வெள்ளி, 19 ஜூலை, 2024

கள்ளம் கபடம் அற்றவர்களாக வாழ்வோம்! (17-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


 இன்றைய இறை வார்த்தையானது குழந்தைகளிடமிருந்து நமது வாழ்வுக்கான கற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. குழந்தைகள் வழியாக இறைவன் நமக்கு கற்றுத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்பது கள்ளம் கபடமற்ற நிலையில் குழந்தைகள் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் அபரிவிதமாக வழங்குவது போல நீங்களும் நானும் நமது வாழ்வில் இத்தகைய பண்பு நலன்களை நம்மகத்தே கொண்டவர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாமும் குழந்தைகளாக இருந்தபோது நம்மிடமிருந்த அந்த அன்பும் மன்னிப்பும் அபரிவிதமான இரக்கமும் என்றும் நம்மில் மேலோங்க வேண்டும் என்பதை மனதில் இருத்தியவர்களாக குழந்தைகளிடமிருந்து நமது வாழ்வுக்கான பாடத்தை கற்றுக்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...