வியாழன், 9 ஜனவரி, 2020

திருத்தூதர் பவுல் மனமாற்ற விழா 2020

திருத்தூதர் பவுல் மனமாற்ற விழா 
திருப்பலி முன்னுரை
மனமாற்றம் வாழ்வு மாற்றத்தின் இதை இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே நம் அன்னை திருஅவை திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழாவை கொண்டாட அழைக்கின்றது. இவ்விழாவில் பங்கேற்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றேன்.

தூதர் பவுல் பெரியவரிலிருந்து கடைநிலையவருக்கும். யு
யூதத்தின் இறுகிய மனப்போக்கில் இருந்து சான்று பகரும் வாழ்வுக்கும் . துன்பத்திலிருந்து இயேசுவுக்காக துன்பம் ஏற்ப வராகவும் .சவுல் என்னும் யூதராக இருந்து பவுலாக மாறி பிற இனத்தவருக்கு தூதரானார். 
இயேசுவை சந்திப்பதற்கு முன்பு இவருடைய வாழ்வு தன்னலம் மிக்கதாகவும் மேலோட்டமான சமய சடங்குகளை ஆன்மீக வாழ்வாக கொண்டதாக இருந்தது .ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அவருடைய வாழ்வு தன்னலம் கடந்து பிறர் நலம் மையமாகவும் இயேசுவின் மீது அவரின் இறையாட்சியின் மீது ஆர்வமுள்ள ஆன்மீக வாழ்வும் உருமாற்றம் பெற்றது.

வாழ்வது நான் அல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் கலாத்தியர் 2: 20 என்ற பவுலின் வார்த்தை முற்றிலும் அவர் இறைவனின் இறையாட்சி பணியில் இரண்டறக் கலந்திருக்கும் நிறைவாழ்வை சுட்டிக்காட்டுகின்றது.
இயேசுவின் சந்திப்பு இவருக்கு புதிய பிறப்பை கொடுத்திருக்கிறது நற்செய்தி அறிவிப்பு பணி புதிய பாதையைக் காட்டுகிறது இவரின் வாழ்வில் அனைத்தையும் இயேசுவுக்காக இழக்கின்ற அவருக்காக உயிரையும் அளிக்கின்ற சான்று பகரும் புனித வாழ்வைத் தருகிறது.

அன்புக்குரியவர்களே இயேசுவின் பாதையை தன் இலக்காகவும் அவரின் வாழ்வை முன்மாதிரியாகவும் அவர் பணியை உயிர் மூச்சாகவும் கொண்டு திருத்தூது பணியாற்றிய பவுலை போல நாமும் இயேசுவுக்காக அவரின் இறையாட்சி மதிப்பீடு களுக்காக நம் வாழ்வையும் அர்ப்பணிக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

2 கருத்துகள்:

  1. Sahayam! The person who kneels down before God, stands up with the power of God, anywhere and at anytime! Praise to Jesus! Ave Maria!

    பதிலளிநீக்கு
  2. Sahayam! The person who kneels down before God, stands up with the power of God, anywhere and at anytime! Praise to Jesus! Ave Maria!

    பதிலளிநீக்கு

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...