வியாழன், 11 ஜூலை, 2024

ஆண்டவன் துணையால் இடர்பாடுகளை வெல்வோம்! ( 12-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்பது இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு வலியுறுத்தப்படுகிறது. ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கத் துவங்குகிற போது ஆயிரக்கணக்கான இடைப்பாடுகளை நாம் சந்திக்க நேரிடலாம். இடர்பாடுகளை சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாமல் கடவுளின் துணையோடு அனைத்து விதமான இடர்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு எனக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த வார்த்தையின் அடிப்படையில் நாம் ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் அவர் காட்டிய பாதையில் பயணம் செய்து அவருக்கு சான்று பகிர்ந்தவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...