இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நேற்றைய நாள் வாசகமானது குருக்களை மையப்படுத்தி அமைந்திருந்தது. ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் திருமணம் முடித்தவர்களை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பை தருகிறது. அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர் என குறிப்பிடுவார்கள்.
ஆனால், கடவுள் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரையும் அவரவர் இருக்கின்ற நிலையிலிருந்து அவரின் பணியை செய்வதற்கு அழைப்பு தந்திருக்கிறார். ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான உயரிய இடம் வேறு எங்கும் இல்லை, குடும்பங்களில் தான் இணைந்திருக்கிறது. அன்போடு வாழுங்கள் என்ற வார்த்தையை முதலில் வாழ்வாக்க வேண்டியது குடும்பங்களில் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, மணம் முடித்த நிலையில் இருந்தாலும், பொதுநிலையினராக இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் நாம் இருக்கின்ற தளத்தில் இருந்து ஆண்டவரின் பணியை செய்கின்ற மனிதர்களாக நாளும் வாழ்வதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.
இந்த அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொண்டு வாழும் போது கடவுளின் ஆசிகளை நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. இந்த வாசகங்களின் பின்னணியில் நமது வாழ்வை ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில் தொடர்ந்து இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக