ஞாயிறு, 28 ஜூலை, 2024

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தை ஆனது கடவுளோடு நமது நேரத்தை செலவிட வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. ஆயிரக்கணக்கான பணிகளுக்கு மத்தியில் ஆண்டவரோடு நேரம் செலவிடுதல் அவசியமான ஒன்று என்பதை மார்த்தா மரியாள் வாழ்லிருந்து நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நாம் எத்தனை விதமான பணிகள் இருந்தாலும், ஆண்டவருக்கு என நேரத்தை ஒதுக்க கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 23 ஜூலை, 2024

நூறு மடங்கு பலன் தருவோம்! ( 24-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. நிலத்தில் விழுகின்ற விதை உவமையை இயேசு சுட்டிக் காண்பித்து, இதயத்தில் விழுகின்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக, நூறு மடங்கு விளைச்சலை தருகின்ற வகையில் செயல்படக் கூடியவர்களாக, நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

   இயேசுவின் இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக வெறுமனை ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு விட்டு நகர்ந்து விடாமல், கேட்கின்ற வார்த்தைகளுக்கு செயல்வடிவம் தருகின்ற நபர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

திங்கள், 22 ஜூலை, 2024

இறைத் திருவுளப்படி வாழ்வோம்! (23-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசுவின் மீதுஅதீத நம்பிக்கை கொண்டவர்களாக அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் வார்த்தையை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற அத்தனை நபர்களுமே அவரின் சகோதர சகோதரிகளாக மாறுகிறோம் என்பது இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த இறை வார்த்தையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இறைவனுக்கு உகந்த மக்களாக இறைவனின் திருவுளப்படி நமது செயல்களை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறை அருளை வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

மகதலா மரியா! (22-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது மகதலா மரியாவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சி அவர். இவர்தான் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை இயேசுவின் சீடர்களுக்கும் உலகுக்கும் உரக்க அறிவித்த முதல் நபர். இந்த மகதலா மரியா எத்தனையோ விதமான தவறுகளை இழைத்த போதும் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தால் மன்னிப்பைப் பெற்றார். தான் செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியவர், மனமாற்றம் பெற்றவராக, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பின் அடிப்படையில் தான் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை முதன்முதலாக அறிந்து கொண்டு, அந்த அறிந்து கொண்ட செய்தியை அகிலத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், முதல் சீடராக இயேசுவின் உயிர்ப்பை உலகிற்கு அறிவித்தார். 

   இந்த மகதலா மரியாவை மனதில் இருத்தி சிந்திக்கின்ற நாம் அத்தனை பேரும் நமது வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளிலிருந்து விடுபட்டு கடவுளுக்குரிய பாதையில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 21 ஜூலை, 2024

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்! (10-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

        இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவை குறித்து நாம் வாசிக்க கேட்கிறோம். நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த இயேசுவின் வார்த்தைகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. ஏழை எளியவர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் அவர்களின் மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக எண்ணுகிற நபர்களாகவும் நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இந்த வார்த்தைகள் நமக்கு அழைப்பு தருகிறது. இயேசு தருகின்ற இந்த அழைப்பை இதயத்தை இருத்தி சிந்தித்தவர்களாக நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை எல்லாம் சரி செய்து கொண்டு, இயேசுவின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வெள்ளி, 19 ஜூலை, 2024

நான் என்றும் உன்னோடு! (18-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


 இன்றைய இறை வார்த்தையானது நாம் ஆண்டவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் நம் துன்ப துயரங்களை அவரிடத்தில் அர்ப்பணித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆயிரக்கணக்கான துன்பங்களுக்கு மத்தியில் துவண்டு போயிருந்த ஒவ்வொருவரையும் இயேசு அன்றைய காலகட்டத்தில் தேடிச் சென்று நலம் தந்தார். அதே இயேசு எந்நாளும் நம்மோடு இருக்கிறார். வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம் நம்மை தேற்றுபவராக, துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை தருபவராக, கடவுள் நம்மோடு இருக்கிறார். இந்த கடவுளின் உடனிருப்பை இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் 

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...