இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இந்த இளமைப் பருவத்தில் மனம் விரும்புவதையெல்லாம் செய்வதற்கும், ஆனால் செய்கிற ஒவ்வொன்றிற்கும் இறுதி நாளில் கடவுளுக்கு நாம் கணக்குத் தர வேண்டி இருக்கிறது என்பதையும் இன்றைய முதல் வாசகம் ஆழமாக எடுத்துரைக்கிறது.
இந்த இறை வார்த்தையின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது ஆண்டவர் உரைக்கின்ற அனைத்தையும் மனதில் இருத்திக் கொள்ளக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு அதற்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக