுகின்றபொழுது, நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன். அது எனக்குக் கூடுதல் பொறுப்பு என்று பார்த்தால், கை கால்கள் உதறும்; சவாலான, பதற்றமான சூழல்கள் என்பவை, என் விளையாட்டு அணிக்கும், என் நாட்டிற்கும் முன்னால் நான் கதாநாயகனாக உயர்வதற்கு எனக்குத் தரப்படும் வாய்ப்புகள். அதனால் நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன்.”

தோனியின் இவ்வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால், அவரை ஏன் எல்லாரும் ‘Cool Captain’ என்று சொல்கின்றார்கள் என்பது நமக்குப் புரிந்துவிடும். ஆம், கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, சவால்களும் பிரச்சனைகளும் நமக்கு வருகின்றபொழுது, அவற்றைக் கண்டு பதற்றமடையக்கூடாது; மாறாக நாம் அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும். நாம் நமக்கு வருகின்ற துன்பங்களையும் சவால்களையும் துணிவோடு எதிர்கொண்டால், நம்மால் ஒருநாள் சாதனையாளர்களாக, கதாநாயகர்களாக உயர முடியும் என்பது உறுதி.

1 கருத்து:

  1. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு! ஒரு காலம் உண்டு! கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்கின்றார்! நமக்கு நன்மைகள் செய்ய அவர் காத்திருக்கின்றார் என்ற நம்பிக்கை நம் மனதில் இருந்தால், எப்போதும் நாம் வெற்றியாளர்கள் தான்! சாதனையாளர்கள் தான்! 👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...