வியாழன், 4 ஜூலை, 2024

இரக்கத்தோடு வாழ்வோம்! (05-07-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் பணிக்கென மத்தேயுவை அழைப்பதையும் அவர் இரக்கத்தையே விரும்புகிறார் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமாயின், நாம் கடவுளை ஆழமாக நம்பிக்கையோடு பின்பற்றவும், அந்த கடவுளுக்குரிய காரியங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுவோம்.

 இரக்கத்தை விரும்புகிற இறைவனுக்கு உகந்தவர்களாக, காணுகிற மனிதர்களிடத்தில் இரக்கத்தை பகிர்ந்து, ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை நமது சொல்லாலும் செயலாலும் வெளிகாட்டிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வாதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...