வெள்ளி, 12 ஜூலை, 2024

படைத்தவரின் பராமரிப்பை உணர்ந்து வாழ்வோம்! (13-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறை வார்த்தையானது கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. சிட்டுக்குருவிகளை விட நீங்கள் மேலானவர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக, நம் தேவைகளில் கடவுள் உடன் இருக்கின்றார்: தேவையானதை தேவையான நேரத்தில் தந்து நம்மை வழிநடத்தக்கூடியவர் என்பதை உணர்ந்தவர்களாக, கடவுள் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையோடு அவர் காட்டிய பாதையில் பயணம் செய்வது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தை தருகின்ற அழைப்பை அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாய் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் இணைந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...