இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறைவார்த்தைகள் அனைத்துமே நமது செயல்களை குறித்து சிந்திப்பதற்கு அழைப்பு தருகின்றன. ஒவ்வொரு மனிதனுமே அவரவர் செய்கின்ற செயல்களை வைத்து அறியப்படுகின்றோம் என்ற செய்தியினை
இன்றைய வாசகங்கள் நயமாக எடுத்துரைக்கின்றன.
ஒவ்வொரு மரமும் அதன் கனியை கொண்டு அறியப்படும் என்பதற்கு ஏற்ப, நமது செயல்கள் நாம் யார் என்பதையும், நாம் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதையும் இந்த சமூகத்தில் அறிமுகப்படுத்துகின்றன.
நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை கேட்கின்ற மனிதர்களாக மட்டுமல்லாமல், வாழ்வாக்குகின்ற மனிதர்களாக மாறுகிற போது, நமது வாழ்வு அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வாக அமைகிறது. அத்தகைய வாழ்வு நம் வாழ்வாக மாறுகிறபோது நாம் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்ட வீட்டினை கட்டக்கூடிய நபர்களாக இச்சமூகத்தில் வலம் வரமுடியும். பவுல் அடியாரைப் போல ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரின் வார்த்தைகளை எல்லாம் வாழ்வாக மாற்றிக்கொண்டு, பவுல் பயணித்தது போல நீங்களும் நானும் பயணிப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.
இந்த நல்ல நாளில் நமது செயல்பாடுகளையும், ஆண்டவரின் இறை வார்த்தையையும் ஒப்பிட்டு பார்த்து, நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தரும் மனிதர்களாக நீங்களும் நானும் மாறிட இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக