செவ்வாய், 28 ஜனவரி, 2020

4. இளைஞனே ஆற்றலோடு மாற்றம் நோக்கி...

இளைஞனே ஆற்றலோடு மாற்றம் நோக்கி...


“நீ இளைஞன் அது போதும் எனக்கு” என்ற புனித தொன் போஸ்கோவின் வார்த்தைகளின் அடிப்படையில் இளைஞனே துணிந்து வா… ஆற்றலோடு மாற்றத்தை நோக்கி நாம் செல்வோம்… சமூகத்தையும் அழைத்துச் செல்வோம்…

திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “இளைஞர்கள் நமது உலகத்தின் எதிர்காலமாக இருக்கின்றனர் என்று எளிதாக கூறிவிட முடியாது இந்த உலகின்; நிகழ்காலமே அவர்கள்தான்” என்கிறார்.

எதிர்காலம் வளமாக மாற நிகழ்காலத்தில் முழு ஆற்றலுடன் மாற்றத்தை நோக்கி நாம் பயணப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. உங்களின் கடமைகளை அறிந்து நீங்கள் செயல்பட திருஅவை உங்களை அழைக்கின்றது. இன்றைய இளைஞர்களிடம் என்ன திறமைகள் இல்லை? “மாற்றத்தை நோக்கிய பாதையில் நாம் எவரையும் திறமையற்றவர்கள் என்றோ, சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் கொண்டு ஒதுக்கி வைக்கக் கூடாது. நாமாகவும் நம்மை ஒதுக்கி கொள்ளவும் கூடாது” என திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் குறிப்பிடுகிறார்.

இளைஞர்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு இதை அறிந்ததாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலும் நாம் இளைஞர்கள் சமூகத்தின் பின் தூண்களாகவே இருந்து விடுகிறார்கள் என அருள்தந்தை ஜெரி சே. ச. அவர்கள் குறிப்பிடுகிறார். இன்று உலகில் மாற்றத்தின் முதல் விதையாக இளைஞர்கள் இருப்பதை இளைஞர்களாகிய நாம் முதலில் உணர வேண்டும். சமூக அநீதிகளை காணும்போது தன்னைப் இது தீண்டவில்லை என்று கூறுபவர்களாக இருந்துவிடாமல் துணிந்து அதை சரி செய்திட வேண்டியது நமது கடமையும், பொறுப்புமாகும்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்த டெல்லி கல்லூரி மாணவர்களை போல நாமும் அநீதிக்கு எதிராக சமூகத்தில் மாற்றம் நோக்கிய முதல் குரலாக விளங்கிட வேண்டும். இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் பொறுப்புகளை முன்னெடுக்க தயங்குகிறார்கள். இளைஞர்கள் பல பொறுப்புகளை தயக்கமின்றி முன்னெடுப்பதையே திருஅவை விரும்புகிறது. இதனையே திருத்தந்தை பிரான்சிஸ் “கிறிஸ்து வாழ்கிறார்” என்ற தனது ஊக்க உரையில் “இளைஞர்களின் வேகமும், உள்ளுணர்வும், இறை நம்பிக்கையும் திருஅவைக்கு தேவை” என்கின்றார். மாற்றம் என்பதே மாறாத ஒன்று இச்சூழலில் சமூக, அரசியல், பண்பாடு, சிந்தனை போன்ற பலநிலைகளில் மாற்றத்தை முன்னெடுக்க “நாம் தெளிவான ஞானம் கொண்டவராக இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் நாம் அனுதினமும் கடந்து செல்லும் இவ்வுலகின் போக்கில் மிக எளிதாக பலியாகி விடக் கூடும்”. எனவே தேர்ந்து தெளிவு கொண்டவர்களாக ஆற்றலோடு மாற்றம் நோக்கி பயணிக்க வேண்டும். இதுவே முழு ஆளுமை உடைய இளைஞர்களான நமக்கு தேவையான ஒன்றாகும். முழு ஆளுமை உடைய இளைஞர்களாகிய நாம் ஆற்றலோடு மாற்றம் நோக்கி முன் செல்வோம்… சமூகம் தானாக பின் வரும்… முயலுவோமா?...



என்றும் அன்புடன் 
சகோ. சகாயராஜ் 
அம்மாபேட்டை, திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...