இன்றைய நாளில் இதை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
இன்று திருமுழுக்கு யோவானின் இறப்பு குறித்து நாம் வாசிக்க கேட்கின்றோம் ...
அதிலும் குறிப்பாக திருமுழுக்கு யோவானை கொலை செய்த ஏரோது தன் கொன்ற திருமழுக்கு யோவான் தான் இயேசுவாக இருக்கிறாரோ என்று எண்ணி அச்சப்படுவதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் உணர்ந்து கொள்ள முடியும் ...
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதற்கு ஏற்ப நீதிமானாக கருதப்பட்ட திருமுழுக்கு யோவானின் இறப்பு ஏரோதின் உள்ளத்தில் குழப்பத்தையும் கலக்கத்தையும் உருவாக்கியது ...
இடர்பாடுகள் பல வந்தாலும் இறுதிவரை இறைவனுக்கு உகந்த வாழ்வை தன் வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக திருமுழுக்கு யோவான் செயல்பட்டார். எனவேதான் உயிர்த்துறக்க வேண்டும் என்ற சூழல் வந்தாலும் கூட உண்மையை எடுத்துரைப்பவராக தன் வாழ்வை அவர் அமைத்துக் கொண்டார் ...
இந்த திருமுழுக்கு யோவானை போல இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இறுதிவரை இறைவனுக்கு உண்மை உள்ளவர்களாக... உண்மையான இறைவனை எடுத்துரைக்கும் மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவும் ...
தவறு இழைத்து விட்டு தவறை எண்ணி அஞ்சு நடுங்குவதற்கு பதிலாக செய்த தவறை சரி செய்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களாய் நம் வாழ்வில் இருக்கின்ற தவறுகளை குறைத்து ஆண்டவர் விரும்புகிற நன்மைகளை மட்டும் முன்னெடுத்துச் செல்கின்ற நல்லவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம் ...
எப்படி யூபிலி ஆண்டில் இரக்கத்தை நாம் பகிர வேண்டும் என்ற முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுகிறதோ அதன் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட இரக்கத்தை நாமும் அருகில் இருப்பவர்களோடு பகிர்ந்து குற்றம் அற்றவர்களாக கடவுள் விரும்பும் மக்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே.. சகாயராஜ்
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக