இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரியவர், இந்த நம்பிக்கைக்குரிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவருமே, அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நல்லதொரு இறை மக்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார்.
இந்த முதல் வாசகத்தின் பின்னணியோடு நற்செய்தி வாசகத்தை நோக்குகிற போது, நாம் ஒவ்வொருவருமே நமது கடமைகளை சரிவர செய்யக்கூடிய நல்ல பணியாளர்களாக, பொறுப்பாளர்களாக, நாம் இருக்க வேண்டுமென்ற அழைப்பை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்குத் தருகிறார்.
கடமையை செய்கின்றபோது கடமைக்காக செய்யாமல் நமது கடமையை உணர்ந்தவர்களாக, மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, கடவுள் ஒருவருக்கே கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் நாம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நமது கடமைகளை சரிவர செய்வதற்கான ஒரு அழைப்பினை இறைவன் நல்ல வீட்டு வேலையாள் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார்.
இந்த இறை வார்த்தைப் பகுதியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு நம்பிக்கைக்குரிய கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றலை இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக