இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கடவுளுடைய வார்த்தையை கேட்டு அதன்படி செயல்படக்கூடிய ஒவ்வொருவரும் அவரின் தாய் மற்றும் சகோதரருக்கு இணையானவர் என்ற இறை வார்த்தையினை இறைவன் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குத் தருகின்றார்.
இறைவனுடைய இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவதற்கு நாம் அழைக்கப்படுகின்றோம்.
பலி செலுத்துவதை விட நேர்மையாளர்களாக நாம் இருப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சி தர வல்லது என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்துகிறது.
இறை வார்த்தையை அனுதினமும் கேட்கக்கூடிய நாம், அதற்கு செயல் வடிவம் தரக்கூடிய மனிதர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டி செபிப்போம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக