இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று தாய்த்திரு அவையானது, கன்னி மரியா, இறைவனின் அரசி என்பதை நினைவுகூர்ந்து கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் அன்றைய காலகட்டத்தில் அடிமைத்தனத்திலிருந்து நம்பிக்கையற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, நம்பிக்கையின் அடிப்படையில் உங்களுக்கு ஒரு ஆண்மகவு தரப்படும் என இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த வார்த்தைகளை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வாசிக்க கேட்டோம். கன்னியாக இருந்த நிலையிலும் கடவுளின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த ஒரு பெண்மணியாக கடவுளை தன் வயிற்றில் சுமந்து, இந்த மண்ணில் இயேசுவுக்கு உரு கொடுத்தவர் அன்னை மரியா.
இந்த இயேசு கிறிஸ்துவை விண்ணக அரசராக நாம் பார்க்கிறோம். விண்ணகத்தின் அரசராகிய இந்த இயேசு கிறிஸ்துவை சுமந்த தாயும் விண்ணக அரிசியாக திகழப்படுகிறாள் . திகழப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த அன்னை மரியா, விண்ணக அரசி என்பதை நாம் கொண்டாடுவதற்கான ஒரு அழைப்பைத் திரு அவை நமக்கு இன்று வழங்கி இருக்கிறது. சமூகத்தில் இருந்த பலவிதமான சட்டதிட்டங்களுக்கு மத்தியிலும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், கடவுளின் வார்த்தைகளின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு பெண்மணியாக, கடவுளுக்காக தன் வாழ்வை அன்னை மரியா அர்ப்பணித்தது போல, நாமும் அர்ப்பணிப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகிறார்.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, கடவுளின் வார்த்தைகளுக்கு மட்டுமே கீழ்படிந்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழுகிற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக