வெள்ளி, 19 ஜூலை, 2024

இவரில் என் நெஞ்சம் பூரிப்படைக்கிறது! (20-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறைவார்த்தையானது இயேசுவைப்போல நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் செயல்களில் குற்றம் காண வேண்டும் என்ற மனநிலையோடு அவரைப் பலரும் சூழ்ந்து இருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட நபர்களுக்கும் நன்மைகளை செய்பவராகவே இயேசு இருந்தார். இந்த இயேசுவைத்தான் ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீங்களும் நானும் அவரை போல இருக்க வேண்டுமென முயற்சிக்கின்றோம். நமக்குப் பின் வருபவர்களும் இந்த இயேசு காட்டிய பாதையில் தங்களை வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டக் கூடியவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த இயேசுவின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக எத்தகைய இடர்பாடு வந்தாலும், எத்தகைய எதிர்ப்புகளை சந்தித்தாலும், அனைத்திற்கும் மத்தியிலும் ஆண்டவருக்கு உகந்ததொரு வாழ்வை நமது வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...