இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நாம் ஒவ்வொருவருமே கடவுளோடு இணைந்து வாழ்வதற்கான ஒரு அழைப்பை இன்றைய முதல் வாசகம் வாயிலாக திருத்தூதர் பவுல் நமக்கு கொடுக்கிறார். கடவுளோடு இணைந்து வாழ வேண்டுமாயின், உட்புற தூய்மை என்பது அவசியமானது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. குருட்டு வழிகாட்டிகளாக, தவறான பாதையில் மக்களை வழிநடத்த கூடியவர்களாக, நாம் இல்லாமல் நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொண்டவர்களாக நமது எண்ணங்களையும் செயல்களையும் கடவுளுக்கு உகந்ததாக மாற்றிக் கொண்டு, அவரின் பாதையில் பயணம் செய்கின்ற மனிதர்களாக மற்றவர்களையும் அவரின் பாதையில் பயணம் செய்ய ஊக்கமூட்டவும், நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
இந்த உள்ளார்ந்த மாற்றத்தோடு, தூய்மையோடு கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ்ந்து, அவரோடு இணைந்து என்றும் இன்புற்று வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக