"கரம்பிடிக்கும் கடவுள்...
... மோசேயின் நல் உள்ளம் ...
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்பது:
- மோசே எதிராக மிரியாமும் ஆரோனும் பேசுகிறார்கள்.
- அவர்கள் கூறும் குற்றம் மோசே எத்தியோப்பிய பெண்ணை மணந்ததுதான், ஆனால் உண்மையானக் காரணம் – அவர்மேல் ஏற்படும் இறைவாக்கு உரைக்கும் பெருமையைப் பொறுக்கமுடியாத பொறாமை.
- ஆண்டவர் மோசேவின் பக்கத்தில் நிலைத்து நின்றார். மோசே குறித்து கூறப்படும் வார்த்தை:
“பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடர்.”
- கடவுள் மோசேவிடம் நேராக, தெளிவாக பேசுகிறார் – இது அவர் ஆண்டவரோடு நம்பிக்கைக்குரிய உறவைச் சுட்டிக்காட்டுகிறது.
- மிரியாம் தொழுநோயால் பாதிக்கப்படுகிறாள், ஆனால் மோசே அவளுக்காகவே ஆண்டவரிடம் பரிந்துரை செய்கிறார்.
- இது மன்னிப்பு, கருணை, இரக்கம் என்பவற்றின் அழகான எடுத்துக்காட்டு.
கரம்பிடிக்கும் கடவுள் ...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது:
- இயேசு தனியே ஜெபிக்க மலைக்கு ஏறுகிறார். தனிமையில் ஜெபித்ததை போல நாமும் தனிமையில் நாள்தோறும்இறைவனோடு இணைந்துஜெபிக்க வேண்டும்.
- சீடர்கள் கடலில் பயணித்தபோது இயேசு அவர்களிடம் கடல்மீது நடந்து வருகிறார். வாழ்வில் எப்போதெல்லாம் நம் செயல்களால் கடவுளை விட்டு தள்ளிச் செல்கிறோமோ அப்போதெல்லாம் கடவுள் நம்மை தேடி வருகிறார்.
- கடலில் சீடர்கள் பயந்தனர் – "பேய்!" என்று அலறுகிறார்கள். இயேசு சொல்லுகிறார்:
“துணிவோடிருங்கள்; நான்தான்; அஞ்சாதீர்கள்.”
இவ் வார்த்தைகள் நாமும் அச்சமின்றி ஆண்டவரை அறிந்து கொள்ளக் கூடியவர்களாக துணிவோடு துன்ப நேரங்களில் பயணிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது.
- பேதுரு இயேசுவை சோதிக்கிறார் " இயேசுவே நீர்தான் என்றால், என்னையும் நடக்க அனுமதியுங்கள்." இயேசு அழைக்கிறார்: “வா” என்று பேதுரு நடக்க தொடங்குகிறார் – ஆனால் காற்றைக் கண்டு பயந்து மூழ்குகிறார். இந்நிகழ்வு அழைத்த ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுத்து வந்த நாம் எதிர்வரும் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
- மூழ்கும் பேதுருவை இயேசு உடனே கையை நீட்டி மீட்கிறார்:
“நம்பிக்கை குன்றியவனே! ஏன் ஐயம் கொண்டாய்?” என்று அன்பாய் நம்பிக்கையோடு பயணிக்க கற்பிக்கிறார்.
நாமும் நமது வாழ்வில் துன்பங்களுக்குள் மூழ்கும் போது கடவுள் நமது தரும்படித்து நம்மை துன்பங்களில் இருந்து மீட்டு வருவார் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் மலர வேண்டும்.
- மோசே – நம்பிக்கையோடு ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப வழி நடந்ததால் கடவுள் அவர் சார்பாக செயல்படுவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
- பேதுரு – நம்பிக்கையால் நடக்கத் தொடங்கினார், ஆனால் ஐயத்தால் மூழ்கினார். ஆனால் ஆண்டவர் அவரது மூழ்கும் வேலையில் கரம் பிடித்து அவரை பாதுகாத்து நம்பிக்கையோடு பயணிக்க அழைப்பு விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக