வியாழன், 7 ஆகஸ்ட், 2025

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... சிலுவையின் வழி மீட்பு...



1. கடவுளின் அற்புதமான அழைப்பு

இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரேல் மக்களுக்கு மோசே கடந்து வந்த பாதைகளையும் கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையேயான தொடர்பையும் நினைவுபடுத்துகிறார் ...

  • "உங்கள் மூதாதையருக்குக் கடவுள் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரை அவர்  தேர்ந்துகொண்டார்" – இது ஒரு தேர்வு மட்டுமல்ல, ஒரு உறவின் வெளிப்பாடாகும்.
  • இஸ்ரேல் மக்கள் வானத்திலிருந்து பேசும் கடவுளின் குரலை அவர்கள் கேட்டனர், நெருப்பினின்றும் வந்த வாக்கைக் கேட்டனர் – இது அனுபவத்தின் வாயிலாக அவர்கள் கடவுளை உணர்ந்ததை சுட்டிக்காட்டுகிறது.
  • அவர் அவர்களை எகிப்திலிருந்து தம்முடனே கூட்டி வந்தார் – இச்சொற்கள் அவர் விடுதலையின் கடவுள் என்பதை நினைவூட்டுகிறது. 

இஸ்ரேல் மக்களுக்கு மோசை நினைவூட்டிய இந்த வார்த்தைகள் இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் ..

நம்மையும் கடவுள் அன்பால் தேர்ந்தெடுத்தார். நாம் இந்த உலகத்தில் வந்ததற்கும்  வாழ்வதற்கும் நாம் ஏதேனும் சிறப்பு செய்தோம் என்பதால் அல்ல ...அவர் அன்பின் வெளிப்பாடு என்பதை உணர அழைக்கப்படுகிறோம்.  

2. இயேசுவின் அழைப்பு  சிலுவையின் வழி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ...

  • "தன்னலம் துறக்க வேண்டும்"
  • "தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்"
  • "தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழக்கப் போகின்றனர்"

என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார் ... இது அவரை பின்பற்றுவதற்கான  அழைப்பு மட்டுமல்ல; நம் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான ஒரு அழைப்பு...

3. வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்வி:

"மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் உயிரையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

இது ஒரு ஆழமான சிந்தனைக்கு உரிய கேள்வி. இன்று நாம் பல பொருள்களை தேடுகிறோம் – செல்வம், பெயர், பாதுகாப்பு – என நாம் தேடுகிற எதுவும்நிரந்தரமானது அல்ல....நிரந்தரமானது இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை மனதில் நிறுத்தி இறைவனுக்குரிய காரியங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

4. சிலுவையின் வழி – நம் வாழ்வின் வழி

  • இயேசுவைப் பின்பற்றுதல் என்பது தியாகமாகும்.
  • நம்முடைய அடையாளம் – நான் யார்? என்னை யார் அழைத்தார்? யாருக்காக நான் வாழ்கிறேன்? என்ற கேள்விகளுக்கு பதில், சிலுவையில் இருக்கிறது.
  • கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தார் என்பது நம் பெருமைக்கு அல்ல – நம் பணிக்கு.
  • அந்த பணி: இயேசுவை பின்பற்றும் சாட்சியாக வாழ்வது.

எனவே அன்பிற்குரிய சகோதரர்களே,
இன்றைய வாசகங்கள் நமக்கு நினைவூட்டுவது ...

  1. நாம் அன்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
  2. தேர்வு ஒரு கௌரவம் மட்டுமல்ல, ஒரு சாகசப் பயணத்தின் தொடக்கமும்.
  3. இயேசுவைப் பின்பற்ற சிலுவையை ஏற்றிக்கொண்டு தன்னலமின்றி செல்ல வேண்டும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது – "உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்..." (இணைச்சட்ட நூல் 4:39)
அவரது நியமங்களை பின்பற்றுங்கள்.
அப்பொழுது நாம் மட்டுமல்ல, நம் பிள்ளைகளும் நலமாக வாழ்வார்கள். என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்திலிருந்து அவரைப் பின்பற்றுவோம் ....


இறைவன் நம்மை என்றும் ஆசீர்வதிப்பாராக ...


என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...