செவ்வாய், 28 ஜனவரி, 2020

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்
எங்கள் அனைவரின் தாயும், தந்தையும், சக்தியும், வல்லமையுமான இறiவா! இந்த மாலை பொழுதினிலே உமது அன்பு பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் கிறிஸ்துவினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் இங்கு கூடிவர வாய்ப்பு கொடுத்ததற்காக உண்மை வாழ்த்துகிறோம். உம்மை ஆராதிக்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம்.
 இந்த அருமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு பெருவிழாவில் எமக்கு முன்பாக இந்தப் பகுதியில் உண்மை பற்றி பேசி, போதித்து, உண்மை பற்றிய அறிவை என் முன்னோருக்கு வாரி வழங்கி உமது பிள்ளைகளாக எங்களை மாற்றிய எத்தனையோ நற்செய்தி தூதுவர்களை நினைத்துப்பார்த்து அவர்களுக்காக நன்றி கூறுகிறோம். அவர்களுடைய தியாக வாழ்வுக்காகவும், அவர்களுக்கு அந்த ஆற்றலையும், திறமைகளையும் வழங்கிய உமது அளப்பரிய கிருபைக்காகவும் நன்றி கூறுகிறோம்.
தொடர்ந்து உமது சொல்லண்ணா அன்பை தேவரீர் இவ்வுலகின் மீது நீர் கொண்டுள்ள கருணையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல, எடுத்துச் செல்ல தகுதியான ஊழியக்காரர்களையும் எங்களுக்கு வழங்கி கொண்டு இருப்பதற்காகவும் நன்றி கூறுகிறோம்.
நல்ல தகப்பனே உம்மை புரிந்துகொள்வதின் அடிப்படையில் அவர்களிடையே வித்தியாசங்கள் இருப்பினும் அவைகள் எல்லாம் தாண்டி நீர் எம் அனைவருக்கும் தந்தை நாங்கள் அனைவரும் உமது அன்புக்குரிய பிள்ளைகள் என்ற உணர்வையும் உண்மையையும் எங்களிடம் உருவாக்கியுள்ள உமது கிருபைக்கு நன்றி கூறுகிறோம்.
அதனடிப்படையில் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் போதித்த அன்பு, கனிவு, அமைதி, மகிழ்ச்சி, நீதி போன்ற நற்செய்தியின் மதிப்பீடுகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையின் வழியாக போதிக்கின்ற நடமாடும் நற்செய்தியாளர்களாக இவ்வுலகில் திகழ்ந்திட தேவையான வரங்களால் எங்களை உடுத்தியருளும்.
நாங்கள் சந்திக்கின்ற மக்கள் அனைவரும் எங்களில் உம் திருமகன் இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், நீதி நேர்மையையும் கண்டு உம்மைப் போற்றிப் புகழவரமருளும். இவ்வாறாக நாங்கள் நற்செய்தியின் தூதுவர்களாக இவ்வுலகினருக்கு ஒளியாகவும், உப்பாகவும், வழியாகவும், வாழ்வாகவும் மாற உம் அருளினாலும் ஆற்றலினாலும் எம் பணிக்கு மெருகூட்டும்.
மேலும் நாங்கள் இவ்வுலகில் நலமோடும், வளமோடும் வாழ தேவையான வசதி வாய்ப்புகளை எங்களுக்கு தாரும். சிறப்பாக எங்கள் குடும்பங்களில் ஒற்றுமை, சமாதானம், மகிழ்ச்சி, உடல்நலம் நிலவும் படி செய்தருளும். எங்கள் படிப்பு, பணி, தொழில், வியாபாரம், வர்த்தகம், வேளாண்மை, கால்நடைகள், எங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கொடுக்கவும் செய்தருளும்.
இறுதியாக நாங்கள் அனைவரும் உம் அன்புக்கு சாட்சியாக வாழ்ந்து நீர் விரும்பும் முதுமை அடைந்து வான் வீட்டில் உயிர்த்த ஆண்டவர் கிறிஸ்துவோடும், சகல புனிதர்கள் அனைவரின் தோழமையில் உறவுகொண்டு உண்மை எக்காலமும் அங்கு புகழவும், வாழ்த்தவும் வரமருள்வீராக.
பலவீனங்கள் என்று எங்கள் ஜெபங்களை புறக்கணியாமல் எம்மவரின் ஆழமான நம்பிக்கையை கண்ணோக்கி எம் மன்றாட்டுகளுக்கு கனிவாய் செவிசாயும் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே.  ஆமென்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...