*இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு (9.11. 2020) திருநாள்*
உலகெங்கும் உள்ள அனைத்துப் பேராலாயங்களின் தாய் ஆலயம் இது.
உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது.
திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுவார்.
புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு.
தொடக்ககால உரோமைத் திருஅவையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது.
கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது.
இந்த ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்ட விழாவினை இன்ற திருஅவை கொண்டாடுகிறது. இந்நேரத்தில் நமது ஊர்களில் இருக்கக்கூடிய நமது ஆலயங்கள் நேர்ந்தளிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
மேலும் உண்மையான ஆலயம் என்பது நம் ஒவ்வொருவருடைய உடல். தூய ஆவியானவர் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தை இறைவனுக்கு நேர்ந்து அளிக்க கூடியவர்களாக மாறுவோம்.
🙏
பதிலளிநீக்குநாம் ஆண்டவரின் ஆலயம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து வாழ்வோம்! அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களின் அருமையான கருத்திற்கும் வாழ்வுக்கான அழைப்பிற்கும் எங்களது நன்றிகளும் பாராட்டுக்களும்!
பதிலளிநீக்கு