ஆண்டவரை பின்தொடர்ந்து செல்லும் மனிதர்களாக... 7-8-22
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்கலாம் என்பார்கள். இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நம்பிக்கையோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகின்றன.
இன்றைய நாளில் இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படக்கூடிய ஆபிரகாமை குறித்து பேசப்படுகிறது. எப்படி இந்த ஆபிரகாம் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்? வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டாரோ, அவரைப் போல நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடம் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நமக்கு வழங்கப்படுகிறது. நற்செய்தி வாசகத்திலும் நாம் நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட பணிகளை, மற்றவர்கள் பார்க்கிறார்கள், பார்க்காமல் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, நல்ல மனநிலையோடு, கொடுக்கப்பட்ட பணிகளை நம்பிக்கையோடு தொடர்ந்து செய்யக்கூடிய நல்ல பணியாளர்களாக , நாம் இருக்கும் போது கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நாம் இருப்போம் என வாக்குறுதிகள் தரப்படுகிறது. அவ்வாறு வாழ அறிவுறுத்தவும் படுகிறது. கடவுள் அறிவுறுத்தக்கூடிய இந்த வாழ்வுக்கான நெறிகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாய், வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும், எல்லா சூழ்நிலையிலும், நம்பிக்கையோடு ஆண்டவரை பின்தொடர்ந்து செல்லும் மனிதர்களாக நீங்களும் நானும் வாழ இந்த நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக