செவ்வாய், 28 ஜனவரி, 2020

காலம் நிறைவேறிவிட்டது Introduction

அன்புக்குரிய அருள்தந்தை அவர்களே அருமைச் சகோதரர்களே உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டே கலிலேயா விற்கு சென்றதை நாம் வாசிக்க கேட்கிறோம்.
“காலம் நிறைவேறிவிட்டது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று இயேசு நற்செய்தி அறிவிக்கிறார். இன்றைய நாளில் நற்செய்தி என்றால் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்கவும் தியானிக்கவும் அழைக்கப்படுகிறோம்.

துன்பத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியைத் தருவதே நற்செய்தி. இதனை இன்றைய முதல் வாசகத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். இன்று குழந்தைப்பேறு இல்லாமையால் அதனை எண்ணி வருந்தக்கூடிய அன்னாவை அவளது கணவன் எல்கானா என்பவர். தேற்றும் விதமாக ஏன் குழந்தை இல்லை என்று வருத்தப்படுகிறாய். நான் உனக்கு பத்து புதல்வரை விட மேலானவன் என்று எனக் கூறுகிறார். நகைச்சுவையாக பேசினாலும் நல்ல தம்பதியருக்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணம் எனலாம்.
 துன்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் இன்பத்தை உருவாக்குவதே உண்மையான நற்செய்தி.
உள்ளத்தில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் தன் கண்முன் இருக்கக்கூடியவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்தவர் சார்லிசாப்ளின் அவர்கள். அதுப்போலவே ஆதரவற்ற ஏழைகள், கவனிப்பற்ற நோயாளிகளின்  முகத்திலும் புன்னகையை கொண்டு வந்தவர் அன்னை தெரசா அவர்கள்.

எனவே இன்றைய நாளில் நாம் நற்செய்தியாக எதை மற்றவருக்கு வழங்க போகிறோம். ஒருவேளை துயரத்தில் இருப்பவர்களை காணும்போது அவர்களின் துயரத்தை துடைக்க நம்மால்  முடியா விட்டாலும் அவர்களுடன் துணை நிற்பவர்களாக வாழ்வதற்கான அருளை வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து ஒருவர் மற்றவருக்காக செபிப்போம்.


அன்புக்குரியவர்களே இவ்வுலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் ஏதோ ஒன்றை நமக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் ஆலயத்திற்குள் வந்ததும் இஸ்ரேல் மக்கள் அனைவரும் நிலம் அதிரும் அளவிற்கு பெரும் ஆரவாரம் செய்தனர் என நாம் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்க உள்ளோம்.
அதுபோலவே இன்று நாம் வாழக்கூடிய நமது நாட்டில் குடியுரிமை சட்ட மசோதா மூலமாக இஸ்லாமியர்களின் மீது நடத்தப்படக் கூடிய மதரீதியான தாக்குதலிலிருந்து அவர்களை காத்தருள வேண்டுமென்று தமிழகத்தின் பல பகுதியில் மாணவர்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இஸ்லாமியர்களும் ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து நீர் விரும்பினால் எனது நோய் குணமாகும் என்கிறார். இயேசுவும் நான் விரும்புகிறேன் எனக்கூறி அவரை குணப்படுத்துகிறார்.

நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்கிறது. ஒற்றுமையாக மதச்சார்பின்மையோடு வாழ வேண்டிய இந்த நாட்டில் இன்று சில சக்திகள் ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்தோடு மதரீதியான தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள். அவர்களின் எண்ண விருப்பத்தை தங்களிடம் அதிகாரம் இருப்பதால் செயலாக்க முயலுகிறார்கள். மக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் இந்த அநீதியான செயலில் ஈடுபடுபவர்களின் செயல்பாடுகளை நாம் தடுக்க வேண்டுமாயின் ஒற்றுமை உணர்வோடு வாழ நாம் வேண்டும். 

இச்சமூகத்தில் நீ விரும்பும்மாற்றமாக முதலில் நீ இரு என்ற காந்தியடிகளின் வார்த்தைக்கு ஏற்ப  ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்தோடு உலகில் நடைபெறக்கூடிய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒற்றுமையை குலைக்க இயலாது என்பதை காட்டும் விதத்தில் மக்களும், மனங்களும் ஒன்றுபட்டு இந்நாட்டில் இன்புற்று வாழவும், அதனை நாம் நமது வாழ்வில் செயல்படுத்தவும் இறை அருள் வேண்டி இந்த திருப்பலியில் அகில உலக ஒற்றுமைக்காக குறிப்பாக இந்தியாவில் வாழக்கூடிய மனிதர்களிடையே மதரீதியான ஒற்றுமை நிலவ அருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...