இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் இறை வார்த்தைகள் அனைத்துமே, விழிப்போடு இருப்பதற்கும், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிப்பதற்குமான அழைப்பை நமக்கு தருகின்றன. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் அடையாளங்கள் வழியாக, அவரது ஆற்றலையும் அருளையும் அனுதினமும் பெற்றுக்கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, நாம் அவரின் இறை வார்த்தையை அறிவிக்கின்ற மனிதர்களாக இச்சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதற்கான அழைப்பை இறைவன் இன்றைய நாளில் தருகின்றார்.
ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில் நாம் எப்போதும் விழிப்போடு செயல்பட வேண்டும். எப்படி விழிப்போடு இருந்த ஐந்து தோழிகள் மணமகனை கண்டு கொண்டார்களோ, அதுபோல ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை வரை, ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அடுத்தவருக்கு அறிவிக்கக்கூடிய மனிதர்களாக, நாமும் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதை இன்றைய நாள் இறை வார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.
இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் நற்செய்தி அறிவிப்பது நம் பணி என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக