இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய இறை வார்த்தையானது
கடவுளின் பெயரால் நாம் நமது வாழ்வில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நமக்கு தருகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் யோபுவின் வாழ்வை குறித்து நாம் வாசிக்கக் கேட்டோம். கடவுளிடம் அனுமதி பெற்று சாத்தான் யோபுவை சோதித்த போது, யோபு அனைத்து விதமான துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுள் கொடுத்தார்; கடவுள் எடுத்துக்கொண்டார் என்ற மனநிலையோடு கடவுளிடம் இருந்து வருகின்ற நன்மைகளை மட்டும் எண்ணி நன்றி கூறுகிறவர்கள், துன்பங்களை ஏன் ஏற்கக் கூடாது? என்ற மனநிலை கொண்ட மனிதராக வாழ்ந்ததை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு, நாம் இயேசுவின் வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, தனது வாழ்வில் ஏற்பட்ட எல்லாவிதமான துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே இயேசு தன் வாழ்வின் இலக்காகக் கொண்டிருந்தார். இந்த இலக்கை நாமும் நமது இலக்காக கொண்டு, கடவுளின் சார்பாக, கடவுள் நமது வாழ்வில் அனுமதிக்க கூடிய எல்லா விதமான இன்ப துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்தையும் கடவுளுக்காக ஏற்றுக் கொண்டு இணைந்து அவரது அன்புறவில் தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக