திங்கள், 1 ஜூலை, 2024

ஆண்டவரின் வார்த்தையில் ஆழமான நம்பிக்கை கொள்வோம்! (2-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

  இன்றைய இறை வார்த்தையானது, ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையை பதிய வைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசுவின் வாழ்வில் அவரோடு உடன் பயணித்த சீடர்கள் எத்தனையோ விதமான அரும் அடையாளங்களை இயேசு செய்த போது உடனிருந்து கண்டிருந்தாலும் கூட, தங்கள் வாழ்வில் ஒரு துன்பம் என வருகிற போது, அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களை நம்பிக்கையில் நிலைத்திருக்க அழைப்பு விடுப்பதோடு, அவர்கள் இந்நம்பிக்கையில் ஆழமாக வேறூன்ற துணை நிற்கின்றார். இந்த இயேசு நம்மோடு இருக்கிறார். நம் வாழ்வில் வருகின்ற எதிர்பாராத திருப்பங்களிலும் இடர்பாடுகளிலும் கூட இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை ஆழமாக உணர்ந்தவர்களாக, எல்லா சூழலிலும் கடவுளுக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, கடவுள் மீது கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா துயரங்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...