வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களாக....(5-8-22)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு பலரும் சொல்லக்கூடிய பதில், கூப்பிடும் தூரத்தில் என்று. கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான் பல நேரங்களில் நாம் கடவுளை கூப்பிட மறந்து போகின்றோம். கடவுள் எங்கோ இருப்பவர் அல்ல. நம் மத்தியில் இருப்பவர். நம் நடுவே குடி கொண்டிருப்பவர் என, இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. நம் மத்தியில் குடி கொண்டிருக்கின்ற இந்த இறைவன் நம்மிடம் வலியுறுத்துவது ஒரே காரியத்தையே. அது என்ன என சிந்திக்கின்ற போது, நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் அதனை தெளிவுபடுத்துகிறார். கடவுளுடைய வார்த்தையை கேட்டு, அவ்வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கடவுள் விரும்புகிறார். கடவுள் விரும்புவதை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரது வார்த்தைகளை ஆழமாக சிந்திக்கவும், அதனை நமது வாழ்வில் செயல்படுத்தவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக