இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவுக்கு உரியவர்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே, அவரைச் சார்ந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, ஒவ்வொரு நாளும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார்.
ஆண்டவர் இயேசுவோடு உடன் பயணித்த சீடர்கள், பல நேரங்களில் அவர் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், அவரின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக இருந்தார்கள் என்பதை விவிலியத்தில் பல பகுதிகளில் நாம் காணலாம்.
அதிலும் குறிப்பாக, இன்று நாம் வாசிக்க கேட்ட நற்செய்தி வாசகத்தில், இரவு முழுவதும் மீனைத் தேடி, ஒன்றும் கிடைக்காத சூழ்நிலையில், மீண்டுமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூற, ஆண்டவரின் வார்த்தைகளை தங்கள் வாழ்வாக்கிக் கொண்டு, ஆழத்திற்கு சென்று வலைகளைப் போட்டு மிகுதியான மீன்பாட்டை சீடர்கள் கண்டார்கள் என்பதை இன்றைய செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.
சீடர்களின் வாழ்வு இன்று நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், கிறிஸ்துவுக்கு உரியவர்களாகிய நாம், அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக, இறைவன் நமக்கு உணர்த்துகிறார். நாமும் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக