இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே, தாழ்ச்சியோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பினை தருகின்றன.
இன்றைய முதல் வாசகம் நாம் பெரியவருக்கு பணிந்து எப்போதும் தாழ்ச்சியுள்ள மனிதர்களாக இச்சமுகத்தில் வாழ வேண்டும் என்ற அழைப்பை வலியுறுத்துகின்றன.
இதே அழைப்பினை இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, திருமண வீட்டிற்கு செல்லுகின்ற ஒரு நிகழ்வு வழியாக வலியுறுத்துகிறார். முதன்மையான இடத்தை தேடுகிற நபர்களாக அல்லாமல், இறுதியான இடத்தை தேடுகின்ற நபர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், நாம் நம்மை குறித்து பெருமை கொள்வதை விட, ஆண்டவர் இயேசுவை குறித்து பெருமை கொள்ளக் கூடியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக எப்போதும் தாழ்ச்சியோடு வாழ இறைவன் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக அழைப்பு தருகின்றார்.
தாழ்ச்சியுள்ள மனிதர்களாக வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக