வியாழன், 9 செப்டம்பர், 2021

தன்னிலை உணர்வதே மாற்றத்திற்கான வழி...(10.9.2021)

தன்னிலை உணர்வதே மாற்றத்திற்கான வழி

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீ இரு என்றார் காந்தியடிகள். தன்னை மாற்றிக் கொள்ளாத எவனாலும் சமூகத்தை மாற்ற இயலாது என்பார்கள்.

மாற்றம் அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் யாரும் மாற விரும்புவது இல்லை அதாவது தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவது இல்லை.
முதல் வாசகத்தில் பவுல் தன்னை மாற்றிக்கொண்டார் எனவே பலரை இயேசுவை நோக்கி மாற்றமடைய வைப்பதற்கான கருவியாக மாறினார்.
கண்டு அனுபவித்த இயேசுவின் சாட்சியாக அவர் மாறியதன் விளைவே அவரை பின்தொடர்ந்து அவரது வார்த்தைகளை கேட்டு பலரும் இயேசுவை நோக்கி மாற்றம் அடைந்தவர்களாக மாறினார்கள் என்பது வரலாறு நமக்கு தருகின்ற பாடமாக உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னை திருத்திக் கொள்ளாத ஒருவனால் அடுத்தவரை திருத்த இயலாது என்ற செய்தியினை இறைவன் அழகாக எடுத்துரைக்கின்றார்.

நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் பிறரை குற்றவாளிகள் என அடையாளம் காணுகின்ற போது நாம் குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து போகின்றோம். நாம் விரும்புவது போல நமது எண்ணத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் மாற்றம் அடைய வேண்டும் என எண்ணுகிறோம் ஆனால் நாம் மாறுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற கேள்வியை இன்று நாம் நமக்கு உள்ளாக எழுப்பி பார்ப்போம். 
தன்னை மாற்றிக் கொள்ளும் பொழுதுதான் தரணியில் மாற்றமானது உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. தன்னை மாற்றிக் கொள்ளாது தனக்காக சமூகத்தில் உள்ள அனைத்தும் மாற வேண்டுமென என்ன கூடியவர்களாக நாம் இருப்போம் ஆனால் குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது போலத்தான் நமது வாழ்வு இருக்கும்.

தன் நிலையை உணர்வதே மாற்றத்திற்கான வழி என்று கூறுவார்கள் நாம் எத்தகைய பாதையில் பயணம் செய்கின்றோம் எத்தகைய கண்ணோட்டத்தோடு அனைவரையும் நோக்கு கின்றோம் என்று நம்மையே நாம் சுய ஆய்வு செய்து பார்ப்போம்....
மாற்றத்தை முதலில் நமதாக மாற்றுவோம்.... .
 தன்னிலை உணர்வோம் மாற்றத்திற்கு வழிவகுப்போம்....

புதன், 8 செப்டம்பர், 2021

நாம் பெயரளவு கிறிஸ்தவர்களா ...?(9.09.2021)

நாம் பெயரளவு கிறிஸ்தவர்களா ...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாளின் முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கிறிஸ்தவர் என அழைக்கப்பட கூடியவன் அல்லது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன், கிறிஸ்துவை பின்பற்றுகிறவன் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான வழிமுறைகளை இயேசு முன்மொழிந்தவைகளை பவுலும் முன் மொழிகின்றார்.

கிறிஸ்துவை  ஏற்றுக் கொண்டவன்
பகைவரிடத்தில் அன்பும், 
வெறுப்போருக்கு நன்மையும்
சபிப்போருக்கு ஆசியும்,
இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டலும்,  
கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும், 
மேலுடையை எடுத்துக்கொள்ள விரும்புபவனுக்கு அங்கியையும்,
கேட்கும் எவருக்கும் கொடுக்க கூடியவனாகவும், 
எடுத்துக் கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காதவராகவும், 
பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறோமோ அதையே அவர்களுக்கு செய்ய கூடியவனாகவும் மொத்தத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதனாக வாழ வேண்டும்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் பகைவனை அன்பு செய்ய வேண்டும் என இயேசு கூறுகிறார். இந்த மண்ணில் வாழ்ந்த போது இயேசுவுக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆனால் இயேசுவை தங்களது எதிரியாக எண்ணியவர்கள் பலர் இருந்தனர். எனவேதான் இயேசுவின் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரை பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். ஆனால் இயேசு அவர்களை தன்னுடைய நண்பர்களாக கருதினார். எனவேதான் தனது உயிரை இறைவனது கையில் ஒப்புவிக்கும் முன்பாக, சிலுவையில் தொங்கிய வண்ணம் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும்  மன்னித்தவராய் தன் உயிரை இறைவனிடத்தில் தியாகம் செய்தார். இந்த இயேசுவை தான் நாம் நமது வாழ்வில் பிரதிபலிக்க அழைக்கப்படுகின்றோம்.

ஏசுவின்  வார்த்தைகளும், பவுலின் போதனைகளும் பேசுவதற்கும், அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதற்கும் மிகவும் எளிதாக உள்ளது. ஆனால் அதனை வாழ்வாக்குவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் இவற்றை நம்மால் செயல்படுத்த முடியாது என்று அல்ல... ஏனென்றால் மனிதனாக இம்மண்ணில் இருந்த இயேசு மேற்கூறிய அனைத்தையும் தன் வாழ்வில் செயலின் மூலம் வெளிகாட்டியவர். அந்த இயேசுவைப் பின்பற்றுகின்ற நாமும் அவரைப்போலவே மாறமுடியும்

இயேசுவிடம் காணப்பட்ட பண்பு நலன்களை நாம் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழுகின்ற போது நாம் இயேசுவை பின்பற்றுகின்றவர்கள் என்பது உண்மையாகும். மாறாக வெறும் வார்த்தைகளாக மட்டும்  நாம் பயன்படுத்துவோம் என்றால் அது உண்மையான கிறிஸ்தவ வாழ்வாக அமையாது. நாம் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இல்லாமல், சொல்லும் செயலும் இணைந்து போகின்ற வகையில் இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் அவரைப் போலவே இந்த சமூகத்தில் வித்தியாசமாக அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆயனாக மாறிட இறையருளை இன்றைய நாளின் இணைந்து வேண்டுவோம்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

மரியாவுக்கு பிறந்தநாள் பரிசு தர விருப்பமா?...(8.9.2021)

மரியாவுக்கு பிறந்தநாள் பரிசு தர விருப்பமா?...

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்று தாய் தருபவையாக இணைந்து நாம் அனைவரும் அன்னை மரியாவின் பிறப்பு விழாவை கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.
திருஅவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிறந்த நாளை கொண்டாடுகிறது..

இயேசுவின் பிறப்பு விழா 
மரியாவின் திறப்புவிழா 
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா இவைகள் மட்டுமே திருஅவையில் கொண்டாடப்படுகின்ற பிறப்பு விழாக்கள் ஆகும் .

ஒரு குழந்தை பெற்றோர் வழியாக அறியப்படும் ஆனால் இங்கு குழந்தையின் வடிவாகவே பெற்றோர்கள் அறியப்படுகின்ற நிலை இந்த மூவருக்கும் உண்டு....

இயேசுவை குறித்து பேசுகின்ற போது இயேசுவின் தாய் மரியா அறியப்படுகின்றார். அதுபோலவே மரியாவை குறித்து பேசுகின்ற போது தான் மரியாவின் பெற்றோரான சுவக்கின் அன்னம்மாள் அறியப்படுகிறார்கள். இது திருமுழுக்கு யோவான் உடைய பிறப்புக்கும் பொருந்தும்.

ஒரு குழந்தையை வைத்து அதன் பெற்றோரை அறிந்து கொள்ளுதல் என்பது அந்த குழந்தை இந்த சமூகத்தில் ஏத்தகைய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகின்றது.

மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கும். வாழ்வின் நோக்கம் என்ன என தேடிக்கொண்டே மனித வாழ்வு பயனபடுகிறது. பலர் தங்கள் வாழ்வின் நோக்கம் இதுதான் எனக் கண்டுணர்ந்து அதற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து மகத்துவமான செயலில் ஈடுபடுகிறார்கள். அதுபோலவே மரியாவின் பிறப்பு இயேசுவை இவ்வுலகத்திற்கு கொண்டுவருவதற்கு உதவியாக அமைந்தது. திருமுழுக்கு யோவானின் பிறப்பு கூட இயேசுவை முன்னறிவிப்பதற்கான ஒரு காரணமாக அமைந்தது. 
பிறப்பு ஒரு எதார்த்தமாக இருந்தாலும் இறப்பு என்பது ஒரு சரித்திரமாக மாற வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இயேசுவின் இறப்பு சரித்திரமாக மாறியது. அதுபோலவே இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாவின் இறப்பு சரித்திரமாக மாறியது. அன்னை மரியாவை சிலுவையில் தொங்கும் போது இயேசு நம் அனைவருக்கும் தாயாக தந்தார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம் பெறுகிறது. இந்த மூதாதையர் பட்டியலில் இறுதியில் அன்னை மரியா யோசேப்பின் மனைவி எனவும் இயேசுவின் தாய் எனவும் அறிமுகப்படுத்தப்படுகிறார். 

ஏசுவின் தாயாக மாறுவதற்கு இந்த மரியாள் தன் வாழ்வில் செய்த தியாகங்கள் ஏராளம். மரியாவைப்  இளமைப்பருவம் பற்றிய குறிப்புகள் எதுவும் விவிலியத்தில் இல்லாத சூழ்நிலையலும் மரியாவைப் பற்றிய பல புத்தகங்களில் மரியாவின் குழந்தை பருவத்தை பற்றி படிக்கின்ற போது மரியா சிறுவயது முதலே கடவுளுக்கு அஞ்சி, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழக்கூடிய ஒரு பெண்மணியாக இந்த சமூகத்தில் வாழ்ந்தார் என்பதை கண்டுணர முடிகிறது. 

மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகிலே மகத்துவமான பணிகள் பல ஆற்றிடுவதற்காகவே இறைவன் படைத்திருக்கிறான். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு மரியாவின் பிறப்பு எப்படி மகத்துவமாக மாறியதோ அதேபோல நமது பிறப்பும் மகத்துவமானதாய் மாற வேண்டுமெனில் ஆண்டவருக்கு அஞ்சி கூடியவர்களாகவும் அந்த ஆண்டவரை மனதில் நிறுத்திக்கொண்டு இந்த சமூகத்தில் அடுத்தவர் நலனில் உதவக்கூடிய வகையில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும்.

 அகிலத்தின் நன்மைக்காக அத்தனை இடர்களையும் ஏற்றுக்கொண்டு அன்னை மரியா இயேசுவை தன் வயிற்றில் சுமந்து இயேசுவின் தாய்யாக மாறினார். அந்தத் தாய் நமக்கு தந்த இயேசு கிறிஸ்துவால் தான் நாம் அனைவரும் பாவத்தில் இருந்து மீட்கப்பட்டு இன்று நலமான வாழ்வை பரிசாக்கி கொண்டிருக்கிறோம்.

அன்னை மரியாவை போல நமது வாழ்வும் அடுத்தவர்களுக்கு பலன் தரக்கூடிய ஒரு வாழ்வாக மாறிவிட வேண்டும்.  இதுவே அன்னை மரியாவுக்கு பிறந்தநாள் பரிசாக நாம் கொடுக்கின்ற விலைமதிப்பில்லாத பரிசாக அமையும்.
எந்த ஒரு தாயும் தன் பிள்ளையின் நல்வாழ்வையும், நல் குணத்தையும் கண்டு மகிழ கூடியவளாக தான் இருப்பாள். நம் தாயான அன்னை மரியா நம்மை குறித்து மகிழ வேண்டுமாயின் நாம்  பொன்னோ, பொருளோ பரிசாக கொடுப்பதை விட இனி வருகின்ற நாட்களில் எல்லாம் நாமும் அன்னை மரியாவை போல அடுத்தவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய நல்லதொரு பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவோம் என்ற ஒரு உறுதிப்பாட்டை உள்ளத்தில் ஏற்போம்.  வெறும் உறுதியாக மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மேற்கொண்ட உறுதிப்பாட்டை செயலாக்க  முயல்வோம். அந்தச் செயல்தான் அன்னை மரியாவுக்கு நாம் அளிக்கும் மதிப்பில்லா பரிசாகும். 

 வாருங்கள் நம் தாய் அன்னை மரியாவுக்கு பிறந்தநாள் பரிசை கொடுத்து மகிழ்வோம்.

திங்கள், 6 செப்டம்பர், 2021

இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு இருக்கிறது....(07.09.2021)

இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு இருக்கிறது.

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் வாழுகின்ற இந்த சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நலமான பணிகளை செய்யக் கூடியவராக இருந்தார். இயேசுவின் செயலை கண்டு அவரது வார்த்தையும் வாழ்வும் இணைந்து இருப்பதைக் கண்டு பலர் அவரை நோக்கி வரத் தொடங்கினார்கள். இயேசுவும் தனக்குப் பிறகு இந்தச் சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபர்களை சமூகத்திற்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு பலரை தன் பணிக்காக அழைத்தார்.  

திரு அவையை உன்மேல் கட்டுவேன் என கூறிய பேதுரு தொடங்கி இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து வரை அனைவரையும் இயேசு ஒன்றாக கருதினார். அனைவருக்கும் நலமான பணிகளைச் செய்ய கற்பித்தார். தன்னைப் போலவே தன்னுடைய சீடர்களும் இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்வு வழியாகவும், வாய் மொழிகள் வழியாகவும் அவர்களுக்குக் கற்பித்தார்.

இயேசுவிடம் இருந்து கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடத்தை தங்கள் வாழ்வில் செயலாற்றத் தொடங்கிய சீடர்களின் வாழ்வு தொடக்ககால கிறிஸ்தவர்களை வலுவூட்டியது கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீதாக கொண்டிருக்கக்கூடிய பற்றை கண்டு ஒருபுறம் வியந்து போனவரான பவுல் மற்றொரு புறமோ இந்த இயேசுவின் பெயரை அறிக்கையிடுபவர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணத்தை தொடங்கியவர். ஆனால்  இயேசுவால் தொடப்பட்ட போது தன் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவராய் இயேசுவின் பெயரை அறிவிப்பவரை கொலை செய்வேன் என்று கிளம்பியவர் இயேசுவின் பெயரை அறிவிக்கும் சாட்சியாக மாறிப் போனார். அந்த பவுல் தான் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் கடவுளோடு இணைந்திருப்பதுதான் நிறைவு இருக்கிறது என்பதை நமக்கு கற்பிக்கின்றார். 
இயேசு நமக்காக இருந்தார். நமக்காக நம் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கியாவர்.  அந்த இயேசு கிறிஸ்துவை போல தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அமைய வேண்டும். இந்த இயேசுவைப் பின்தொடர்ந்த பவுலும் தன் வாழ்வில் பலவிதமான நற்செயல்களை எடுத்துரைத்து இறையாட்சியின் சமூகத்தையும் மண்ணில் மலரச் செய்வதற்கான முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி ஆண்டவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்தார். ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டிய இந்த பவுலின்  வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று நாம் நம்மையும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில்தான் நிறைவு இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு இம் மண்ணில் வாழும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட அனைத்து விதமான நற்பண்புகளையும் நாமும் நமது வாழ்வில் நமது செயல்கள் மூலம் வெளிகாட்ட கூடிய மக்களாக மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

ஆண்டவர் இயேசுவோடு இணைந்து இருப்பதில் தான் நிறைவு  இருக்கின்றது. அந்த நிறைவை கண்டுகள்ள இறைவன் நமக்கு உதவி செய்ய அருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

உள்ளங்கள் அன்பினால் ஒன்றாக வேண்டும்.(06.09.2021)

உள்ளங்கள் அன்பினால் ஒன்றாக வேண்டும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை அன்போடு ஏற்றுக் கொண்டு இன்புற்று வாழவேண்டும் என்ற செய்தியினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார் ஆனால் பல நேரங்களில் பலர் அடுத்தவரை நேசிப்பதை விட நேசிப்பவர்களாக நடிப்பவர்கள் ஆகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கை சூம்பிய ஒருவரை இயேசு கிறிஸ்து நலன் தர எண்ணியபோது இயேசுவின் செயலில் குற்றம் சாட்ட கூடிய மனிதர்களாய் அவரை கூர்ந்து நோக்கி அவர்கள் தான் அதிகமாக இருந்தார்கள் அவர்களின் உள்ளத்தை அறிந்த இயேசு அவர்களிடம் நல்லதை செய்வதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பிய போது அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார்கள்.

ஆனால் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு நலமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை நான் தனது செயலால் வெளி காட்டினார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாமும் ஒவ்வொரு நாளும் கண்ணில் காணக்கூடிய மனிதர்களையும் நம் அருகில் இருக்கக்கூடிய மரபுகளையும் அன்போடு அரவணைத்து அவர்களின் வாழ்வில அக்கரை கொள்ளக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் வாழ்ந்திட அழைக்கப்படுகின்றோம்.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அனைவரையும் ஒன்றாக கருதினர் அனைவரையும் அன்பு செய்தார் அவரை பின்பற்றுகின்ற நாம் எப்போதும் அந்த கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு எல்லா நேரத்திலும் அடுத்தவரை அன்பு செய்யவும் இயேசுவின் சீடர்கள் என்பதை வாழ்வு வழியாக வெளி காட்டவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

அன்பால் அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்றால் நமது உள்ளம் ஆனது அன்பால் நிரப்பப்பட வேண்டும் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஊக்கம் பெற்று அன்பால் ஒன்றாக்க வேண்டும் என அழைப்பு தருகின்றார் பவுலின் வார்த்தைகள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் நமது உள்ளம் ஊக்கம் பெற வேண்டும் என்றால் நமது இதயம் நிரப்பப்பட வேண்டும் அப்போதுதான் நாம் அடுத்தவரை அன்போடு அரவணைத்து ஒன்றாக இச்சமூகத்தில் ஆண்டவரின் சீடர்கள் என்பதை வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக வாழ முடியும் பழைய வாழ்வை நாம் பரிசாக இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்.

சனி, 4 செப்டம்பர், 2021

TEACHERS SURPRISE

 

TEACHERS SURPRISE

 


Dominic: Hey! Today is teacher's day lets give our teacher a big surprise.

Subodh: Come on lets sing a song before he walks in.

Which came first the chicken or the egg. [all the students join in]

(Teacher walks in:)

Students: Good afternoon to you (2)

Good afternoon dear teacher.

Teacher:  Good afternoon to you.  Please sit. Why do you make so much of noise? Can't you keep quiet?

Andrew: But sir

Royal: Oh Shut up will you? Can't you keep quiet.

Teacher: Eric, Shyjan, Jason, Osborn, Rolvin, Michael, Clarence, Dominic, Remol, Patrick…

((P A T R I C K) - Screaming His name loudly) Where is he?

Andrew: He is not keeping well.  He is suffereing from acid indigestion.

Teacher: Acid indigestion???

George: We work in the toilets every morning. Perhaps he would have had a little excess of acid.

Teacher: I think I better call out your roll numbers. Roll no. 16.

Royston: Sixteen (he says it & enters in singing) I am sixteen, going on 17, tomorrow is my birthday I will be having, fun and a party.

Teacher: May luck be on your way.

Royston: Excuse me sir. May I come in? ( with a  pile of books on his head)

Teacher: Yourth you are late, can you tell me why?

Royston: I walked this way and that way and this way and that way I saw a big sign board, speed breakers ahead. It said go slow and so I did.

Teacher: And here, from today we begin our new credit on logic. (dumps book on his head)

Royston: Yeh seer mange

Class: Nothing more.

Teacher: Now let me check all that you have learnt in Divyadaan.  I will give 10 mins. To go through your notes. ( walks up and down the classroom notices Agnello, and draws his attention in a different tone).

Why are you making a hole there.

Agnello: In Divyadaan, we are told that we should think critically. You said to go through my notes and that's precisely what I am doing making a hole to go through it.

Teacher: O.k. now. Who can tell me? (2) what is cognitive learning in this class here, who can tell me what is cognitive learning.

Eric: Ai ai ai aiya? I think I know it well ai ai ai aiyua I think I'm wrong.

Teacher: Can you tell me what the answer is my dear.

Eric: Cocomero, no no coconut. Coconut that means cognitive. Yes to learn from things around us or things exposed to.

Teacher: Could you give me an example.

Eric: Coconut is full of water and is good for your teacher. Coconut is full of iron makes you strong like a lion.

Teacher: O.k. that was good creativity. Who can tell me? (2) who are well known for Bhasyas,  in this class here who can tell me who are well known for Bhasyas.

Rajesh: Ai ai ai aiya, I think I know it well,

Ai ai ai aiya, I think I'm wrong.

Teacher: Can you tell me what the answer is my dear.

Rajesh: Is it Binu, Conrad, Clifford all these are right.

Class: He's a very funny chap, funny chap, funny chap. He's a very funny chap just give him a knock.

Remol: Teacher I can tell you the answer. It is Ramanuja, Madhava and Sankara.

Teacher: Grade! How did you manage it Remol.

Remol: Teacher more or less through cognitive learning.

Teacher: Who can tell me? (2) what does celibacy mean. In this class here who can tell me what does celibacy mean.

Andrew: Oh Teacher I know it. (putting his hand up) Thou shall not marry; thou shall have no wife; thou shall always be single for the rest of his life.

Teacher: You students are giving me vague answers. O.k. now who can tell me? (2) the arche according to Thales. In this class here who can tell the arche according to Thales.

Shyjan: Ai ai ai aiya. I think, know it well. Ai ai ai aiya I think I'm wrong.

Teacher: Can you tell me what the answer is my dear.

Shyjan: The arche according to Thales is H I J K L M N & O.

Teacher: What does that mean?

Jimmy: Teacher, it is water. He said his alphabets from H to O. which is the formula of water.

Shyjan: Teacher what is it, is it insight learning or cognitive learning.

Teacher: Is this a college of philosophy or psychology.

Patrick: after learning so many types and skills of learning, I have forgotten to memorize.

Teacher: Michael, this is my last question on logic for you today. Please make an attempt.

Michael: Yes teacher.

Teacher: For example, if you were on your way to the oratory on your cycle and if you meet with an accident and have lost your six fingers so what would be your answer?

Michael: Ai ai ai aiya. I think, know it well. Ai ai ai aiya I think I'm wrong.

Teacher: Can you tell me what the answer is my dear.

Michael: FANTASTIC, the answer is very simple. If it is particular then no typing classes but if it is universal then no catechism classes at St. Anne's.

Teacher: Oh no. Bad classes, always make me cry.

Rolvin: You don't need to cry for I will tell you why.

Hear O all you brothers of Divyadaan it is teachers day today. Let us gather and with our teachers a happy teacher's day.

 

நமது பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றுதானா?(05.9.2021)

நமது பார்வையும் இயேசுவின் பார்வையும் ஒன்றுதானா?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டுவதால் விளையும் நன்மை குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது:

நாம் வலு பெற்றவர்கள் மற்றும் ஒருவர் ஒருவரோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள் என்பதை பெரும் தொற்று மிக அதிகமாகவே நமக்கு உணர்த்தியுள்ளது. படைப்பின் மீதும், வரியவர், புறக்கணிக்கப்பட்டு பெரும் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டோர் போன்ற எல்லார் மீதும் நாம் அக்கறை காட்டாவிட்டால் உலகை நம்மால் குணப்படுத்த முடியாது என்ற சொற்கள் அவரது ட்விட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.

 ஒரு பழைய அருங்காட்சியகத்தில் பொருட்களெல்லாம் ஏலம் விடப்பட்டன. எல்லா பொருட்களையும் ஏலத்தில் பலர் போட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் ஒரு தூசி படிந்த வீணை மட்டும் விலை போகாமல் இருந்தது.  அதனை ஒருவர் எடுத்து துடைத்து அதன் கம்பிகளை முறுக்கி அதிலிருந்து இனிமையான இசையை  மீட்டினார்.  இசையைக் கேட்டதும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.  அனைவரும் அதனை போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதே வீணை தான் அதே இடத்தில் இருந்தது.  ஆனால், பலரின் கண்கள் அதன் மீது பதியவில்லை.  அதிலிருந்து அழகிய ஒலி எழுப்பப்படும் பொழுது அனைவரின் கண்களும் அதை நோக்கி திரும்பின.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் மீது அனைவரின் கண்களும் திரும்பியதற்கு அடிப்படை காரணம்,  அவரிடம் இருந்த மனித நேயத்தன்மை தான்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் ஏழை-  பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், அதிகாரம் கொண்டவன் - அதிகாரமற்றவன்,  நோயாளி- உடல் சுகம் கொண்ட நல்ல மனிதன் என ஒவ்வொருவரையும் பிரித்துப் பார்க்கவில்லை. அனைவரையும் சமமெனக் கருதினார்.  அனைவரையும் ஒன்றாக கருதினார். அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை வெளிக்காட்டும் விதமாக அவருடைய செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் ஆனதாக இருந்தது.

 இயேசுவின் மீது குற்றம் சாட்டி அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என எண்ணியவர்களுக்காகவும் அவர் பரிந்து பேசினார். இயேசுவை குற்றவாளி என தீர்ப்பிட்டு, கொடூரமாக தண்டித்து, சித்திரவதை செய்தவர்களுக்காகவும் அவர் இறைவனிடத்தில் மன்றாடினார்.  சமூகத்தில் தொட மறுத்த தொழு நோயாளர்களையும் தேடிச்சென்று தொட்டு குணப்படுத்தினார்.  இயேசு தன் வாழ்வில் அனைவர் மீதும் தன் கண்களை  பதிய வைத்தார்.  எனவேதான் அனைவரின் கண்களும் அவர் மீது பதிந்தன.  யார் இந்த இயேசு?  எப்படி இவர் இத்தகைய மனிதராக இருக்கின்றார்?  என்ற எண்ணம் கொண்டவராக ஒவ்வொருவரும் அவரை பின்பற்றக் கூடியவர்களாக மாறினார்கள்.  இன்று நாமும் ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறோம் என்றால்,  அவரிடம் காணப்பட்ட மனித நேயச்செயல்கள் நமது வாழ்விலும் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் விரும்புகின்ற, நாம் நம்புகின்ற,  அனைத்து விதமான நல்ல குணங்களின் தொகுப்பாக, முன்மாதிரியான வாழ்வாக, இந்த இயேசுவின் வாழ்வு இருந்தது என்பதும் தான்,  அடிப்படை காரணமாக இருக்கின்றது.  இந்த இயேசுவை பின்தொடர்ந்து செல்லக்கூடிய நாம் எப்போதும்,   அனைவர் மீதும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தி இன்றைய  வாசகங்கள் வழியாக நமக்கு தரப்படுகின்றது.  இன்றைய இரண்டாம் வாசகம் இதனை அழகாக எடுத்துரைக்கிறது.  சமூகத்தில் உயர்ந்தவர்  சமூகத்தில் தாழ்ந்தவர் எனக் கருதப்படக் கூடிய இருவரும் ஒரு இடத்திற்கு வருகிறார்கள் என்றால், நீங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

      அதுபோலவே இன்றைய முதல் வாசகமும் கடவுளின் வருகையின்போது பார்வையற்ற கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும், கால் ஊனமுற்றோர் துள்ளிக் குதிப்பர்.   வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற எசாயா இறைவாக்கினரின் முன்னறிவிப்புகள் அனைத்துமே, இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவேறுவதை நாம் காணமுடிகிறது.  பேச்சிழந்த ஒருவருக்கு இயேசு, பேசும் திறனை கொடுக்கக் கூடிய நிகழ்வினை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இயேசுவின் செயல்பாடுகளை கண்ட ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் பார்வையைப் பதிய வைத்தார்கள்.  இயேசுவின் பார்வை சமநிலை கொண்டதாக அனைவர் மீதும் விழுந்ததன் அடிப்படையில் அனைவரின் கண்களும் அவரை உற்று நோக்கத் தொடங்கின.  எனவே தான் எத்துணை நன்றாக யாவற்றையும் இவர் செய்து வருகிறார் என அனைவரும் பேசக் கூடிய சூழல் அங்கு உருவானது.


வியட்நாம் நாட்டில் covid-19 பெருந் தொடரின் நான்காவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இவ்வாண்டின் கோடையில் அந்நாட்டில் எழுபத்தி எட்டு திருத்தொண்டர்கள் அருள் பணியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஏறத்தாழ 250 இருபால் துறவியர்கள் எண்ணங்களை எடுத்துள்ளனர் இந்த இறை அழைத்தல் வியட்நாம் திருஅவைக்கு நற்செய்தியாகும் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது ...

 இன்றும் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பலரும்  பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவருடைய செயல்களும் அவருடைய சொல்லும் இணைந்திருந்தது. அவர் சொன்னது அனைத்தையும் தன் செயல்களில் வெளிக்காட்டினார்.  ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்து செல்லக்கூடிய மனிதனாக அல்ல. சொல்லக் கூடிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் வழிகாட்டக்கூடிய மனிதனாக, தான் வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு முன்மாதிரியான வாழ்வை அவர் வாழ்ந்து காண்பித்தார். 

        எனவே தான் அனைவரும் அவரை பின்பற்றக் கூடியவர்களாக அவர்மீது கண்களைப் பதிய வைக்க கூடியவராக மாறினார்கள். 

       இன்று  நாம் வாழுகின்ற இன்றைய சூழலில்  கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸின் தாக்கம்,  இரண்டு வருடங்களுக்கு மேலாக நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.  எப்போது இந்நிலை மாறும் எனத் தெரியாத  வண்ணமாய் இருக்கிறது. அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து நோயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தாலும், தனது வீரியத்தை மாற்றிக்கொண்டு பாதிப்புகளை அதிகம் ஆக்குவதற்கான முயற்சிகளைத் தான் இந்த வைரஸானது,  செய்து கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமது பார்வையை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம். 
  நமது பார்வை இயேசுவின் பார்வை போலத்தான் இருக்கிறதா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது,  அனைவர் மீதும் தன் கண்களை பதிய வைத்தார். ஆனால் இன்று நமது பார்வை, குறுகிய பார்வையாக அமைந்துள்ளது.  பாரதிதாசன் கூறுவது போல, தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என வாழ்வோன் கடுகுள்ளம் கொண்டோன் என்று கூறக்கூடிய வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில்,  நான், எனது குடும்பம், எனது பிள்ளைகள், என்னுடைய உறவினர்கள்,  என்னுடைய மதத்தைச் சார்ந்தவர்கள், எனது இனத்தைச் சார்ந்தவர்கள் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நாம் தொடரும் நிலை உருவாகி வருகிறது. 

 ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாக நம்மை சுருக்கிக்  கொண்டு வாழும் சூழல் தான் இன்று இயல்பாக இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.  நமது பார்வைகள் இயேசுவின் பார்வைகளாக மாறும் பொழுது,  இயேசுவின் மீது எப்படி அனைவரின் பார்வையும் பதிகிறதோ,  அதுபோல நம் மீதும்  பதிகின்ற சூழல் உருவாகும். நாம் இயேசுவாக மாறிடவும் இயேசுவாக இச்சமூகத்தில் வாழ்ந்திடவும் அழைக்கப்படுகின்றோம். நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்,  அந்த இயேசு. இந்த இயேசுவை, பின்பற்றுகின்ற நாமும் நமது பார்வையை குறுகிய பார்வையாக வைத்துக்
கொள்ளாது,  இந்த சமூகத்தில் பரந்துபட்ட பார்வையாக்கி,  அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள், கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய்,   ஒவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக எண்ணி, உறவுகளாக,  சாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து,  அனைவருக்குமான பணியினை ஆற்றிட முயலுவோம்.  அப்போது இறைவன் இயேசுவும் நம்மைக் குறித்து மகிழக் கூடிய சூழல் உருவாகும்.  ஆண்டவர் இயேசுவும் நம்மை குறித்து மகிழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பெயர் அளவில் அவரை பின்பற்றுகிறோம் எனச் சொல்லிவிட்டு,  செயலில் காட்டாதவர்களாக இல்லாது, ஆண்டவர் இயேசுவைப் போல, சொல்லும் செயலும் இணைந்து போகக்கூடிய ஒரு வாழ்வை, நாம் வாழ்ந்திட இறை அருளை வேண்டி இணைந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

மண்ணில் மலர வேண்டியது மனித நேயமே!...(4.9.2021)

மண்ணில் மலர வேண்டியது மனித நேயமே!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
      இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்முள் மனிதநேயம் மலர வேண்டும் என அழைப்பு தருகின்றார். ஆம்! பசியில் இருந்த சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டபோது அவர்களின் செயலை குற்றம் சாட்டினார்கள், பரிசேயர்கள். ஓய்வுநாள் சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் உங்களுடைய சீடர்கள் என்று இயேசுவிடம் குற்றம் சுமத்தினார்கள்.

 கதிர்களைக் கொய்து உண்பது குற்றமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கும் பொழுது,  ஓய்வு நாள் சட்டத்தின் அடிப்படையில் இதனை சிந்திக்கின்ற பொழுது, கதிர்களை கொய்வது என்பது அறுவடைக்கு சமமாக பார்க்கப்படுகிறது. கைகளில் கசக்கித் தின்பதை  நெல்லிருந்து உமியை பிரித்தெடுப்பதாக பார்க்கப்படுகிறது.  இவை இரண்டும்  விவசாயம் சார்ந்த வேலைகள் ஆகின்றன.  இந்த வேலைகளை அவர்கள் செய்வதாகக் கூறி,  ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக அவர்கள் மேல் குற்றம் சுமத்தப்படுகிறது.

    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ, சட்டம் என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது,  சட்டத்திற்காக மனிதன் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக, தாவீது பசியால் இருந்த போது என்ன செய்தார் என்பதை மேற்கோள்காட்டி,  தன் சீடர்களை குற்றவாளிகள் என்றவர்களை வாயடைக்கச் செய்யக்கூடிய பணியினை இயேசு செய்கின்றார். 

             ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவி செய்யத்தான் நாம் ஒவ்வொருவருமே படைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய நாளில், இன்றைய உலகில், ஆபத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால், அதனை புகைப்படம் எடுத்து மற்றவரோடு பகிரக் கூடியவர்களாகத் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நவீன உலகில் மனித நேயம் என்பது மறைந்து கொண்டே செல்கிறது.  ஆனால்,  இயற்கைப் பேரிடர்களும், இயற்கைச் சீற்றங்களும், கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா தொற்றுநோயும் நம்முள் இருக்கும் மனிதநேயத்தை மீண்டும் தூண்டிப் பார்க்கும் விதமாக, நம்மை மனிதநேயம் கொண்ட மனிதர்களாக மாறிட, ஏதோ ஒரு விதத்தில் நம்மை தட்டி எழுப்பி உள்ளன என்று தான் இன்றைய சூழலை கருத முடிகிறது.

          நிகழும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், நலன் காக்க வேண்டும் என்பதற்காக பலர் செய்கின்ற தியாகங்கள் ஏராளம். இந்தத் தியாகங்கள் எல்லாம் ஏதாவது ஒரு இயற்கை பேரிடர் வந்தாலோ, அல்லது ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டாலோ மட்டுமே எழக் கூடியது அல்ல. மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு நிமிடமும்,  நமது வாழ்வில் இந்த மனித நேயக் குணமானது, மனிதநேயப் பண்பானது வெளிப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல, இந்த சமூகத்தில்,  துன்புறக்கூடிய ஒவ்வொருவரையும் கண்டு, அவர்களின் துன்பத்தைத் துடைக்கக் கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் இருக்க அழைக்கப்படுகின்றோம்.  அழைக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நாம் மாறிட முயல்வோம். 

                 இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டது போல, நாம் பல நேரங்களில் இறைவனோடு உறவற்றவர்களாக இருந்தோம். இறைவனோடு உறவற்றவர்கள் என்றால், சின்னஞ்சிறியவருக்கு நீங்கள் செய்யாததெல்லாம், இறைவனுக்கு செய்யாததாகக் கருதப்படுகிறது.  சின்னஞ்சிறியோருக்கு நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் கடவுளுக்கே செய்ததாக கருதப்படுகிறது.  நாம்  துன்பத்தில் இருப்பவரைக் கண்டு,  நம்முள் இருக்கும் மனிதநேயத்தை தட்டி எழுப்பி அவரது துன்பத்தை துடைக்கும் பணியில் ஈடுபடாமல் இருந்திருப்போமாயின்,  நாம் கடவுளை விட்டு சற்று அப்பால் தான் நிற்கிறோம் என்பது உண்மையாகிறது.  இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மையே நாம் சுய ஆய்வு செய்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனி வருகின்ற நாட்களில் இந்த சமூகத்தில் சமத்துவமான, நீதியான, நல்ல பணிகளை, அதிலும் குறிப்பாக மனித நேயப் பணிகளை  இச்சமூகத்தில் செய்ய அழைப்பு தருகின்றார்.  அழைக்கும் இறைவனின் குரலுக்கு கொடுத்து, வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.

வியாழன், 2 செப்டம்பர், 2021

சட்டங்கள் பேசுகின்றனவா? மனிதர்கள் பேசுகின்றனரா?...(3.9.2021)

சட்டங்கள் பேசுகின்றனவா? மனிதர்கள் பேசுகின்றனரா?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில், என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 மனம் என்பது ஒரு குரங்கை போன்று கிளைக்கு கிளை தாவி கொண்டே இருப்பது. மனம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த உலகத்தில் மாறாதிருப்பது சட்டங்களே!  இவைகளை நாம் தான் மாற்றியாக வேண்டும்.  ஆனால், மக்கள் நலன் முன்னிருத்தப் படக்கூடிய சட்டங்களுக்காக,  மக்கள் போராடி மாற்றத்தை கொண்டு வருகிறார்கள்.  ஆனால் மக்களை கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என எண்ணக்கூடிய சட்டங்கள் எப்போதும் மாறாதே இருந்து வருகிறது.  அதனை மாற்ற யாரும் விரும்புவதில்லை. 

 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட,  பழைய சட்டங்களை சுட்டிக் காண்பித்து,  இயேசுவின் சீடர்கள், மரபை பின்பற்றவில்லை, பழைய சட்டங்களை பின்பற்றவில்லை, மூதாதையர்கள் உருவாக்கிய சட்டங்களை மீறுகிறார்கள் என்ற செய்தியினைக் கூறி, அவர்களை குற்றம் சாட்டக்
கூடிய பணியில்,  பரிசேயர்களும் சதுசேயர்களும் ஈடுபடுகிறார்கள்.  ஆனால் இயேசுவோ, வெறுமனே  சட்டத்தை பிடித்துக் கொண்டிருப்பதை விட,  அந்தச் சட்டத்தால் முன் நிறுத்தப்படுவது எது? அந்த சட்டம் எதற்காக?  அந்த சட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மை நோக்கம் என்ன?  வெறுமனே எழுதப்பட்ட சட்டத்தை தூக்கிக்கொண்டு நிற்பதா?  அல்லது அந்த சட்டத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அதனை பின்பற்றக் கூடியவர்களாக இருப்பதா? என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக தன் சீடர்கள் சார்பாக பேசுகிறார். 

         இன்று! நம் சார்பாக பேசுவதற்கு யார் இருக்கிறார்? என்ற எண்ணம் தான் பலரை, நல்ல செயல்களைக் கூட செய்ய விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.  உருவாக்கப்படக்கூடிய சட்டங்கள் மக்களின் நலனுக்கானது அல்ல, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என அறிந்தாலும் கூட, அதை குறித்து பேசுவதற்கு இன்று பலரும் தயக்கம் காட்டி நிற்கிறார்கள்.  ஏன்? இத்தகைய தயக்கமென சிந்திக்கின்ற போது, மக்களின் நலம் சார்பாக பேசும்போது, பேசுபவருக்கு துணையாக, உறுதுணையாக இயேசுவைப் போல இருக்கக் கூடியவர்கள் இருக்கிறார்களா?  என்ற கேள்வி முன் வந்து செல்கிறது. 

                 உண்மையைப் பேசினாலும், நல்லதைச்
சொன்னாலும்,  நம் சார்பாக ஆட்கள் இல்லை என்றால், அது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆளும் வர்க்கம் சட்டங்களை இயற்றுகிறது.  இயற்றப்பட்ட சட்டங்கள் நலமானது இல்லை என அறிந்தாலும், அதனை மாற்ற இயலாத சூழ்நிலையில் தான் இன்று பலர் இருக்கிறோம். சட்டங்கள் மாற்ற இயலாதவை அல்ல,  மாற்ற இயலும்.  அதற்கு ஒவ்வொருவரின் துணையும் தேவைப்படுகிறது.  
         ஒரு கை ஓசை எழுப்பாது எனக் கூறுவார்கள்.  இரு கை இணைந்தாலே,  ஓசை எழுப்ப முடியும் என்பார்கள். ஒருவர் மட்டுமே மாற்றத்தை நோக்கி நல்லதை முன்னிறுத்தி, கத்திக் கொண்டே இருப்பதால் மாற்றம் நிகழும், ஆனால் உடனடியாக அல்ல, தாமதமாகவே. பலருடைய காதுகளுக்கு இவரது குரல் எட்ட வேண்டும்.  அப்போது இவரது கருத்தைப் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேருகின்ற போது தான், ஒரு மாற்றமானது ஏற்பட இச்சமூகத்தில் வாய்ப்புகள் உருவாகின்றன. 

       ஆனால், இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்கள் செய்ததை சரி, தவறு என நியாயப்படுத்தவில்லை. சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன? என்பதை மட்டுமே தெளிவுபடுத்தக் கூடியவராக இருக்கிறார். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நல்லதை மனதில் இருத்தி,  நல்ல பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களுக்கு உறுதுணையாக, பக்கபலமாக இருந்து,   நல்ல சட்டங்கள் இச்சமூகத்தில் உருவாகவும்,  தவறான, நலமற்ற சட்டங்கள் அகற்றப்படவும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.  ஒருங்கிணைந்து செயல்படுவோம். படைப்பனைத்திற்கும் முதல் பேறாக இருக்கக் கூடிய இறைவன் எப்போதும்
நம்மோடு இருக்கிறார்.  அவரைப் பின்பற்றுகிற நாமும் அவரைப் போல நல்லதை முன்னிறுத்தி குரல் எழுப்பக் கூடியவர்களுக்கு உறுதுணையாக இருந்து, நல்லதொரு மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்க முயலுவோம்.

புதன், 1 செப்டம்பர், 2021

தேடி, கண்டு கொள்ள... (22.7.2021)

தேடி, கண்டு கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
             இன்றைய நாளில் நாம்  அனைவரும் இணைந்து மகதலா மரியாவை நினைவு கூருகிறோம். திருஅவை இவரை நினைவு கூருவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த பெண்மணி தான் முதன்முதலில் ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை சீடர்களுக்கு அறிவித்தவர். இந்தப் பெண்மணியைப் பற்றி விவிலியத்தில் பலவற்றை நாம் காண முடியும். இந்த பெண்மணியிடம் இருந்து தான்  ஆண்டவர் ஏழு பேய்களை ஓட்டினார் என விவிலியத்தில் கூறப்படுவதாக விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த பெண்மணி தான் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இந்த பெண்மணி தான் ஆண்டவர் இயேசுவின் இறப்பின் போது அவரது சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண். தனது வாழ்வில் தடம் புரண்டு இருந்த இந்த பெண்மணி, ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்ட போது, மனம் மாறினார், தன்னுடைய செயல்களை திருத்திக் கொண்டார். தன்னிடம் இருந்த அனைத்து விதமான தீய பழக்கங்களையும் விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடத்தியாக மாறிப்போனார். ஆண்டவர் இயேசுவை பின்தொடர்ந்தார். அவரது பணி வாழ்வில் அவரோடு நின்றார்.  அவரது மரணத்திலும் அவரது சிலுவை அடியில் நின்று மரியாவுக்கு பக்கபலமாக இருந்தார்.

 இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  மகதலா மரியாவை போல பாவ  வாழ்வில் உழலக் கூடியவர்கள் ஏராளமானோர். ஆனால் நமது வாழ்வை அலசிப்பார்த்து திருத்திக்கொண்டு, ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கு இந்த பெண்மணியின் வாழ்வு நமக்குக் கற்பிக்கின்றது. அப்பெண்மணியின் வாழ்வு நமக்கு கற்பிக்கின்ற பாடத்தை உணர்ந்து கொண்டு, வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து, அந்த பாவங்களை விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக நாமும் இந்த மகதலா மரியாவை போல மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

 எனவேதான் திருஅவையானது இந்த பெண்மணியை பற்றி நினைவு கூருகின்றது. ஒருவரை பற்றி நினைவு கூருகின்ற போது, அவரின் வாழ்வில் நடந்தவைகளை மனதில் கொண்டு, நமது வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இன்றைய நாளில் நாம் நினைவுகூரக் கூடிய இந்த மகதலா மரியாவின் வாழ்வு, நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. அதுதான்  நாம் நமது வாழ்வில் பின்பற்றுகின்ற தீய பழக்கங்களிலிருந்து மனம் மாறி, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாற முடியும் என்ற பாடம். இந்த பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக,  நமது வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து அவற்றை மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். இயேசுவை தேடி, கண்டு கொண்ட மகதலா மரியாவை போல, நாமும் ஆண்டவரை அறிக்கையிடக் கூடியவர்களாக மாறுவோம்.

ஆழத்திற்கு செல்ல ஆவிக்குரிய வாழ்வு அவசியம்... (2.9.2021)

ஆழத்திற்கு  செல்ல ஆவிக்குரிய வாழ்வு அவசியம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

ஓய்வு என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது அல்ல ஒன்றல் இருந்து இன்னொரு செய்கைக்கு சென்று மூளையின் பயன்படாத பக்கங்களையும் புழக்கத்திற்கு கொண்டு வருவது என இறையன்பு அவர்கள் கூறுவார்.
நாள் முழுவதும் கடினப்பட்டு உழைத்து எந்த ஒரு மீன் பாட்டையும் கண்டிராத சூழ்நிலையில் பேதுரு நம்பிக்கை இழந்து ஓய்வெடுத்த நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் மீண்டும் கடலுக்குள் சென்று இயேசு கூறிய இடத்தில் வலைவிரித்து பல மீன்களை அள்ளி வந்தார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்ற செய்தியாக இருக்கிறது.

வாழ்வில் முடங்கி போகின்ற சூழலிலும் கடவுள் நம்மை முடங்கி விடாது பாதுகாப்பார். நம்மை வைத்து நலமான பல நல்ல காரியங்களை இச்சமூகத்தில் செய்வார். அதற்கு நாம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாய் நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர கூடியவர்களாய் இருக்க வேண்டும். நம் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதிக படவேண்டும், ஆழப்படப்பட வேண்டுமாயின்... நாம் நம்மை  உணர வேண்டும், நம்மை நாம் உணரும்போது தான் நம்முள் உறைந்திருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். இறைவனை அறிந்து கொள்வது தான் ஆவிக்குரிய வாழ்வு என இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள கூடியவர்களாய் இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் அவருக்கு அழைப்பு தருகின்றார்.

நாம் நமது வாழ்வில் கொலோசையர் நகர மக்களைப்போல அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்த அவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராய் நடந்து கொள்ள வேண்டும. 

பிறருக்கு பயன் தரக்கூடிய வகையில் நற்செயல்களைச் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் நாளும் வளர வேண்டம். வளருகின்ற சூழ்நிலையில் அல்லது நமது குழந்தைகளை இவ்வாறு வளர்கின்ற சூழ்நிலையில் பலவிதமான தடைகளை நாம் சந்திக்க நேரலாம். பல நேரங்களில் ஏமாற்றங்கள் நமக்கு பரிசாக கிடைக்கலாம். எப்படி பேதுரு கடினமாக உழைத்தும் மீன்பாடு எதுவும் கிடைக்காமல் இருந்ததோ அது போல நமக்கும் அதே சூழ்நிலை உருவாகலாம். ஆனால் நம்பிக்கை இழக்காத மனவுறுதியோடு பொறுமையோடும் நாம் கடவுளை நம்பி அனைத்து விதமான நல்ல பணிகளையும் முன்னெடுக்க கூடியவர்களாய் இச்சமூகத்தில் செயல்பட வேண்டும் அவ்வாறு செயலாற்றும் போது இறைவன் தாமே நம்மோடு இருந்து பேதுருவை ஆழத்திற்கு சென்று வலையை வீசும் என வழிநடத்தியது போல நம்மையும் வழிநடத்திக் நலமான நல்ல பணிகளை நம்மை கொண்டு இச்சமூகத்தில் செய்யக்கூடிய உண்மை பணியாளர்களால் நம்மை மாற்றிட துணைபுரிவார். 
ஏசுவின் பாதையில் இணைந்து அவரை போலவே இந்தச் சமூகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டக் கூடிய நல்ல பணியாளர்கள் மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...