செவ்வாய், 6 செப்டம்பர், 2022

அன்பின் தேவதை - அன்னை தெரசா! (5-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                             இன்று தாய்த்திரு அவையானது, புனித அன்னை தெரசாவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு முழுவதையும் திருப்பிப் பார்த்தாலும்,  அவரின் வார்த்தைகள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தாலும்,  அனைத்தும் வலியுறுத்துவது அன்பு என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே.

 இந்த அன்பை உணர்ந்து கொண்ட ஒரு பெண்மணியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப் பட்டவர்களையும், கைவிடப்பட்டவர்களையும், நோயாளிகளையும், அன்பு செய்து, அவர்களை பராமரித்து பாதுகாக்கின்ற பணியினை செய்த அன்னை தெரசாவை நினைவு கூருகின்ற இந்த நாளில்,  நாமும், நம் மத்தியில் வாழுகிற, தேவையில் இருக்கின்ற மனிதர்களை இனம் கண்டு கொண்டு,  அவர்களின் தேவையில் உடன் இருக்கவும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தரவும், தேவையில் இருப்பவரை கவனித்துக் கொள்ளவும் அழைப்பு தரப்படுகிறது. 

        இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாக, அன்பை மட்டுமே முன்னிறுத்தி, அனுதினமும் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வார்த்தைகளை வாழ்வாக்குவோம்! (4-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                நாம் ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அனைத்தையும் இழக்கத் துணிந்த உண்மையான சீடர்களாக வாழ இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருமே, அவருக்காக தங்கள் வாழ்வையே இழக்க துணிந்தார்கள். அவர்களுள் பலரை நாம் புனிதர்களாகக் கொண்டு,  ஒவ்வொரு நாளும் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
      
                   இந்த புனிதரின் வாழ்வானது நாமும் அவர்களை போல, ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி, அவருக்கு உகந்த மனிதர்களாக, அவரின் உண்மை சீடர்களாக நாமும் மாறிட முடியும் என்ற வாழ்வுக்கான பாடத்தை நமக்கு ஒவ்வொரு நாளும் தருகிறது.

        தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவர் இயேசுவுக்காக இழக்கத் துணிந்த மனிதராக இன்றைய வாசகங்கள் பவுலடியாரை சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டவர் இயேசுவுக்காக அனைத்தையும் குப்பையென கருதுகிறேன் என அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவை மட்டுமே இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவரின் பாதையில் அனுதினமும் நடந்த பவுல் அடியாரைப் போல, நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக,  நாளும் இச்சமுகத்தில் பயணம் செய்து, உண்மைச் சீடர்களாக மாறிட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
           

ஆண்டவர் இயேசுவை அறிக்கையிடுவோம்! (3-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, பலவிதமான பாடங்களை தம் சீடர்களுக்கு கற்பித்தார். சின்னஞ்சிறிய உவமைகள் வாயிலாகவும், பல நிகழ்வுகள் வாயிலாகவும், வாழ்வுக்கான பாடத்தை கற்பித்தார். இந்த கற்பித்தலை உள்வாங்கிக் கொண்ட இயேசுவின் சீடர்கள், உலகெங்கும் சென்று அதை மற்றவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் அடிப்படையில் நாமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி நாளும் அறிந்திருக்கிறோம்.  நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசுவைக் குறித்து அறிக்கை இடுகின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்பதற்கான ஒரு அழைப்பை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

           இறைவன் தரக்கூடிய இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவரைப் பற்றி அறிவிப்பவர்களாகவும், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாகவும் நாம் இச்சமூகத்தில் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று எழுப்பி பார்ப்போம். ஆண்டர் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கின்ற நாம், அவரிடம் காணப்பட்ட இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும் நமது வாழ்வில் நமது செயல்கள் மூலமாக பின்பற்றக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஆற்றலை  வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


      
     

தீர்ப்பிடாதே! (2-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                  இன்றைய முதல் வாசகமானது,  நாம் யாரையும் தீர்ப்பிடாமல் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது.  நாம் மனிதர்களின் தீர்ப்புக்கு அஞ்சுவதை விட, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் நாளும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளை சிறப்போடு செய்வதற்கான அழைப்பு, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

      இன்றைய நற்செய்தி வாசகத்தில் பழைய ஆடையில் யாரும் புதிய துணியை ஒட்டு போடுவதில்லை,  பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றுவதில்லை என்ற வார்த்தைகள் வழியாக இறைவன் அன்றன்றைய நாளுக்குரிய வேலைகளை அன்றன்று செய்வதற்கான ஒரு அழைப்பை  இறைவன் தருகின்றார்.  அன்றைய நாள் வேலைகளை அன்றே நாம் செய்து முடிக்கின்ற போது, அடுத்த நாளில் அடுத்த நாளுக்கான வேலைகளை குறித்து நமது கவனத்தை செலுத்த இயலும்.

    மாறாக இன்றைய நாள் வேலைகளை நாம் இன்று செய்யாமல் அதை அடுத்த நாளுக்கு கடத்திச் செல்கிற போது நமது வாழ்வில் பணிச்சுமையானது அதிகமாகி கொண்டே செல்கிறது. 

    அன்றைய நாளுக்குரிய வேலைகளை    அன்றன்றைக்கு செய்து,  நாம் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுளின் தீர்ப்புக்கு மட்டுமே அஞ்சக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வழங்குகின்றார். 

      இந்த இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நம்மை நாம் செதுக்கிக்கொண்டு நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொள்வோம்! (1-9-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

               
       நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவுக்கு உரியவர்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே, அவரைச் சார்ந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, ஒவ்வொரு நாளும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார்.

    ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்த சீடர்கள், பல நேரங்களில் அவர் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், அவரின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக இருந்தார்கள் என்பதை விவிலியத்தில் பல பகுதிகளில் நாம் காணலாம்.

        அதிலும் குறிப்பாக, இன்று நாம் வாசிக்க கேட்ட நற்செய்தி வாசகத்தில்,  இரவு முழுவதும் மீனைத் தேடி, ஒன்றும் கிடைக்காத சூழ்நிலையில், மீண்டுமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூற, ஆண்டவரின் வார்த்தைகளை தங்கள் வாழ்வாக்கிக் கொண்டு, ஆழத்திற்கு சென்று வலைகளைப் போட்டு மிகுதியான மீன்பாட்டை சீடர்கள் கண்டார்கள் என்பதை இன்றைய செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.

       சீடர்களின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற  வாழ்வுக்கான பாடம், கிறிஸ்துவுக்கு உரியவர்களாகிய நாம்,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக,  நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக, இறைவன் நமக்கு உணர்த்துகிறார். நாமும் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய ஆவியாரின் இயல்பு நம்மிடம் மலரட்டும்! (31-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

                
       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, சென்ற இடமெல்லாம் நன்மையை செய்து கொண்டே சென்றார். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட காய்ச்சலாய் இருந்த பேதுருவின் மாமியாருக்கு அவர் நலம் தருவதையும்,  நம்பிக்கையோடு அவரை நாடி வந்த பலருக்கு அவர் நலம் தருவதையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்கு நல்லது செய்கின்ற நபர்களாக வாழ்வதற்கான ஒரு அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது.

         இத்தகைய வாழ்வை வாழுகிற போது, நாம் ஊனியல்புக்கு ஏற்ப வாழாமல் தூய ஆவியாரின் இயல்புக்கு உரியவர்களாக நாம் இச்சமூகத்தில் வாழ முடியும். 

        பல நேரங்களில் ஊனியல்புக்கு உரிய மனிதர்களாக, தூய ஆவியானவரை தவிர்த்து விட்டு, நமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், தூய ஆவியின் இயல்புக்குரிய மனிதர்களாக நாளும் நாம் வளர வேண்டும் என்பதை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.

           இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, தூய ஆவியாரின் இயல்புக்குரிய மனிதர்களாக, நாளும் வாழ,  உலக இச்சைகளை எதிர்கொண்டு, ஆவியானவரின் துணைகொண்டு, இச்சமூகத்தில் அனுதினமும் நன்மைகளை மட்டுமே செய்து கொண்டிருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் இன்றைய நாளில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வு. (30-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


இன்றைய நாள் இறை வார்த்தையானது தூய ஆவிக்குரிய இயல்பு கொண்ட மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கண்டு, வியந்து போன மக்கள், எங்கிருந்து இவருக்கு இந்த ஞானம் வந்தது என வியந்தார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமும் அவரைப் போலவே இந்த சமூகத்தில் அதிகாரத்தோடு நல்ல செயல்களை முன்னெடுக்கக் கூடியவர்களாக நல்ல காரியங்களை துணிவோடு அறிவிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இன்று தருகிறார். 
           இதற்கான வல்லமையை தூய ஆவியானவர் என்றும் நம்முள் இருந்து நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து அவருக்குரிய இயல்புகளை பெற்றுக் கொண்ட மனிதர்களாக நாளும் இச்சமூகத்தில் நாம் வளர்ந்திட, இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

திருமுழுக்கு யோவானின் நீதி! (29-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

               இன்று தாய்த்திரு அவையானது, திருமுழுக்கு யோவானின் பாடுகளை நினைவு கூர்கின்றது. பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு இறைவாக்கினராக இந்த திருமுழுக்கு யோவான் இருக்கின்றார். இந்த திருமுழுக்கு யோவானின் வாழ்வு, மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்ற, மலைப்பொழிவில் இடம் பெறுகின்ற, நீதியின் பொருட்டு துன்புறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ப அமைந்த ஒரு வாழ்வாக பார்க்கப்படுகிறது. 

         நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தவறான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அரசனையும் அரசன் எனப் பாராது, அவன் செய்வது தவறு என்பதை துணிவோடு எடுத்துரைக்கக்கூடிய ஒரு நபராக திருமுழுக்கு யோவான் இருந்தார். அத்தகைய செயல்பாட்டின் விளைவாக, தனது இன்னுயிரையும் இழக்க நேர்ந்தது. அவர் தனது இன்னுயிரை இழந்ததை இன்று நாம் தாய்த்திரு அவையாக நினைவு கூருகிறோம். இவரின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், எந்நிலையில் இருந்தாலும் நாம் தவறை சுட்டிக்காட்டும் பண்புடைய மனிதர்களாக நாளும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார். நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்ட மனிதர்களாக, நாம் இருக்கும் பொழுது, நாம் கண்டிப்பாக நிறைவு பெறுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி, இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

தாழ்ச்சியின் வலிமை! (28-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


                  இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே, தாழ்ச்சியோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பினை தருகின்றன. 

    இன்றைய முதல் வாசகம் நாம் பெரியவருக்கு பணிந்து எப்போதும் தாழ்ச்சியுள்ள மனிதர்களாக இச்சமுகத்தில் வாழ வேண்டும் என்ற அழைப்பை வலியுறுத்துகின்றன. 

     இதே அழைப்பினை  இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, திருமண வீட்டிற்கு செல்லுகின்ற ஒரு நிகழ்வு வழியாக வலியுறுத்துகிறார்.  முதன்மையான இடத்தை தேடுகிற நபர்களாக அல்லாமல், இறுதியான இடத்தை தேடுகின்ற நபர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார்.  பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், நாம் நம்மை குறித்து பெருமை கொள்வதை விட, ஆண்டவர் இயேசுவை குறித்து பெருமை கொள்ளக் கூடியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக எப்போதும் தாழ்ச்சியோடு வாழ இறைவன் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக அழைப்பு தருகின்றார். 

       தாழ்ச்சியுள்ள மனிதர்களாக வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

புனித மோனிகா - சிறந்த முன்மாதிரி! ( 27-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


         இன்று தாய்த்திரு அவையானது, புனித அகுஸ்தினாருடைய தாயாகிய புனித மோனிகாவை குறித்து சிந்திக்க இன்று நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 

      தன் மகனின் தடம் புரண்ட வாழ்வு, மாற்றம் பெற வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்தியவராய் ஒவ்வொரு நாளும் கடவுளிடம் மன்றாடிய ஒரு பெண்மணியாக புனித மோனிகா அவர்கள் திகழ்ந்தார். இந்த புனித மோனிகாவைப் போல நாமும், நாம் வாழுகின்ற சமூகத்தில் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளை, நமக்கு கடவுள் கொடுத்திருக்கக்கூடிய உறவுகளை எப்போதும் அன்பு செய்யவும், அவர்களின் நலனுக்காக, அவர்களின் தடம் புரண்ட வாழ்வு நெறிப்பட வேண்டும் என்பதற்காக கடவுளை நோக்கி மன்றாடக் கூடிய மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்ற அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார்.  நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற  பொறுப்புகளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதற்கான கணக்கினை நாம் கடவுளுக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளை, கடமையை உணர்ந்து செய்யக்கூடிய மனிதர்களாக, நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகிறார்.

            இறைவன் அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, வாழ்வை நெறிப்படுத்திக் கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை அடுத்தவர் நலனுக்கென அர்ப்பணிக்கின்ற மனிதர்களாக நாம் வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

விழிப்பாய் இருந்து நற்செய்தி பணியாற்றுவோம். (26-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 


       இன்றைய நாள் இறை வார்த்தைகள் அனைத்துமே,  விழிப்போடு இருப்பதற்கும், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிப்பதற்குமான அழைப்பை நமக்கு தருகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் அடையாளங்கள் வழியாக, அவரது  ஆற்றலையும் அருளையும் அனுதினமும் பெற்றுக்கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, நாம் அவரின் இறை வார்த்தையை அறிவிக்கின்ற மனிதர்களாக இச்சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதற்கான அழைப்பை இறைவன் இன்றைய நாளில் தருகின்றார். 

   ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில் நாம் எப்போதும் விழிப்போடு செயல்பட வேண்டும்.  எப்படி விழிப்போடு இருந்த ஐந்து தோழிகள் மணமகனை கண்டு கொண்டார்களோ, அதுபோல ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை வரை, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அடுத்தவருக்கு அறிவிக்கக்கூடிய மனிதர்களாக, நாமும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். 

           இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் நற்செய்தி அறிவிப்பது நம் பணி என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

                  

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...