அன்னியருக்கான அன்பும், கடவுளுக்கான கீழ்ப்படிதலும்”
அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே....
இன்றைய வாசகங்களில் நாம் இரண்டு முக்கியமான அழைப்புகளை காண்கிறோம்:
கடவுள் மீதான அன்பு
மற்றவர்களுக்கு — குறிப்பாக அந்நியருக்கு — அன்பு காட்டும் அழைப்பு...
இணைச்சட்டம் 10-ஆம் அதிகாரத்தில், மோசே இஸ்ரயேலரிடம்,
“உங்கள் இதயத்தை விருத்தசேதனம் செய்யுங்கள்; வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்” என்று கூறுகிறார்.
இதன் அர்த்தம் — வெளிப்படையான மதசடங்குகள் போதாது; உள்ளம் மாற வேண்டும்.
நாம் ஒருகாலத்தில் எகிப்தில் அடிமைகளாய் இருந்தோம்; அங்கே நாம் அந்நியர்கள் — ஆனால் கடவுள் நம்மைத் தேடி, தம் சுதந்திர மக்களாக ஆக்கினார்.
அதனால் இன்று நாமும், நம்மை விட வேறுபடுகிறவர்களை அன்புடன் ஏற்றுக்கொள்வது கடவுளின் சித்தம்.
அந்நியருக்கும் அன்பு
மோசே சொல்லும் அழைப்பு எல்லா காலத்திற்கும் பொருத்தமானது :
“அந்நியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அந்நியராய் இருந்தீர்கள்.”
இது ஒரு கட்டளை மட்டுமல்ல; நம் நம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறை ..
நாம் ஏற்கனவே கடவுளின் இரக்கத்தை பெற்றவர்களாய் இருக்கிறோம் எனவேஅதே இரக்கத்தை அடுத்தவரோடு பகிரும் மனநிலையில் நாம் ஒவ்வொரு நாளும் வளர வேண்டும்.
இன்றைய உலகில் — வேறுபட்ட மொழி, கலாச்சாரம், மதம் எனவே வேறுபாடுகள் நிறைந்தது இவ்வேறுபாடுகளை மனதில் வைத்து மற்றவரை நிராகரிப்பது எளிது.
ஆனால், கடவுள் நம்மை எல்லையில்லாத அன்பில் நாளும் வழி நடத்துவதை மனதில் பதியவைத்தவர்களாய் நாமும் வரம்பில்லாத, எல்லை இல்லாத வாழ வேண்டும்.
இயேசுவின் உதாரணம்: பரிசுத்த சுதந்திரமும் தாழ்மையும்
மத்தேயு நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம் தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை முன்கூட்டியே அறிவிக்கிறார்.
இதில் அவர் நமக்கு கற்றுக்கொடுப்பது: உண்மையான சுதந்திரம் என்பது, தாழ்மையாய் பிறருக்காக தியாகம் செய்வது.
நாம் ‘நான் சுதந்திரம்’ என்று மட்டும் வாழாமல், அதைப் பயன்படுத்தி அன்பையும் சமாதானத்தையும் பரப்ப வேண்டும்.
இன்றைய இறை வார்த்தை நமக்குத் தரும் செய்தி:
கடவுளுக்குப் பயமும், முழுமையான கீழ்ப்படிதலும் — சடங்குகளில் மட்டும் வெளிப்படக்கூடியவை அல்ல, மாறாக. இதய மாற்றத்தில் நிகழ வேண்டும்
நம்மை விட வேறுபட்டவர்களுக்கும், அந்நியருக்கும், தேவையுள்ளவர்களுக்கும் அன்பு காட்டுவது நம் வாழ்வின் அடிப்படையாக மாற வேண்டும்.
சுதந்திரம் இருந்தாலும், அதைத் தாழ்மையுடன் பயன்படுத்தி, பிறருக்குத் தடையாக இல்லாத வாழ்க்கை நம் வாழ்க்கையாக மாற்றிட வேண்டும்.
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக