செவ்வாய், 28 ஜனவரி, 2020

நீ

நீ 



சிறிய விதை தான் ஆனால் உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது பிரம்மாண்டமான மரம் உன் வேர்களுக்கு பூமியும் எல்லை இல்லை இல்லை உன் கிளைகளுக்கு வானமும் எல்லை இல்லை உன் கிளைகள் நட்சத்திரங்களை நோக்கி கிடைக்கட்டும்


வாழ்வையும் நமது எண்ணத்தையும் ஒரு மலருக்கு ஒப்பிட்டு பார்க்கலாம் நமது எண்ணங்களை ஒரு மலருக்கு காட்சிபடுத்தி பார்க்கும் போது அதனுள் ஒரு வரலாறு புதைந்து இருப்பதை காணலாம் ஒவ்வொரு ஒரு பரிமாண வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்திக்க வேண்டிய தளர்ச்சிகளும் இல்லாமலில்லை...



வாழ்க்கை என்பது எண்ணங்களின் அடிப்படையில் அமைந்திருப்பது....

நமது எண்ணங்களே நமது வாழ்வில் பிரதிபலிக்கப்படுகிறது.


ரவியும் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள் ஒரு நாள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்கள் வேலை சென்று விட்டு வந்ததால் களைப்பில் வீட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் மனைவியை நோக்கி தேநீர் கொண்டு வா என்று கூறினார் ராஜாவின் மனைவி தேநீரை தயார் செய்து ராஜாவிடம் கொண்டுவந்து கொடுத்தார் தெரிந்தோ தெரியாமலோ அந்த தேனிருக்கும் ஒரு எறும்பு இருந்தது அதை கண்டதும் நிதானம் இழந்த வராய் ராஜா தன் மனைவியைத் திட்ட மனைவியும் பதிலுக்கு திட்ட வீடு இரண்டாக மாறியது.... போலவே ரவியும் வீட்டிற்கு சென்றார் வேலையின் களைப்பு காரணமாக நாற்காலியில் அமர்ந்து தன் மனைவியை நோக்கி தேனீர் கொண்டுவா என்று கூறினார் தேநீர் கொண்டு போய் கொடுத்தால் அந்த தேநீரிலும் ஒரு எறும்பு கிடந்தது கண்டதும் ரவி புன்னகை பூத்த வரை மனைவியை நோக்கி கூறினார் நீ உன் வாழ்நாளில் தேநீர் தயாரிப்பதை நிறுத்தி விடாதே ஏனென்றால் நான் நினைத்துக்கொண்டிருந்தேன் உன்னுடைய தேன் இருக்கு நான் தான் மிகப்பெரிய ரசிகன் என்று ஆனால் என்னையும் மிஞ்சும் அளவிற்கு ஒருவன் எனக்கு முன்பாக அதை குடிக்க சென்று தன் உயிரையும் விட்டு விட்டான் என்று தேனீர் கோப்பையில் இருந்த இரும்பை காண்பித்தார்....

மனைவியும் அதனை எடுத்து வெளியே போட்டால் அதன் பிறகு அவள் போட்ட எந்த தேநீரிலும் எரும்பு இழக்கவில்லை...


வாழ்விலும் நிகழ்ந்தது ஒரே நிகழ்வு தான் ஆனால் இருவரும் கையாண்ட விதம் அதை பார்த்த விதம் வேறாக இருந்தது நாம் எதையும் நேர்மறையான எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது அங்கு உறவு வளர்கிறது நேர்மறையான எண்ணங்களை கடல்கடந்து எதிர்மறை எண்ணங்களோடு நோக்கும் பொழுது அங்கு உறவில் விரிசல் ஏற்படுகிறது... 


புத்தாண்டில் நாம் புத்தொளி பெற்றவர்களாகவும் நல்ல புதிய எண்ணங்கள் கொண்டவர்களாகவும் வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்....


இவ்வுலகில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செயலை நமக்கு நினைவுபடுத்திய அல்லது கற்றுக் கொடுத்துவிட்டு தான் செல்கின்றன அந்த அடிப்படையில் இன்று நமது நாட்டை உலுக்கி கொண்டிருக்க கூடிய மிகப் பெரிய பிரச்சனை என்றால் என்ன என்று பார்த்தால் அது குடியுரிமை சட்ட மசோதா இதனால் இஸ்லாமியர்களும் இலங்கையில் இருந்து குடியேறியவர்கள் பலவாறு பல இன்னல்களுக்கும் தங்களது உரிமையை இழந்தவர்கள் ஆகவும் மாறுகிறார்கள்....


இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன இருப்பது ஒரு காணி நிலமாக இருந்தாலும் அதனை அனைவரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே நம் முன்னோரின் நோக்கமாகவும் அவர்களின் செயலாகவும் இருந்திருக்கிறது....


வந்தோரை வரவேற்று அவர்கள் என்று கூறிவந்த நாம் என்று இருப்போரை வெளியேற்றுவதற்காக ஒரு சட்டத்தை அரசு இயற்றியது இயற்றியுள்ளது..


இதை எத்தகைய கண்ணோட்டத்தோடு காண வேண்டுமென சிந்தித்தபோது இன்றைய தலைப்பு நமக்கு உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்...


சில நாட்களாக நாட்களாகவே நம்முடைய நாட்டில் ஒற்றுமையின்மை நிலவி வருகிறது நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்தி பலர் பல விதமான பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் குடியுரிமை சட்ட மசோதா மூலம் நம்மை பிரித்தாலும முயற்சியில் பலர் ஈடுபடுகிறார்கள் இத்தகைய நேரத்தில் புதிய எண்ணம் கொண்டவர்களாய் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்தவர்களை இணைந்து நின்று அனைவரும் இருப்பதை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே நம் உள்ளத்தில் ஆழமாக இயல்பாக உருவாக வேண்டியதாகும் இதுவே இறைவன் திரும்ப கூடியதுமாகும்...

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது பலவிதமான வார்த்தைகளைப் பேசினார் அவருடைய வார்த்தைகள் பலருக்கு ஆறுதலையும் பலருக்கு உடலிலுள்ள சுகத்தையும் ஊக்கப்படுத்த கூடிய வார்த்தைகளாக இருந்தன அவருடைய வார்த்தைகளில் பலரை ஊக்கமூட்டி எதற்கும் பலரை குணமாக்கிய இதற்கும் காரணம் அவருடைய எண்ணங்கள் அவ்வாறாக இருந்தன நமது எண்ணங்கள் எப்படி இருக்கின்றன நாமும் இயேசுவைப் போல நல்லெண்ணம் கொண்டவர்கள் உருவாவது எப்போது…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...