செவ்வாய், 28 ஜனவரி, 2020

2. நீ நீயாக இரு....

நீ நீயாக இரு....

ஒரு நாள் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது அருள்தந்தை ஒருவர் ஒரு கேள்வியை எங்களை நோக்கி எழுப்பினார். நீங்கள் இன்னும் பத்து வருடத்திற்கு பிறகு எப்படி இருப்பீர்கள்? என்று கேட்டார். சிலர் நான் ஏ. ஆர.; இரகுமானைப் போல சிறந்த பாடகராக இருப்பேன் என்றார்கள். சிலரோ நான் உங்களைப்போல ஒரு குருவாக இருப்பேன் என்றார்கள். இன்னும் சிலரோ நான் ஒரு நல்ல ஆசிரியராக இருப்பேன் என்றார்கள். ஆனால் எனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஒரு சகோதரர் கூறினார். நான் இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆனாலும் “நான் நானாகத்தான் இருப்பேன்” என்றார். ஆந்த சகொதரர் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தன. இதுவே இன்றைய முழு ஆளுமை கொண்ட இளைஞர்களுக்கும் தேவை என்று கருதுகிறேன். 
“எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்” என்றார் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள். ஆனால் இன்று இளைஞர்களில் பலர் பிறரைப் போல மாறவேண்டும் என்று தங்களை மாற்றிக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்று நமது நாட்டின் பெரும்பான்மையான இளைஞர்கள் பிறரை பின்பற்றக் கூடியவர்களாக மாறியுள்ளனர். ஆனால், இன்று முழு ஆளுமை கொண்ட இளைஞர்களான ஒவ்வொருவரும் “அவர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும்”  (நீ நீயாகவே இருக்க வேண்டும்) என்பது அடிப்படையானது.

“நிஜத்தை விடுத்து நிழலை பின்பற்றக்கூடிய இளைஞர்களாக இல்லாமல் நிஜங்களாக நாம் உருவாக வேண்டும்”. ஒருவர் பாடகராக வேண்டுமாயின் மற்றொரு பாடகபை;ர போல பாடகராக வேண்டும் என்று எண்ணாமல். தங்களுக்கான தனித்துவம் கொண்ட ஒரு பாடகராக உருவாக வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “ஒருவர் சிறந்த கனவுகளை (இலக்குகளை) அடைய நம்பிக்கை, பொறுமை, அர்பணம், அவசரமின்மை போன்றவற்றின் மூலம் கனவுகளை (இலக்குகளை) நனவாக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

இளைஞர்கள் தனித்துவமிக்கவராக உருவாக வேண்டுமாயின் தடைகள் பலவற்றை எதிர் கொள்வது அவசியமானது. அச்சூழ்நிலைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய், பொறுமையோடும், அர்ப்பண உணர்வோடும், அவசரமின்றி செயல்படுவது அவசியமானதாகும். “விதை கூட இங்கு விழுந்து தான் எழுகிறது”. எத்தனை தடவை நம்மேல் கற்களை வீசினாலும் நாம் விழ்வதுப் போல விழ்ந்து மறு நொடியே எழுந்து முன்னேற வேண்டும். மேகத்துக்குள் ஒளிந்திருக்கும் கடல்நீரை போன்று. 
இவ்வுலகில் விலங்குகள், பறவைகளிடமிருந்து மனிதன் வேறுபடுவது சிரிப்பாலும், சிந்திக்கும் உணர்வினாளுமே. நூம் ஒவ்வொருவரும் நாம் நாமாக இருக்க (நீ நீயாக இருக்க) சுயமாக சிந்தித்து உறுதி ஏற்போம். முழு ஆளுமை கொண்ட இளைஞர்களான நாம் “தடம் பார்த்து நடக்காமல் தடம் பதித்து நடந்திடுவோம்” இச்சமூகத்தில்....

என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...