கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற (14-8-22 )
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நான் அமைதியை அல்ல, தீயை மூட்ட வந்தேன். உங்களுக்கிடையே பிளவை உண்டாக்க வந்தேன் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் இன்று ஒரு விதமான அச்சத்தையும் கலக்கத்தையும் நமக்கு உருவாக்குவது போல தோன்றலாம். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை ஆராய்ந்து பார்க்கிற போது, கடவுளின் வார்த்தைகளை கேட்டு அந்த வார்த்தைகளை பின்பற்றுகிற மனிதர்களாக நீங்களும் நானும் வாழ வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார். கடவுளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அதை வாழ்வாக்க நாம் முயற்சிக்கின்ற போது, இந்த சமூகத்தில் பல விதமான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக குடும்பத்தில் கூட பலவிதமான எதிர்ப்புகளை நாம் சந்திக்க நேரிடலாம். நாம் கடவுளின் வார்த்தைகளை பின்பற்றி வாழ்கின்ற காரணத்தினால், நமது குடும்ப உறவுகள் கூட, சில நேரங்களில் நமக்கு எதிராக நிற்கக் கூடிய நிலை உருவாகலாம். இந்த நிலைகள் எல்லாம் உருவானாலும் நாம் கடவுளின் கட்டளையை பின்பற்றுகின்ற மனிதர்களாக எப்போதும் திகழ வேண்டும் என்பதை தான் இறைவன் வலியுறுத்துகிறார்.
இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் வாழுகிற ஒவ்வொரு நாளுமே கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக